சமைத்து அசத்தலாம்.... எல்லோரும் வாங்கோ.. பிளீஸ்!!!!

அன்புத் தோழிகளே....

எனக்கொரு நீண்ட ஆசை நெடுநாளாகவே மனதில் இருக்கிறது, நேரமின்மையால் நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இன்று எப்படியும் ஆரம்பித்திட வேண்டும் என்ற முடிவோடுதான் ஆரம்பிக்கிறேன். தயவு செய்து இதில் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், அதிகம் எத்தனையும் செய்யலாம். நாளை புதன் கிழமை ஆரம்பிப்போம், அடுத்த புதன்கிழமை அடுத்தவரின் குறிப்புக்குச் செல்வோம். இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ அதிராவுக்காக இல்லை, ஏதோ எம்மால் முடிந்த ஒரு ஊக்குவிப்புத்தான். முன்பும் இப்படி தொடங்கிப் பின் பாதியில் நின்றுபோனது. இதையாவது எல்லோரும் மனம் வைத்தால் தொடர்ந்து செயல்படுத்தலாம்.

யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். நாளை ஆரம்பமாவது ஜலீலாக்காவின் குறிப்புக்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

எல்லோரும் வாங்கோ
யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் எனச் சொல்லுங்கோ, நாளைக்கு ஆரம்பிப்போம்.

கவி எஸ், கவிசிவா, தனிஷா, விஜி சத்யா, விஜி மலை, ரஜனி, அருண்பாலா, ஆயிஸ்ரீ, இலா, இந்திரா, சுகன்யா,ஆசியா உமர், செல்வியக்கா, சுரேஜினி, நர்மதா, ஜலீலா அக்கா, தேவா, மேனகா, தளிகா, மர்ழியா, மாலதியக்கா, ஸாதிகா அக்கா, மனோஹரி அக்கா, சுபா, ஹர்ஷினி, ஹா...ஹா.. ஹாஷினி, சுஹைனா, மீனா, ரிஷா, தானு, ஜஸ்மின்,சந்தோ, ஜெயலஸ்மி, ஹாயத்ரி, மனோ அக்கா, ஜெயந்தி மாமி, சீதா ஆன்டி, கஸ்டப்பட்டு தேடித் தேடிப் பெயரெடுத்துப் போட்டுள்ளேன், தயவு செய்து யாரையாவது தவறவிட்டிருந்தால் கொஞ்சம் சுட்டிக்காட்டுங்கோ இணைத்துக்கொள்வோம். அத்துடன் என்னையும் மன்னிக்க வேண்டுகிறேன்.

வீட்டில் தினமும் சமைப்பதுதானே, அதைக் கொஞ்சம் குறிப்புக்களைப் பார்த்துச் செய்வோமே.... கை கொடுங்கப்பா ஓடிவாங்கோ யாரெல்லாம் ரெடி. தலைப்பைப் பார்க்கவில்லை என்றுமட்டும் சொல்லிடாதீங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா, இதோ வந்துட்டே இருக்கேன்.

ஜலீலா மேடம் குறிப்பிலிருந்து, நாளைக்கு இரவு டிபனுக்கு கோதுமை தோசை - சரியா, .

செய்து, எல்லாரும் சாப்பிட்ட பின் பின்னூட்டம் தருகிறேன்

அன்புடன்

சீதாலஷ்மி

அதிராக்கா, உஙகளுக்கு நான் அனுப்பின பரிசு கிடைச்சுதா?.
அதாக்கா, காராமணி வடை.

இன்னும் வந்து சேரலையா. ஒகே, ஒகே, அட்மின் ரொம்ப பிஸின்னு நினைக்கிரேன். மெதுவாகவே அனுப்பட்டும்.

இப்படிக்கு
இந்திரா.

indira

நீங்க ஆரம்பிச்ச தலைப்பை வரவேற்கிறேன்பா.ஆனால் நீங்க யாரெல்லாம் கலந்துக்குறீங்கன்னு கேட்டு இருக்கீங்க.நான் இதில் இவரது குறிப்பை இன்றைக்கு செய்ய போகிறேன் என்று இங்கு பதிவு செய்துவிட்டு(சும்மா பேருக்கு)எனக்கு அப்போதைக்கு(டைம் இல்லாம)மூட் மாறி சுலபமா சாம்பாரோ,குழம்போ செஞ்சுட்டேன்னா!எனக்கு மனசு கேக்காது.

இங்க போடுவதை நாம் உண்மையிலேயே வீட்டிலும் அன்றைக்கு செய்திருக்கனும்.சும்மானா பொய்யா ஒரு பதிவு போட எனக்கு விருப்பமில்லைபா,கோவிச்சுகாதீங்க.

நான் அறுசுவையில் ஜலீலாவோட குறிப்பை பார்த்து கூட சமைச்சு அவங்களுக்கு பின்னூட்டம் கொடுத்திருக்கேன்.அது என்னைக்காவது தான் அதுமாதிரி இந்த தளத்தை பார்த்து செய்ய தோணும்(அன்னிக்குன்னு பார்த்து அறுசுவை ஓபன் ஆகாம பழிவாங்கும் அது வேறு விஷயம்).தினசரின்னா எனக்கு கொஞ்சம் கஷ்டம்பா.

நான் இப்படி பதிவு போட்டதுக்கு தப்பா எடுத்துக்காதீங்க!என் மனசில் தோன்றுவதை சொன்னேன்.முன்ன ஆரம்பிக்கப்பட்ட இழையில் ஒருத்தர் குறிப்பிட்ட சிலரின் குறிப்புகளில் இனிப்பு,காரம் என்று ஒவ்வொன்றாய் தேர்ந்தேடுத்து ஒரு 10 ஐடம் சூஸ் பண்ணியிருப்பாங்க.நான் கூட பார்த்திருக்கேன்.இதில் பங்கேற்க முடியாமைக்கு காரணத்தை சொல்லிட்டேன்பா(அதுவும் என் பேரை போட்டதாலே)

வெல்கம் சீதா ஆன்டி, இந்திரா,
சீதா ஆன்டி அடுத்த புதன் வரை ஜலீலாக்காவின் குறிப்புக்கள் தான், முடிந்தவரை செய்து செய்து பார்த்துச் சொல்லுங்கள். முதலாவதாக நீங்கள் தான் இணைந்திருக்கிறீங்கள். பார்ப்போம் எல்லோரும் வருவார்கள்.

இந்திரா... ரீ ஊத்திட்டு ரெடியா இருக்கிறேன் வடையோடு சாப்பிட இன்னும் வரவில்லை... ஊட்டிக் குளிரால் உடனே எதையும் செய்ய முடியாது தெரியுமோ... அதுசரி என்ன மாதிரி இணைந்திருக்கிறீங்கள் தானே ? அசத்திவிட்டு என்ன என்ன செய்தீங்கள் என்பதை இங்கே சொல்லுங்கோ...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நீங்கள் சொல்லியிருக்கும் தலைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் நாளை மறுநாள் ஊருக்கு போயிடுவேன். 2 மாசத்திற்கு இதில் கலந்து கொள்ள முடியாது. வந்தவுடன் கலந்து கொள்வேன். ஆனால் தினமும் நிறைய ரெசிப்பி கொடுக்காதீங்க. என் ஹஸ் மார்னிங் டிபன், நைட்டிபன் மட்டும்தான் வீட்டில் சாப்பிடுவார். லன்ஞ் ஆபிஸில்தான். நான் ஊருக்கு போயிட்டு வந்து கலந்து கொள்கிறேன் அதிரா. சரியா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆஹா, அதிராக்கா என்னையும் சேர்த்து விட்டீர்களா. கொஞ்ஜம் கஷ்டம்தான். சரிக்கா, நானும் ட்ரை பன்றேன் முடிஞ்ச அளவுக்கு.
கொரிய உணவுகள், உணவுமுறைகள், பற்றியெல்லாம் எழுத எண்ணம் ( எப்ப காலம் கனியும் என்றுதான் தெரியவில்லை.)

இப்படிக்கு
இந்திரா

indira

சுகன்யா!!
நீங்க சேருகிறேன் என்று இப்ப சொல்லுங்கோ அதுபோதும், வீட்டில் குறிப்புச் செய்து பார்த்துவிட்டு பின்னர் இங்கே வந்து சொல்லுங்கள், ஒரு கிழமை அவகாசம் இருக்கிறது தானே... அது ரீயாகக் கூட இருந்தாலும் பறவாயில்லை, செய்துதான் பார்ப்போமே. வாருங்கள். பொய்யாக யாரும் எழுதமாட்டார்கள், நாம் ஏன் தப்பாக நினைப்பான், எல்லோரும் கலந்துகொண்டால் தொடரலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் தனிஷா,
ரமணி சந்திரன் நாவல் எடுததாச்சா. எனக்கு பதில் வரவே இல்ல்லையெ.

indira

தனிஷா,
நலமே போய் வாங்கோ... இது இருக்குமேயானால் கலந்துகொள்ளுங்கோ. உங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். நான் எதுவும் சொல்லமாட்டேன், நீங்கள் தான் ஜலீலாக்காவின் குறிப்புக்களில் இருந்து எதையாவது தெரிவு செய்து பார்த்துவிட்டு செய்தவற்றை இங்கே சொன்னால் போதும். அடுத்த கிழமை அடுத்தவரின் குறிப்புக்குப் போவோம். இப்போ சுலபம் தானே?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்