அம்மா=மாமியார்

சிவகுமாரின் தாய்,மனைவி மற்றும் மகள் பற்றிய பேட்டி பார்த்தேன்.
எவளவு உண்மை.
அப்பொழுது கூட அம்மா மற்றும் மகள் பற்றி மட்டும் யோசித்து விட்டு மனைவியை பற்றி யோசிக்காமல் விட்ட ஆண்மகன்கள் எத்தனையோ...
அது என்னவோ தாய் செய்தது தியாகம் மனைவி வீட்டில் வெட்டியா இருப்பவள் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்.
"அம்மா நாம சந்தோசமா இருக்கணும்னு தான் நினைபாங்க' அப்படிநு சொல்றவங்களுக்கு நேஜாமவே தெரியாதா - மகனிடம் புகார் கூறும் அம்மா ( அதுவும் மகன் தூங்க போகும் முன்பு )- மருமகள் சந்தோசமா இருக்க கூடாதுன்னு தான் சொல்றாங்கனு...?
அம்மா உண்மையை தான் சொல்ல போகிறாள் - வேணும்னு பொய் சொல்ல போறதில்லை - அப்படின்னு நம்புவது எத்தனை பேர்?
ஒரு வேலை -'உன் பெண்டாட்டி குடும்ப பெண்ணே இல்லைன்னு' சொன்ன கூட - அம்மா நம்ம நல்லதுக்கு தான் சொல்வாங்க - அவங்க ஏன் பொய் சொல்ல போறாங்கனு நினைப்பார்களோ?
இல்ல அம்மா என் பொண்டாட்டி அப்படி இல்லைன்னு சொல்ல அவங்களுக்கு மனசே வரதா?
'உன் பெண்டாட்டி ரொம்ப திமிர பேசற' - இப்படி ஒரு குற்றம் - எதற்கு - அவர்கள் சொன்னதை ஒத்து கொள்ளா விட்டால் - (அது தவறே ஆனாலும் - 'இல்லங்க அத்தை அது அப்படி இல்லை"நு மரியாதைய தான் பேசிஇருதாலும் )
''அவளோட அப்பா அம்மா இங்க வராது என்னகு பிடிக்கலை' அப்படி சொல்ரவங்கலி மருமகள் கண்ணில் வைத்து தாங்க வேண்டும் ( அம்மா நம்ம நல்லதுக்கு தானே சொல்வாங்க)
'நீங்க இங்க வந்து தங்குனது நாளே எவளவு செலவு ஆச்சு தெரியுமா? சீக்கிரம் கெளம்புங்க ' என்று மாமனார் பெணின் பெற்றோர்களை(வெறும் 3 வேலை சாப்பாட்டில் ) பார்த்து சொல்லும் போதும் - நாம் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் (அவர்கள் என்ன பொய்யா சொல்ல போறாங்க?)

10 வருடம் முதுகு எழும்பு இல்லாமல் இருந்து - பொறுக்க மாட்டாமல் - 'உங்களுக்கு நான் வேண்டுமா அம்மா வேண்டுமா?' என்று கேட்டால் - மனசில்லாமல் தான் பெற்ற பிள்ளைக்காக 'மனைவி' என்று சொல்லி விட்டு - தன் பெற்றோரை தவிக்க விடவில்லை என்றாலும் - தினம் 'இப்போ உன்னக்கு சந்தோசமா?' என்ற கேள்வி...
என்ன கொடுமை?

நாங்க கணவனின் பெறோரை தாங்க தான் நினைக்கிறோம் - அதற்கு அவர்கள் ஒத்துழைப்பும் கொஞ்சமே கொஞ்சமாவது வேண்டாமா?
நீங்க எங்களுக்கு பாத பூஜை பண்ணனும் - ஆனா நாங்க உங்களை அப்போ மெதிசிட்டு தான் இருப்போம்னு சொல்றது என்னங்க நியாயம்?
தோழிகளே என் குமுறலை எழுதி விட்டேன் ....
மன பாரம் கொஞ்சாமாவது இரங்காதா என்று...

உங்க குமுறலை எங்களுடன் தாராளமா கொட்டலாம். இங்கு எல்லோருமே நல்ல தோழிகள்தான். நீங்களும் வந்து உங்கள் சுக துக்கங்களை எங்களிடம் பகிர்ந்திட்டு போங்க. உங்க மனசு ஆறுதல் அடைஞ்சா எங்களுக்கு சந்தோஷம்தான். என்ன செய்வது ஒரு சில மனிதர்கள் இந்தமாதிரிதான். என் நாத்தனாரின் நிலையும் உங்களை போன்றுதான். சகித்து கொண்டுதான் வாழ்கிறாள். கலங்காதீர்கள் நல்ல காலம் விரைவில் வரும். இறைவனை பிராதிக்கிறேன் தங்களுக்காக

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நீங்கள் புலம்பி விட்டீர்கள் கொஞ்சமாக; இன்னும் புலம்பாமல் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் விழித்துக்கொண்டு இருப்பவர்கள் எவ்வளவு பேர்கள். தன் அம்மா தப்பு செய்தாலும்,சூனியம் வைத்தாலும்,அதனை தப்பு என்று சுற்றிக்காட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை. மருமகளுக்கு தானே என்று, அது தப்பு என்று தெரிந்தும் சரி என்று சூலுரைத்து, பரை சாற்றி தீயவற்றிற்க்குத் துணைப்போய் தன் தாய் பேய் வேளை செய்தாலும் "என் அம்மா தெய்வம்" என்று கொண்டாடும் நாத்தனார்கள் + எல்லாவற்றையும் மறந்து மறைத்து நம்முடன் வாழும் கணவன்.காரிய வாதிகள் கூட்டத்தின் மத்தியில் மனிதநேயம் காக்க நடைபிணமாக நாம். தேவையா? இப்படி ஒரு வாழ்வு?என் பங்குக்கு நானும் ஏதோ புலம்பி விட்டேன். சிவகுமார் எவ்வளவு சொன்னாலும் செவிடன் காதில் சங்குதான்.இது ஆராய்ந்து பார்க்கும் 6வது அறிவுள்ள, நீதி நேர்மையுடைய மனிதர்களுக்காக சிவகுமார் சொன்னது. இப்படிப்பட்ட மனிதர்கள் காண்பது இப்பொழுது மிகமிக குறைவு.
தமிழி அன்புடன்

என்ன சொல்ல என்று தெரிய வில்லை.
உங்கள் வாழ்கை நன்றாக மாறும்.கவலை வேண்டாம்.கடவுளை நம்புங்கள்.

மனக்கஷ்டம் தான்.புரிகிறது. காலம் மாறும்.கவலை வேண்டாம்,நம்புவோம்,நம்பினோர் கைவிடப்படுவதில்லை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கடலை மாவு வீட்டிலேயே செய்வது எப்படி?யாராவது தெரிந்தால் சொல்லி உதவுங்களேன் ப்லீஸ்!நாங்கள் இருக்குமிடத்தில் இவைகள் (நம் உணவு பொருட்கள்) இல்லை! என்னிடம் கடலை இருகிரது எப்படி மாவாக்குவது என்றுதான் தெரியவில்லை!
தயவுசெய்து யாராவது சொல்லுங்கலேன்!

have a great day

வணக்கம்

கவலைப் படாதீர்கள். உங்களுக்கென ஏதும் தனித்திறன்கள் இருந்தால் (கைத்தொழில், உபயோகமான பொழுதுபோக்கோ அல்லது வேலையோ ) வீட்டில் இருந்து செய்ய முடியுமெனில், செய்யுங்கள். மனதிற்கு ஆறுதலாக இருக்கும் கண்டிப்பாக.. .. எல்லா உணர்வுகளையும் (மனக்கஷ்டம்) பேலன்ஸ் செய்ய இது மாதிரி மனதை ஒரு வேலையில் தீவிரப் படுத்திப் பார்க்கலாம்..
மன்னிக்கவும். தவறாக எண்ண வேண்டாம்..

நானும் உங்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உங்கள் பொருமை,அன்பு,நிதானம் வெகு விரைவில் உணரப்படும். கடவுளிடம் விட்டுவிடுங்கள் தோழி....
அன்பையே வாரி வாரி இறைப்போர்க்கு சோதனை வருவது இயற்கையே.. அத்தனை அன்பும் திரும்பி வட்டியும்,முதலுமாய் உங்களுக்கு வரும். அன்பே உருவாய் அனைவரும் மாறுவர்.

அன்புடன்,
ஆயிஸ்ரீ

மாமியாரை அம்மாவா நினைங்கன்னு ஈசியா சொல்றவங்க நிறைய பேர். அவங்க பேசற மாதிரி அம்மா பேசமாட்டாங்க. அம்மாவிடம் அன்பை உணர்கிறோம்.ஆனால் மாமியாரிடமோ அதிகாரத்தை உணர்கிறோம். அன்பு வேறு அதிகாரம் வேறு எப்படி இரண்டையும் ஒன்றாக கருதுவது.
புகுந்த வீட்டில் உள்ள அனைவருடைய உணர்வுகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.ஆனால்
நாம் மட்டும் உணர்வற்றவர்களாய்

வேதனைப்படும் உள்ளங்களுக்கு இப்போது இதுதான் தாரகமந்திரம்

உண்மை... "அம்மா" என்று எண்ணியே, காலடி பதிக்கிறோம்.... அவர் "அத்தை" மட்டுமே என்பது நாள் போக போகவே புரிகிறது. "தாய்க்கு பின் தாரம்" என்ற அருமையான விஷயத்தை "தாய்க்கு பின் தான் தாரம்" என்று சொல்லும் கணவர்களும் உண்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புகுந்த வீட்டில் உள்ள அனைவருடைய உணர்வுகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.ஆனால்
நாம் மட்டும் உணர்வற்றவர்களாய்
மிகச் சரியான வார்த்தைகள்

- nisha

நிஷா

மேலும் சில பதிவுகள்