தேதி: November 7, 2008
ஒரிகாமி கலர் பேப்பர் - 5 (தேவையான நிறங்கள்)
க்ளூ
ப்ளாக் கலர் ஸ்கெட்ச்
தெர்மோகோல் - ஒரு சிறிய துண்டு
நாயின் தலை பாகம் செய்ய:
பேப்பரின் அளவு 15 செ.மீ X 15 செ.மீ எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முதலில் சதுரமாக உள்ள பேப்பரை மூலை விட்டத்தில் மடித்து, முக்கோண வடிவில் செய்து கொள்ளவும்.

பிறகு கீழ்முனையிலிருந்து ஒரு இதழை மட்டும் மேல் புறமாக சிறிய முக்கோணம் போல் வருமாறு மடிக்கவும்.

வலது ஓரத்தில் இருக்கும் முனையை உட்புறமாக படத்தில் காட்டியுள்ளபடி மடித்துக் கொள்ளவும்.

மடக்கிய அதே முனையை மையமாக வைத்து படத்தில் காண்பித்துள்ளது போல் நாயின் காது வடிவத்தில் செய்துக் கொள்ளவும்.

இதேப்போல் மற்றொரு பக்கமும் மடித்துக் கொள்ளவும். பின்னர் கீழ் முனையில் உள்ள மற்றொரு இதழை மேல் புறமாக ஒரு சிறிய முக்கோண வடிவில் மடிக்கவும்.(வாய் பகுதிக்காக)

இப்போது இரண்டு பக்கவாட்டு பகுதிகளும் ஒன்றாக சேருமாறு உட்புறமாக மடிக்கவும்

மேலே உள்ள கோடிட்டு காட்டியுள்ள கூரிய முனையை தலையின் மேல் பகுதிக்காக உட்புறமாக படத்தில் உள்ளவாறு மடிக்கவும்.

பின் ஸ்கெட்சால் இரு புறமும் கண் வரைந்து கொள்ளவும். இப்போது தலை பாகம் ரெடி.

உடல் பாகம் செய்ய:
முதலில் சதுரமாக உள்ள பேப்பரை மூலை விட்டத்தில் முக்கோண வடிவில் மடித்து மீண்டும் பழைய வடிவில் விரித்து விடவும். பிறகு சதுர பேப்பரின் இடது மற்றும் கீழ் பக்கங்களை 1.5 செ.மீ அளவுக்கு மடித்துக் கொள்ளவும்.

பிறகு அதன் இடது கீழ்முனையை முக்கோண வடிவில் வெளிப்புறமாக இழுத்து மடிக்கவும்.

பின் அதை படத்தில் காட்டியவாறு வெளிப்புறமாக மடிக்கவும்.

அதன் பின்னர் அப்படியே மூலை விட்டத்தில் மடிக்கவும்.

ஒரு சிறிய தெர்மோகோல் துண்டை அடிப்பகுதியில் ஒட்டவும். நாயின் உடல் பாகம் தயார்

இப்போது தலைபகுதியையும் வால் பகுதியையும் இணைத்து விடவும். அழகிய காகிதத்தில் செய்த நாய் தயார்.

இதேப்போல் 14செ.மீ X 14 செ.மீ & 8 செ.மீ X 8 செ.மீ ஆகிய அளவுகளிலும், விரும்பிய நிறங்களில் செய்து கொள்ளவும்.

அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்கள், காகிதத்தை கொண்டு அழகிய நாய் வடிவம் தயாரிப்பது எப்படி என்பதை இங்கே செய்து காட்டியுள்ளார்.

Comments
மகிஸ்ரீ!!
சூப்பர்!!நல்ல அழகா புரியும்படி செய்து காண்பித்து இருக்கிங்க.keep it up
மகிஸ்ரீ
மகிஸ்ரீ சுலபமாக அழகான வால் ஹேங்கிங்.எங்களுக்கும் சொல்லிக்கொடுத்ததற்கு Thanks
ஒரிகமி & கிரிகமி
அன்பின் மஹிஸ்ரீ, மிகவும் அழகாக இருக்கு. வாழ்த்துக்கள். என்னிடமும் ஒரு ஒரிகமி & கிரிகமி புத்தகம் இருக்கு. எனக்கும் இவை விருப்பம். நான் சிறிதாக செய்து வாழ்த்து அட்டைகளில் ஒட்டுறனான். 3D வடிவம் கிடைக்கும். வால் ஹாங்கிங் கூட செய்யலாம். உங்களுக்கு Iris Folding, Tea-bag folding ஆர்வம் உள்ளதா? ஒரிகமியில் இருந்தால் அதிலும் இருக்கும் என்று கேட்டேன். இன்னும் செய்து அனுப்புங்கோ.
-நர்மதா :)
hello sri geetha
kalakara po....
do u remember me
Vaazhga Valamudan!
ஹாய் மேனகா,மோனி,நர்மதா
உங்கள் அனைவரின் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.நான் தற்போது இந்தியாவில் உள்ளேன்,அதனால் தான் என்னால் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை.
நர்மதா
நீங்கள் கூறியிரிக்கும் Iris folding,tea-bag folding பற்றி எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் நேரம் கிடைக்கும் போது சொல்லி கொடுங்கள். உங்கள் சுட்டி எப்படி இருக்கிறார்.கேட்டதாக கூறவும். .
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
ஹாய் ராதிகா
நன்றி.உங்களை யார் என்று எனக்கு சரியாக நியாபகம் வரவில்லை.மன்னிக்கவும்!!!!!!!!
Pls give me some clues.
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
Hello srigeetha
This is Radhika.G from st.mary's (12th B.)
Where are u n howz ur life going. i have already introduced myself in one of ur receipe.(Egg fried rice)
I hope u remember me now.
happy to seeing u in arusuvai..
bye..
Radhika G
Vaazhga Valamudan!
Hi Radhika
How r u? U mean Indhu & Radhika ?? I was really surprized to see ur message in arusuvai.com.Then i will get ur mail ID from admin. Will chat sometime.
Dear admin
Pls send Radhika's mail ID to me with her permission.
Srigeetha Mahendran
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
haai sree geetha.
sure u can it from admin,we can chat later. I need ur mail ID too.yes i am indhu's friend only..
Dear admin,
May i know srigeetha's mail ID?
Radhika G
Vaazhga Valamudan!
Vaazhga Valamudan!
மஹி
ஹாய் மஹி,
உங்கள் குறிப்பைப் பார்த்து நாய் ஒன்று செய்தேன். அழகாக வந்தது. படம் பிடித்து அனுப்பியிருக்கிறேன். (கடதாசி நாய் வேகமாக ஓடாது. அதனால் படம்) ஆறுதலாக வந்து சேரும். ;-)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
காகித நாய்
இந்த செய்முறையை பார்த்து திருமதி. இமா அவர்கள் செய்த காகித நாயின் படம்
<img src="files/pictures/orgami dog(shri geetha)9723.jpg" alt="picture" />
Dear admin, May i know
Dear admin,
May i know srigeetha and velvizhi's mail Ids..
They are my friends.....
Vaazhga Valamudan!
Vaazhga Valamudan!
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta