இஞ்சியின் இயல்பு

1.இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிட்டால் உணவு எளிதில்
ஜீரணமாகிறது.

2.இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு.மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும்.

3.பித்தம் அதிகமாகி தலைசுற்றல்,விரக்தி ஏற்படுவதுண்டு.சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.

4.பசி எடுக்கதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அரைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

5.மலச்சிக்கல்,வயிற்றுவலி,ஏற்பட்டால் இஞ்சிச்சாற்றில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.

நான் புதிது. என்னையும் உங்கல் ஊடன் ஏர்கவம். இஞ்சி மிக மருத்வ குணம் மிக்கது. உங்க TIPES மிக மிக அரும்Mஈ . தவறூ இருந்தா மன்னிக்கஊம். Mrs. Rafi.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

டீ -யில் இஞ்சி ஏலம் சேர்த்தால் உடலில் உஷ்ணம் அதிகமாகுமா? எனக்கு இப்பொழுதெல்லாம் டீ குடித்தால் வயிறு எரிச்சல் வருகிறதே ஏன்?எனக்கு டீ- ரொம்ப பிடிக்கும்.இப்ப குடிக்கவே பயமா இருக்கு. இஞ்சி சேர்ப்பதாலா என்று தெரியவில்லை.இதற்கு உங்களின் அறிவுரை கிடைக்குமா...

சிலருக்கு வெறும் பாலை (தேயிலை இல்லாமல்)மட்டும் அருந்துங்கள்.அதற்கு பின்னும் குறைய வில்லை எனில் இஞ்சி சேர்க்காதீர்கள்.....

நடக்கும் என நம்பினால்
எதுவும் நடக்கும்.......

Salaam

தோழி... இஞ்சி சேர்ப்பதர்க்கும் அளவு உண்டு. ஈஞ்சி அளவுக்கு அதிகமானால் அல்சர் ஏற்படும். ஏற்கனவே அல்சர் இருப்பவரும் இஞ்சி தவிர்பது நல்லது. இஞ்சி சிறிது உணவில் சேர்ப்பதால் எண்ணெய், நெய் சேர்க்கும் உணவுகள் சுலபமாக ஜீரனமாக உதவும். டீ'யில் சேர்ப்பதால், சலி, தொண்டை கரகரப்பு போன்றவை தீரும். ஆனால் இஞ்சி தினமும் சேர்ப்பது அத்தனை சரி அன்று. பூண்டும் சரி, இஞ்சி'யும் சரி, அலவோடு சேர்க்கவும். இரண்டும் உடல் உஷ்னத்தை அதிகறிக்கும், வயிற்றில் புன் இருந்தால் வலி ஏற்படுத்தும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்பொழுது இஞ்சி சேர்ப்பதை குறைத்து வருகிறேன். வனிதா நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க??? விரும்பினால் எனக்கு தெரிவியுங்கள்...

சொந்த ஊர் சென்னை. வசிப்பது சிரியா நாட்டு, தலைநகரம் டமாஸ்கஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றியதிற்கு...உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால்தான் நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.

முதல்ல பிடிக்கும்'னு சொன்னீங்கலே.... அதுக்கு பெரிய நன்றி. :) ஆனா... என்னையா ?! இது என்னடா ஆச்சர்யம்..... உங்களுக்கு என்னை தெரியவே தெரியாதே..... அப்பரம் எப்படி பிடிச்சிது?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதமுதலா... உங்களுடைய முட்டைமசாலவுக்குதான் பின்னூட்டம் அனுப்பியிருந்தேன்.அதற்கு நீங்க பதிலும் அனுப்பியிருந்தீங்க.அதிலிருந்து உங்களுக்கு daily ஒரு msg-ஆவது அனுப்பனும்னு தோணும்.

ஆங்..... நம்ம மெட்டி பார்டி....!!! ம்ம்.... எப்படியோ, எனக்கும் இந்த இணையதளத்தில் ஒரு தோழி.... மிக்க மகிழ்ச்சி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்