இஞ்சி சாதம்

தேதி: November 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிரிஞ்சு இலை - ஒன்று
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 4
ஏலக்காய் - 2
வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
தக்காளி - ஒன்று (மிக்ஸியில் அடித்தது)
கொத்தமல்லி
புதினா
கறிவேப்பிலை
அரிசி - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
அரைக்க :
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய் வற்றல் - 3
பூண்டு - 5 பல்
சோம்பு - கால் தேகரண்டி
முந்திரி - 5


 

அரைக்க வேண்டிய அனைத்தையும் ஒன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சு இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரியவிடவும்.
இதில் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் அடித்துவைத்த தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்பொழுது அரைத்த இஞ்சி விழுதையும் சேர்த்து பச்சை வாசம் போக நன்றாக வதக்கவும்.
இதில் கழுவிய அரிசி, உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி வழக்கமாக சாதம் சமைப்பது போல் சமைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

தங்கச்சி,
வித்தியாசமாக எதையாவது செய்யலாம் என்று தேடி தேடி இந்த குறிப்பை கண்டுபிடித்தேன் ;-)

வதக்கும் வேலை தவிர செய்வது மிகவும் சுலபம் :-) சுவையும் அருமை... :-)

ஒரு சின்ன சந்தேகம்.... இஞ்சி சாதம் என்பதால் இஞ்சி flavor கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என நினைத்தேன்... ஆனால் நான் சேர்த்த இஞ்சி அளவிற்கு இஞ்சி flavor சாதாரணமாக தான் இருந்தது... அப்படி தான் இருக்குமா? இல்லை என்றால் ஒரு, ஒரு இன்ச் இஞ்சி சரியாக இருக்குமா? இல்லை இன்னும் அதிகம் சேர்க்க வேண்டுமா??

நேரம் கிடைக்கும் சொல்லுங்கள்... :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

செய்தாச்சா... குட் குட். ரொம்ப லேட் ரிப்ளை... கோச்சுக்காதீங்க ;) பேக்கிங் பிசியில் நினைவில் நிக்க மாட்டங்குது.

இஞ்சி ஃப்ளேவர் இருக்கணும். அளவு 2 இன்ச் அளவு போடலாம் அக்கா. நீங்க பயன்படுத்தும் இஞ்சி பொருத்தது... நான் இங்க வாங்குற இஞ்சி எல்லாம் வாசமும் இருக்காது ஒன்னும் இருக்காது... சைனால இருந்து வருது... வெளிய பார்க்க தான் இஞ்சி. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இரண்டு நாட்கள் முன்பாக சமைத்துப் பாத்தேன் வனி. சுவையாக இருந்தது. இமாவிற்கு சற்றுக் காரமாக இருக்கும் என்பது முன்பே எதிர்பார்த்ததுதான். ஆனாலும் குறிப்பை மாற்றாமல் அப்படியே சமைக்க விரும்பினேன். வீட்டிலுள்ளவர்களுக்குக் காரம் சரியாக இருந்தது.

‍- இமா க்றிஸ்