பட்டிமன்றம் - 6

இந்த பட்டிமன்றத்திற்க்கு தேவா மேடம் அவர்கள் கொடுத்திருக்கின்ற தலைப்பு,
“அன்றும், இன்றும், என்றும், இனிக்கும் இல்லறத்துக்கு காதல் திருமணம் சிறந்ததா அல்லது பெரியோர்களால் பார்த்து, நிச்சயக்கப்பட்ட திருமணம் சிறந்ததா".தோழி தேவா என்னையும் ஒரு நடுவரா தேர்ந்தெடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றிபா.

இன்றைய காலக்கட்டத்தில்,ஒரு மனிதன் முழுமையடைவது அவர்களது திருமணத்தி்ல் தான்.அத்தகைய திருமணம் இந்த நவீனயுகத்தில் பல வகையாகிவிட்டது,இண்டர்நெட் திருமணம்,ஆகாயத்தில் பறந்து கொண்டே திருமணம்...இப்படி சொல்லிக்கிட்டெ போகலாம்.பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்கட்டும்,மனசும் மனசும் பேசி செய்து கொண்ட காதல் திருமணமாக இருக்கட்டும்!எதில் எப்போதும் இனிமை உள்ளது!என்பது தான் தலைப்பின் சாராம்சமாக உள்ளது.

ஆகவே தோழிகளே வழக்கம்போல எம் தோழ தோழிகளுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.கடந்த 3 பட்டிமன்றங்களிலும்,விவாதத்தில் பங்கு பெறுபவர்கள் நல்ல எழுத்து திறமையை பார்த்தே இதை சொல்கிறேன்.முடிந்தவரை நிறைய பேர் பங்கெடுத்து 4 வரியானாலும் 40 வரியானாலும் பதிவு செய்யுங்க!பட்டிமன்றத்தை உங்கள் அருமையான வாதத்தால் சுவாரசியமாக்குங்க!உங்க தோழி அழைக்கிறேன் வாங்க!பதிவு போடுங்க!

அன்பு தோழிகளுக்கு வணக்கம்.... நான் இது வரை எந்த பட்டி மன்றத்திலும் வாதிட்டதில்லை. ஏனோ இந்த தலைப்பு என்னை இங்கு பேச வைக்கிறது. எனக்கு உங்களைப்போல் தெளிவாக கருத்தை சொல்ல தெரியாது. இருப்பினும் என் மனதில் தோன்றுவதை சொல்கிறேன். இந்த காலத்தில் மட்டும் அல்ல எந்த காலத்திலும் காதல் திருமணம் சிறந்ததே (நிச்சயம் ஊரை விட்டு ஓடி போய் செய்யும் திருமணமோ, அல்லது மன முதிர்ச்சி இல்லாமல் செய்யும் திருமணமோ இதில் சேறாது. அதை காதல் என்றே சொல்ல கூடாது.).

திருமணம் செய்து வைக்கும் பெற்றொர், ஒரளவுக்கு மட்டுமே மாப்பிள்ளை பற்றியோ, பெண்ணை பற்றியோ விசாரிக்க இயலும். ஆனால் திருமணத்துக்கு பின் தான் மனமுடித்தவர்களுக்கு 2 தரப்பில் உள்ள உண்மைகள் தெரிகின்றது. எத்தனையோ பெண்கள், கனவருக்காக புகுந்த வீட்டை அனுசரித்து போகின்றனர். ஆனால்.... கணவரோ.... பெற்றொர் பக்கம். தன்னை நம்பி வந்த பெண்ணின் வாழ்க்கை???!!! நிரைய ஆன்கள் மறந்து போகின்றனர். காரணம்.... "இந்த வாழ்க்கையே பெற்றொர் தேடிதந்தது, இவள் இன்று வந்தவள்...." என்ற எண்ணம், மனைவியின் மனதை அரிவதில்லை. இதே போல் பெண்ணும், புகுந்த வீட்டில் உள்ளவர்களை நேசிக்க மறுக்கிறாள். காரணம்... கணவரை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் பல கர்ப்பனைகளோடு திருமணம் செய்வது, ஏமாற்றம், உறவுகளின் உண்மை தெரியும்போது விரக்த்தி. ஆனால் காதல் திருமணம் அப்படி இல்லை.... ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு, நீ இல்லாமல் நானில்லை, நான் இல்லாமல் நீ இல்லை என்ற நிலையில், மனம் ஒத்து வாழ்கையில் இனைகிறார்கள். இவர்கள் தன்னை சுற்றி இருக்கும் யார் சரியாக இல்லை என்றாலும், தன் துனையை மட்டுமே நேசித்து நிறைவாக வாழ்கிறார்கள்.

உங்களைப்போல் எனக்கு பேச தெரியாது..... ஆனாலும் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன்... குறை இருந்தால் மண்ணிக்கவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

anbu tholikalukku vanakkam

kathal thirumanam siranthathu. oruvarai oruvar purinthu kondu vittu kodukkum manappanmaiyodu nam avarukkahavum avar namakkahavum valvathu kathal thirumanathil ullathu. unmaiyana kathalukku mattum

பேச தெரியாது,கருத்து சொல்ல தெரியாதுன்னு எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சி சொல்லிட்டீங்க!தொடரனும் உங்க எழுத்து திறமை.அதற்கு என் வாழ்த்துக்கள்!

ஹாய் யாஸ்மின்,தங்கள் கருத்து நன்றாக தான் உள்ளது ஆனால் அதனை தயவுகூர்ந்து அழகிய தமிழில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.கீழே எழுத்துதவி க்ளிக் பண்ணி அதில் டைப் செய்து அதனை இங்கே பேஸ்ட் பண்ணுங்க.ஓகேவா!முதலில் கஷ்டமாயிருந்தாலும்,டைப் பண்ண பண்ண ஈஸியாகிடும்.

நன்றி சுகன்யா... நீங்கள் தந்த ஊக்கத்திர்க்கு மிக்க நன்றி. யாச்மின்... ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பது மட்டுமல்ல.... ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத மனமும் காதலுக்கு உண்டு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காதல் திருமணங்கள் டைவர்ஸில் முடிவது அதிகமாக காணப்படுகிறது. சகிப்புத்தன்மை குறைவு. இன்னும் இன்னும் நிறைய குறைகள் காதல் திருமணத்தில் உள்ளது.

பொதுவாக கணவன் மனைவிக்குள் ப்ரச்சினை ஏற்பட்டு குழப்பத்தில் இருக்கும் போது பெற்றோரின் ஆலோசனை அவர்களின் மனதை தெளிவாக்கி, குழப்பத்திலிருந்து மீண்டு வரச்செய்யமுடியும். ஆனால் காதலித்து மணம் செய்து கொள்வோருக்கு நண்பர்களின் அரைவேக்காட்டுத்தனமான ஆலோசனைதான் கிடைக்கும்.

நம் குடும்பத்தில் அண்ணன் தங்கை, அக்கா தம்பி, மற்றும் உறவினர்களோடு சண்டை வருவதில்லையா? அவர்களை எல்லாம் உறவுமுறிவு செய்து விடுகிறோமா? இல்லையே. ஆனால் இந்த தாந்தோன்றித்தனமாக காதல் திருமணம் செய்யும் ஜோடிகள்தான் பெரும்பாலும் பிரிகின்றன். ஏதோ ஒரு சில விதி விலக்குகள் இரு தரப்புக்குமே இருக்கலாம்.

திருமணத்திற்கு முன்பே பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்களாம். அப்பதான் வாழ்க்கை இனிக்குமாம். வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தமுடியுமாம். அதெல்லாம் சும்மா.........

ஒருவரை ஒருவர் அறிமுகம் இல்லாவிட்டாலும் வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே இருவரும் விட்டுகொடுத்து வாழ பழகிவிட்டால் பிறகு அறிமுகமில்லாத அண்டை வீட்டார், மற்றும் உறவினர்கள் எல்லோருடனும் விட்டுக்கொடுத்து சுமூகமாக பழகும் தன்மையை கற்றுக்கொள்ளலாமே.

வாழ்க்கைக்கு ரொம்ப தேவையான (அகவாழ்க்கைக்கு மட்டும் அல்ல, புறவாழ்க்கைக்கும்தான்) பொறுமை, சகிப்புத்தன்மை, இதை எல்லாம் கற்றுக்கொடுப்பது பெரியவர்கள் பார்த்து செய்துவைத்து ஆசீர்வதிக்கும் திருமணங்கள்தான்.

இன்னும் நிறைய எழுத வேண்டும். நேரம் போதவில்லை. பிறகு வந்து எழுதுகிறேன்.

இது எல்லா வகையிலும் உண்மை இல்லை. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில் தான் அதிகமாக வரதட்சனை அடிபடுகிறது. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில் தான் சம்மந்தி தகராருகள் கான முடிகிறது. எத்தனை பெற்றோர் பிள்ளைக்கு நல்லது மட்டும் சொல்கிறார்கள்?! மனைவி சொல்லே மந்திரம், என்று தாயை துரத்தும் ஆண்களும்.... தாயை சிறந்த கோவிலும் இல்லை என்று மணைவியை மறக்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தாய் தந்தை பேச்சை கேட்டு மனைவியை கொடுமை செய்யும் ஆண்களும் உண்டு. ஒரு பெற்றோர் முடிக்கும் திருமணத்தில் பெண் வீட்டிர்க்கு கிடைப்பது "மாப்பிள்ளை" ஆனால்... காதல் திருமணத்தில் ஒரு பெண் வீட்டிர்க்கு கிடைப்பது "மறு-மகன்". காதல் திருமணங்களும் முரிகின்றன.... பார்த்து வைத்த திருமணமும் முரிகின்றன.... ஆனால் அது 25 %(காதல்) இது 50 %(பார்த்து வைப்பது).

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனைவருக்கும் வணக்கம்.நான் பட்டிமன்றத்தில் கலந்து கொள்வேன்.திறமையாக வாதாடவெல்லாம் தெரியாது. சரியா சுகன்யா?
என் கணவர் என் தாய் மாமா மகன் தான்.முதலில் எங்கள் வீட்டில் பெண் தருவதாய் சொன்னார்கள்.அங்கோ நிறைய அலையன்ஸ் வந்தது.என் மாமா அவரிடம்(உமர்) கேட்டபோது அவர் என்னை செலக்ட் செய்து விட்டார்.இது காதல்திருமணமா?தெரியவில்லை.இது ஒருவர் மற்றவரை பற்றி தெரிந்தவர்கள்,அதிக எதிர்பார்ப்பு இல்லை.கொண்ட காதல் உண்மையானதாக இருந்தால் வாழ்க்கைப்படகு எவ்வளவு தத்தளித்தாலும் இனிமையாகத்தான் இருக்கும்.இடை இடையே வருவேன்.நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடக்கும் திருமணங்களை மட்டுமே காதல் திருமணத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? பெற்றோர் சம்மதமுடன் நடக்கும் காதல் திருமணங்கள் அரேன்ஞ்டு மேரேஜ் வகையறாவா?

இப்பதிவில் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் பொறுப்பில் நான் இருப்பதால்,முதலில் நடப்பது,காதலுக்கு பின் பெற்றோரின் அனுமதியா அல்லது பெற்றொரின் அனுமதிக்கு பின் காதலா?முதலில் நடப்பதற்கே முக்கியத்துவம்!

ஆக பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம்,காதல் திருமணமே!!

சபையோர் அனைவருக்கும் என் வணக்கம்.என்றென்றும் இனிக்கும் இல்லறத்துக்கு காதல் திருமணமே சிறந்தது.தவறான காதல் வாழ்க்கையை சீரழித்துவிடும் என்பது யாவரும் அறிந்ததே அதனால் நாம் மன முதிர்ச்சியுடன் கூடிய ஒழுங்கான காதல்திருமணத்தை மட்டும் பேசலாம் என்று நினைக்கிறேன்.காதல் திருமணத்தில்தான் அதிகம் விவாகரத்து வரும் என்பது இல்லை.உண்மையான கணக்கெடுப்பின்படி குறைந்த வயதுத்திருமணங்களே அதிகமாக விவாகரத்தைக் கொண்டுள்ளது.அது இரு பக்கத்துக்கும் பொருத்தமானது.
ஆனால் இனிமையான வாழ்க்கை என்று பார்க்கும்போது,உள்ளூர் வெளியூர் என்று இரண்டாகப்பிரித்துப்பார்க்கவேண்டி இருக்கிறது.

உல்ளூரில் காதல் திருமணம் புரிந்து கொண்டவர்களின் வழ்க்கையை சில பல சமூக சம்ரதாயங்கள் அவ்ர்களுக்கு கசப்புகளை அள்ளி வழங்குகிறது.

உதாரணமாக சாதி,மதம்,சீர்வரிசை,உறவினர்வட்டம் போன்றவற்றால் மனவெறுப்புக்கொள்ள வைக்கிறார்கள்.சீர்வரிசைக்கும் உறவினர் அன்புக்கும் ஏங்க வைக்கிறார்கள்.ஏன் குழந்தைகளைக்கூட எந்த வழியில் கொண்டு நடத்துவது என்ற சிக்கலையும் கொடுத்து விடுவார்கள் ஆனால் இதன்மூலம் மனமொத்த தம்பதிகள் மேலும் தங்கள் வாழ்க்கையை பலமாக்கிக்கொள்ள நேரிடுகிறது.பல போராட்டங்களை,அவமானங்களை சந்த்திக்க வேண்டி வந்தாலும் தமக்கு தாமே எண்னற்ற துணை என்பதை நன்கு அறிந்த காதல் திருமணத் தம்பதிகள் மேலும் வைராக்கியம் பெர்று தங்கள் வாழ்வை தாமே இனிமையாக்கிக்கொள்கிறார்கள் என்பதே உண்மை.
இதனால் நான் சொல்ல வருவது இனிக்கும் இல்லறத்துக்கு மட்டுமல்ல தடைகளை உடைக்கவும் வழிசெய்வது காதல் திருமணம்தான்.

இனி அடுத்ததாக வெளியூரில் இருக்கும் நம்மவர் காதல்திருமணவாழ்க்கையைப்பார்த்தால் [வெள்ளைக்காரர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் காதல் வேறு]அனேகமாக இருவரும் சொந்தக்காலில் நிற்பவர்களாக இருப்பார்கள்.உறவினர் தொல்லைகள் அதிகம் பாதிக்காது.யாருடய சீர்வரிசையும்,உடலுதவியும்[உதாரணம் பிரசவம் சுகயீனம் போன்றவற்றில் ஓடிவந்து உதவுதல்]இவர்களுக்கு உறவினதான் உதவவேண்டும் என்ற அவசியமில்லை.வேறுபட்ட இனங்களுக்குள் வாழ்ந்து பழகியதால் சாதி மதம் மறந்து போய் அந்த தம்பதிகளுக்கும் தாரளமான மதிப்பு கிடைக்கிறது.அதனால் மேல்நாட்டில் வாழும் நம்மவர்க்கு காதல் திருமணம் ஒன்றே பொருத்தமான ஒன்றாகிறது.நிச்சயிக்கபட்ட திருமணங்கள்மூலம் இங்கு வருபவர்கள் அதிக எதிர்பார்ப்புகளை சுமந்து வந்து பிரச்சனையை உண்டுபண்ணி வாழ்வின் இனிமையைக்கெடுத்துவிடுவார்கள்.இங்குள்ளவர்களும் அவர்களைப்பற்றி நிறைய கோட்டை கட்டி ஏமாந்து போகிறார்கள் மன்னிக்கவும் எல்லோருமல்ல ஆனால் அதிகமானவர்கள்.அவர்கள் இயல்பு வாழ்வுக்கு வருவதற்கே பாதி வாழ்க்கை கடந்துவிடும்.

இனி பொதுவாகப்பார்த்தால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் பல விசயங்கள் மறைக்கப்பட்டுவிடும்.பின்பு ஒவ்வொன்றும் பூதமாக வெளியே வர வர வாழ்க்கை அதோகதிதான்.அப்புறம் எப்படி இனிக்கும்.

இனி என்வாழ்க்கைக்கு வருவோம்.நானும் என்கணவரும் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள்.என்ன ஆர்வம் வந்துடிச்சோ? சிறு வயதுமுதல் சேர்ந்து விளையாடியவர்கள்.இருவரும் 19வயதிற்கு முன் வேறு வேறு நாடுகளுக்கு வந்துவிட்டோம்.தொலைபேசியில் பேசிக்கொள்வோம்.நமக்குள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம்.பதினாறு பதினேழு வயதில் தொடங்கிய நம் காதல் 12 வருடங்களின்பின் திருமணமாகியது.பெரியோர் சம்மததிற்காக காத்திருந்தோம்.பணம் சேமிப்பதற்காக காத்திருந்தோம் மூத்தோர்கள் திருமணத்துக்காக காத்திருந்தோம்.நமது வாழ்க்கைக்கான சகல ஆயத்தங்களையும் செய்வதற்காக காத்திருந்தோம்.கடமைகளுக்காக காத்திருந்தோம்.இன்று மனம் நிறைந்த வாழ்க்கை வாழுகிறோம்.ஏன் சொல்கிறேன் என்றால் நிச்சயிக்கும் திருமணங்கள் வரன் தேடுவதில் வருடங்களை செலவிட்டு கடைசியில் திடுதிப்பென்று ஏற்படுத்திக்கொள்ளும் வாழ்க்கையில் இனிமையை அனுபவிக்க எப்படிமுடியும்? திருமணமும் முடிந்துவிடும்.அதன் பிறகுதான் அவர்களால் நாம் எப்படிப்பட்டவர்கள் எம்மால் என்னென்ன சாதிக்க முடியும் என்றெல்லாம் சிந்தித்து செயல்படுத்த காலம் குடும்பமும் பெருகி அவர்களைக்கொண்டு நடத்துவதில் திக்குமுக்காடி முக்கால்வாசி இனிமை போய்விடும்.இவை எல்லாம் காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் எதிர்நோக்குவதுதான் இருந்தாலும் அந்த சுமையிலும் சுகம்காணும் அளவுக்கு நாம் நம்மை ஏற்கனவே தயார் படுத்தி வைத்திருக்கிறோம்.ஏற்கனவே ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருக்கிறோம்.

அதன்பின் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் பாட்னர் மட்டுமா புதிது குடும்ப உறுப்பினர்கள் கூடத்தான்.குடும்ப உறுப்பினர்களால் வரும் பிரச்சனைகளை அதிகம் எதிர் நோக்குபவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணவாழ்க்கைக்குள் அகப்பட்டவர்களே.ஏனென்றால் ஊர் கூடி உறவுகூடி ஏற்படுத்திய திருமணமென்பதால் அவர்களுக்கெல்லாம் உரிமை கூடுதலாகி பூசல்களை உருவாக்குவார்கள்.

நம்மையெல்லாம் யாரும் சீண்ட மாட்டார்கள் தெரியுமோ?

மொத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம்தான இனிய வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

மேலும் சில பதிவுகள்