தாய்ப்பால்
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். அந்தந்த தாயின் பால், அவள் பெற்ற சிசுவிற்கு தேவையான ஊட்டச்சத்தினையும், நோய் தடுப்பு சக்தியையும் தருகிறது. ஆகையினால் சிசு பிறந்தபின் அந்த குழந்தை சீராக வளர, முதல் ஆறு மாதங்களுக்கு தாயின் பால் மிகவும் தேவைப்படுகிறது. தாய் மடியை ஏற்றுக் கொண்டு பால் பருகும் சிசுவின் முகம், சீரான வடிவாக வளர, தாய்ப்பால் அருந்துவது, வளரும் தாடைகளுக்கு நல்ல பயிற்சியை அளிக்கிறது.
இதனால் இயற்கையாகவே வளரும் குழந்தைக்கு அழகிய வதனம் அமைகின்றது. பற்களும் சீராக அமையும்.
ஆனால், இன்று தாய்ப்பால் தவிர்த்து, புட்டிப்பால் கொடுக்கிறார்கள். இதனால் முகத்தாடைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும், வளரும் பற்கள் நோய் வாய்ப்படவும், சீரற்ற பற்கள் உருவாகவும் வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது.
தாய்ப்பால் அருந்துவதால், தாய்சேய் அன்பு உறவு பாலம் ஏற்பட்டு நல்ல மன சிந்தனையுள்ள சிறார்களை சமூகத்தில் உருவாக்க முடிகிறது.
Mrs. Rafi மேடம்
Mrs. Rafi மேடம் நீங்கள் செல்வது உண்மைதான். தாய் பால் மிக சிறந்த ஊட்டச்சத்து. மிகமிக தூய்மையானது. அந்த காலத்தில் தாய் பால் ஊட்டும்பெது தாய் பற்றையும் தாய்நாட்டின் சிரப்பையும் செர்த்து ஊட்டினர். ஆனால் இந்த காலத்தில் நாட்டிர்க்கு நல்ல மனிதனை உருவாக்கின்ர்னர்
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
to stop feeding
ஹெலொ மேடம்,
என் பெயெர் சாந்தி.என்னுடைய குழந்தைக்கு 1 வயது. இப்பொழுது எனது எடை 79.எனவே எடையை குறைப்பதற்கு நான் பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்.
Santhi