27 வது பாகமும் நிறைந்து விட்டது இது 28 பாகம் இங்கு வாங்க

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

பழைய பதிப்பு 100 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் 27யில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... இதில் மட்டும்தானே சின்ன பிள்ளையாட்டம் சண்டை போட விளையாட,ஜாலியா பேச முடியும் வாங்கப்பா வாங்க்கா எல்லோரும் வந்து மனம் விட்டு சிரித்து பேசிட்டு போங்க. நான் ஊருக்கு போயிட்டாலும் நீங்க அரட்டைய இதில் தொடருங்கப்பா

தனிஷா

சுகன்யா அப்ராவுக்கு 1 வயது முடிந்து 40 நாள் ஆகுது. அவளுக்கு அல்மரை பால்தான் எடுத்து கொண்டு போகலாம்னு இருக்கேன். அதை நல்ல காய்ச்சி கொண்டு போகலாம்ல. ஒன்னும் ப்ரச்சனை இல்லைதானே. அப்ராவுக்கு ப்ளைட் ட்ரஸ் புளூ ஜீன்ஸ், ரோஸ் டாப்ஸ்.

கவி என்ன கலாய்க்க ஆரம்பிச்சாச்சா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மீனா நான் நல்லா இருக்கேன். நீங்க சாப்டாச்சா?

தனீ அfரா தூங்கி எழுந்திருச்சாசா,
தனீ டிராவல்ல குழந்தைகளுக்கு சுகன்யா சொன்ன மாதிரி பால் பவுடர் எடுத்துட்டு போறதுதான் பெஸ்ட்பால் காய்ச்சி எடுதுட்டு போக வேண்டாம் ஏன்ன கெடறதுக்கு சான்ஸ் இருக்கு, குழந்தைங்க விஷமில்லையா அதன்னா பால் பவுடரே எடுதுட்டு போங்க எப்படியும் செக்கிங் ட்ராவெல் எல்லாம் சேர்த்து 6,7 மணி நேரமாகுமில்லையா,பெட்டர் பால் பவுடர்.ஒரு சில குழந்தைகள் பால் பவுடர் குடிச்சி பழக்கமிருக்காது அதனால புதுசா குடுத்தா குடிக்காது வீட்டில 2 நாள் பால் பவுடர் குடுத்து பழக்கலாம்.இது சாம்மோட டாக்டர் சொன்னது.

மீனா போன திரட்ல தொடர்ந்து பேச முடியல சாம் ரொம்ப தொல்ல பன்னான் அதனால் போய்ட்டேன், ஒரு வழியா உங்க ஹஸ் இட்லிலயிருந்து தப்பிச்ட்டாரா?

ஜாஸ்மின் எப்படி இருக்கீங்க,தேவா சொன்ன மாதிரி ஜூனியர் ,சீனியர ராகிங்க பன்றீங்க(நீங்கதானா அந்த சின்ன பொண்ணுனு கேட்டீங்கல்ல அத சொன்னேன்).

பால்பவுடரும் வச்சிருக்கேன். அப்ராவுக்கு வீட்டிலையுமே ஒருநேரம் பசும்பால் இன்னோரு நேரம் பவுடர்பால்தான் கொடுப்பேன். அப்போ ப்ளாஸ்கில் வென்னீர் கொண்டு போறேன். அதான் நீங்க இருவரும் சொல்வதை பார்த்தா அதான் பெஸ்ட்னு தோணுது. கவி ப்ரியா இப்போ. இன்னைக்கு சர்ச்சுக்கு போயிட்டு வந்தாச்சா.

ஜாஸ்மின் எப்படி இருக்கீங்க. மீனா தோசை எப்படி இருந்தது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எப்படி இருக்கிங்க?ராக்கிங்களாம் இல்லை சும்மா விலையாட்டா சொன்னேன் சீரியஸா எடுத்துக்க வேண்டாம் பீளிஸ்.:-)

தனீ
சர்ச்சுக்கு போய்ட்டு வந்தாச்சு, இப்ப வெளில போகனும்.

ஜாஸ்மின் இதுக்கே பயந்துட்டீங்களா,இல்லப்பா நானும் சும்மதான் கேட்டேன் .பிளீஸல்லாம் வேண்டாம் அதை நீங்களே வெச்சுக்குங்க :-)

நல்ல வேளை பால் பவுடரும் பழகி வச்சிருக்கீங்க.ஏன்னா ஊருக்கு போற நேரத்தில் புதுசா எதுவும் கொடுத்து பழக்க கூடாது,பழக்கவும் முடியாதுபா.ஏதாவது ஏடாகூடாம ஆச்சுனா எதுனாலன்னு தெரியற்துக்கே ரொம்ப கஷ்டமாகிடும்.

ஓகே பா உங்க அப்ராவோட ட்ரெஸை கற்பனையில் யோசிச்சு பார்த்தேன்.நல்ல காம்பினேஷன்,ரோஸ் & ப்ளூ.

புதுவரவான ஜாஸ்மின்,சுபத்ரா வாங்கப்பா,வந்து கலக்குங்க.

அப்புறம் மீனா,எப்பவுமே சமையலை ஆர்வத்தோட சமையுங்க.சொதப்பினாலும்,டேஸ்ட் சூப்பரா வரும்.நாம சில ரெசிப்பியை ஆர்வமில்லாம ஏனோதானோன்னு சூப்பரா செஞ்சாலும்,அது சொதப்பிடும்.தத்துவம்பா தத்துவம்!!உண்மையான தத்துவம்பா

தனிஷா நான் நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கிங்க?அப்fரா நல்லா இருக்கா?

சுகன்யா அக்கா நான் வந்துட்டன் கலக்குரதுக்கு கரண்டியொட வந்துருக்கன்.

அக்கான்னு சொல்லி என்னை பெரிய மனுஷியாக்கி விடாதீங்க,பேர் சொல்லியே சும்மா கூப்பிடுங்க.

ஏன்பா அந்த கரண்டிய விடமாட்டீங்க போலிருக்கே!பேசி கலக்குங்கப்பான்னா கரண்டிய எடுத்துட்டு வரீங்க!

மேலும் சில பதிவுகள்