தேதி: November 10, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
1. முட்டை - 4 (வேக வைத்து இரண்டாக வெட்டியது)
2. கடுகு - 1/4 தேக்கரண்டி
3. சீரகம் - 1/4 தேக்கரண்டி
4. உளுந்து - 1/4 தேக்கரண்டி
5. கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
8. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
9. உப்பு - தேவைக்கு
10. வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
11. தக்காளி - 1 (நறுக்கியது)
12. கருவேப்பிலை
13. கொத்தமல்லி
14. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சிவந்ததும் தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிரிது ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்ததும் முட்டையை சேர்த்து கிளரி, எண்ணெய் திரண்டு வரும்வரை அடுப்பில் வைக்கவும்.
பெரிய வெங்காயத்துக்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவை கூடும். இது வறுவல் போல இருக்கும், சிறிது மசாலா ஒட்டிக்கொண்டு. குழம்பு போல் இருக்காது. எலுமிச்சை சாதம், புளி சாதம், சாம்பார் சாதத்திற்கு நல்ல பக்க உணவு.
Comments
muttai masala
ingi poondu paste serthal innum gama gamanu suparaa irukkum
kandippaa try pandraen....
kandippaa try pandraen.... thanku. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி வாணி
முதல் முறை நீங்க எனக்கு பதில் அனுப்பியதில் மகிழ்ச்சி.உங்களுக்கு மெட்டி அணிவதின் நோக்கம் தெரிய வேண்டுமா?
ஏன் திடீரென்று இந்த கேள்வி தோழி???
கேள்விப்பட்டிருக்கிறேன்.... ஆனாலும் அது பொருந்துவதில்லை.... முன்பெல்லாம் திருமணமான ஆண்கள் காலில் மெட்டியும், பெண்கள் கழுத்தில் தாலியும் இருக்குமாம். காரணம், ஆண்கள் தலை நிமிர்ந்து நடக்கும்போது எதிரே தென்படும் பெண் கழுத்தில் திருமணமானதர்க்கு அடையாளமும், பெண் தலை குனிந்து நடப்பதால் எதிரே வரும் ஆண் கால்கலில் திருமணமான அடையாளமும் கண்ணில் பட அனிந்ததாக.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பயந்துட்டீங்களா தோழி!!!
சும்மாதான் கேட்டேன். எனக்கு தெரிந்ததை உங்களோடு பகிர்ந்துகொள்ளத்தான்.
பெண்களின் கர்ப்ப நரம்புகள் கால் விரல்களில் இணைந்துள்ளதாம்.அது தேய்ந்துவிடாமல் பாதுகாப்பாக இருக்கத்தான் நமது முன்னோர்கள்(பெண்கள்) மெட்டி அணிந்தனராம்.
வனிதா
வனிதா மதியம் சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மசால முட்டை செய்தேன் நன்றாக இருந்தது நன்றி வனிதா.
சந்தோஷமா இருக்கு கவி.s
ஆகா கவி... நீங்க தான் 2 குறிப்புக்கு பின்னுட்டம் குடுத்திருக்கீங்க. அதுக்கே உங்களுக்கு பெரிய நன்றி சொல்லனும். ரொம்ப சந்தோஷமா இருக்கு கவி. நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
முட்டை மசாலா..
வனிதா, இந்த முட்டை மசாலா செய்தேன் நல்ல வாசனை, என்னால் சுவைபார்க்கமுடியாதே என பொறாமையாக இருக்கு. நீங்கள் உங்கள் குறிப்புக்களில் பெரும்பாலும் தக்காழி சேர்த்துள்ளீங்கள், நான் அவற்றை தவிர்த்தே செய்தேன். எப்போதாவது தக்காழி உபயோகிப்பதுதான். மசாலாவிற்கு கொஞ்சம் தேசிக்காய் புளி சேர்த்தேன். இன்னும் சாப்பிடவில்லை ஒருவரும். நிட்சயம் வரவேற்புக் கிடைக்கும்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி அதிரா
மிக்க நன்றி அதிரா... ;) சாபிட்ட பின் வரவேற்பு இருந்துசான்னு சொல்லனும். ஹிஹிஹீ. நான் நிறைய தக்காளி பாவிப்பேன். தக்காளி உடம்புக்கு நல்லதாச்சே. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
வனிதா சனி கிழமை இந்த முட்டையையும் செய்தேன்,இந்த டேஸ்ட் அவருக்கு ரெம்ப பிடித்தது,ஆனால் காரமா இருந்தது,அன்னிக்கு மூனு விதமா முட்டை செய்தேன் உங்க குறிப்பை பார்த்து,ஒவ்வொன்னும் ஒரு கலரா இருந்தது,3 டேஸ்ட்டும் வித்தியாசமா இருந்த்தது,ஆக மொத்தம் எல்லாமே சூப்பர்
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
வீட்டில்
வீட்டில் இருப்பதே 3 பேர்.... 3 வகை முட்டையா ஒரே நாளில்?! மிக்க நன்றி ரேணுகா. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஆமாம் வனி
ஆமாம் வனிதா,இந்த வாரம் வார நாட்கள் அவங்க வரவே இல்லை,அதனால் நான் சமைக்கவே இல்லை,லீவு அன்று எல்லாத்தையும் சமைக்க நினைத்தேன்,6 முட்டை வேகவைத்து ஒன்னுக்கு 2ன்னு 3 குழம்பு வைத்துவிட்டேன்,
என் பையன் வயசு கேட்டீங்கல்ல இன்றுடன் 3 வயது 4 மாதம்,24 ஆம தேதி வந்தாலே அவன் பிறந்த நாள் ஞாபகம் தான்,
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா