லெட்டூஸ் பொரியல்

தேதி: November 8, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

லெட்டூஸ் இலை - 15 - 20 எண்ணிக்கை
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு மற்றும் எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு


 

லெட்டூஸ் இலைகளை கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
வெங்காயம் மற்றும் பச்சைமிளகாவையும் சிறியதாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு போட்டு பொரிந்தவுடன், கடலைப் பருப்பை சேர்க்கவும்.
கடலைப்பருப்பு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சைமிளகாய் இவைகளை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் வதங்கியவுடன் அரிந்து வைத்திருக்கும் லெட்டூஸ் இலைகளை சேர்க்கவும்.
தண்ணீர் சுண்டும் வரைவிட்டு பின் இறக்கிவிடவும்.


வெங்காயம் தூக்கலாக நம் இந்திய முறைப்படி இப்படி செய்து சாப்பிட நல்ல சுவையுடன் நன்றாக இருக்கும். பொதுவாக, லெட்டூஸ் இலைகலை அப்படியே சாபிடாலாம். கொரியா போன்ற நாடுகளில் லெட்டூஸ் இலைகளை meat& chicken வைத்து மடித்து சாப்பிட பயன்படுத்துகிறார்கள்.

மேலும் சில குறிப்புகள்