தேதி: November 8, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (மிக்ஸியில் அடித்தது)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு
சீரகம்
உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு
கறிவேப்பிலை
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி பச்சை வாசம் போய் குழைய ஆரம்பித்ததும், மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
சூடாக இருக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்றது.
Comments
arputhamana suvai
migavum elidhaga seithu mudhithu nalla suvai
மிக்க
மிக்க நன்றி தோழி. இது என் அம்மா செய்ய கூடியது. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் வனிதா
இன்று மதியம் இதை தான் செய்தேன்.நான் எப்பவும் தக்காளி அரைக்காம தான் போடுவேன்.இன்று அரைத்து போட்டேன்.நன்றாக் இருந்ததுபா.தங்களின் குறிப்புக்கு நன்றி.
ஹாய் வனிதா
இன்று மதியம் இதை தான் செய்தேன்.நான் எப்பவும் தக்காளி அரைக்காம தான் போடுவேன்.இன்று அரைத்து போட்டேன்.நன்றாக இருந்ததுபா.தங்களின் குறிப்புக்கு நன்றி.
நன்றி
மிக்க நன்றி சுகன்யா. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா