அரட்டைக்கு வாங்க பாகம் 29

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

பழைய பதிப்பு 100 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் 29 யில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... இதில் மட்டும்தானே சின்ன பிள்ளையாட்டம் சண்டை போட விளையாட,ஜாலியா பேச முடியும் வாங்கப்பா வாங்க்கா எல்லோரும் வந்து மனம் விட்டு சிரித்து பேசிட்டு போங்க. நான் ஊருக்கு போயிட்டாலும் நீங்க அரட்டைய இதில் தொடருங்கப்பா

தனிஷா

எனக்கு எந்த பேஜும் சரியாக தெரியவில்லை. எதிலும் நுழைய முடியவில்லை. என்னுடைய நெட் கனைக்ஷனும் இன்னைக்கு ரொம்ப ஸ்லோவா இருக்கு. உங்க பட்டிமன்றத்திற்குளும் நுழைய முடியவில்லை. ரெப்ரஷ் பண்ணி கொண்டிருக்கிறேன். பாகம் 28 ல் போக முடியல. சரிப்பா நான் பிறகு வருகிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் நான் இந்தியா செல்கிறேன். சென்று வருகிறேன். யாரும் என்னை மறந்துடாதீங்க.

மேனு பழைய பதிவில் என்னை கேட்டு இருக்கீங்க. எனக்கு வரநேரமின்மையால் அரட்டையில் கலந்துக்க முடியல. ஷிவானி இப்பவே மாப்பிளைகள் எல்லாம் கியூவில் நிற்கிறாங்க போல.

ஹாசினி நீங்களும் என்னை ரொம்ப மிஸ்பண்ணுவேனு சொல்லியிருக்கீங்க. நானும் உங்கள் அனைவரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். ஊரில் இருந்தாலும் அவ்வப்போது வருவேன்.

ஆயிஸ்ரீ உங்கள் தந்தை இப்போது நலமா? பூரண சுகத்துடன் இருப்பார்கள் கவலைப்பட வேண்டாம். இறைவனை பிராதிக்கிறேன்.

இந்தியாவில் இருக்கும் செல்விமா, ஜெமாமி, சாதிகா அக்கா, ஜெயா, மர்லி, கவி.எஸ், காயூ, எல்லோரும் என்னை வரவேற்க ஏர்போர்ட்டு வாங்க (ஹா..ஹா..ஹா)

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

உங்களை கண்டிப்பா அறுசுவையில் இருக்க நாங்க ரொம்ப மிஸ் பண்ணுவோம்.காலையில் வந்தால் பதிவு போடாதவர்களையும் உங்கள் விசாரிப்பு பதிவால் சும்மாவாவது கலாய்க்க தோன்றிடும்!அது தனிஷாவிற்கே உரிய யுக்தியாகும்.காலையில் எனக்கு ஹோம்பேஜே ஓபனாகலை.

அப்புறம் அது ஓபனாகி,இதுக்குள் வருவதற்குள் நான் பட்ட பாடு எனக்கு மட்டுமே தெரியும்.ம்...நீ(இண்டர்நெட்டை) என்னதான் முரண்டு பிடிச்சாலும் பார்த்தே தீரனும்னு காலையில் இருந்து போராடி அதுஅதிலும் பதிவை போட்டுட்டோம்ல!தனிஷா இவ்வளவு பிஸியிலும்(நெட் தொல்லையாலும்) நேற்று உங்க பதிவை பார்த்ததும் ரொம்ப சந்தோஷம்பா.அந்த ஒரு பதிவே 4-5 பதிவுக்கு சமமா நான் கருதுகிறேன்பா!

தோழி தங்களை எப்படி மறப்போம் என்று நினைத்தீர்கள்.அப்புறம் ஊரில் இருந்து வந்தவுடன்,ச்சே..இப்பதான் போன மாதிரி இருந்துச்சுபா,அதுக்குள்ள நாட்கள் ஓடிபோச்சு.இப்ப தான் அறுசுவையில் உங்களுக்கெல்லாம் மறந்துடாதீங்கன்னு பதிவ போட்ட மாதிரி இருந்தது.நான் போய் உண்மையிலேயே 2 மாசமா ஆகுது?ஓஹ் மை காட்!எனக்கு என்னமோ அறுசுவை நெட் டிஸ்கனெக்ட் ஆகும் போது,ஒரு நான்கு நாள் (நோட் பண்ணுங்க 2 மாசம் அதாவது 60 நாள்)வரமுடியாத ஃபீலிங்லியே கொடுக்குது.எங்க ஊரை(இது நீங்க அங்கிருந்து வந்த பிறகு நடக்கும் ஃபீலிங்) ரொம்ப மிஸ் பண்றேன்பா!(இந்த பாழா போன மனசு இப்படியும் நினைக்க தோணுது அப்படியும் நினைக்க தோணுது)

மிகவும் நன்றி தனிஷா(my father is doing good now), உங்கள் ஊர்ப்பயணம் இனிதே இனிதே என தித்திக்க என் வாழ்த்துக்கள்.. உங்களை எப்படி மறப்போம்.... நல்ல படியாக ஊருக்குப் போயிட்டு என்னவெல்லாம் செய்யனும்னு லிஸ்ட் போட்டு இருப்பீங்க... அதெல்லாம் நல்லா enjoy பண்ணிட்டு சந்தோஷமாக வாருங்கள்....

அன்புடன்,
ஆயிஸ்ரீ

சுகன் அனுபவம் பேசுதா. சுகன் பட்டிமன்றம் கவிதை, பாடல்னு எடுத்துக்காட்டோடு அழகாவாதாடலாம். இப்போ முடியாது என்னபண்ண? நம்ம கவி.எஸ் கூட இதில கலக்கி இருக்காங்க. சுகன் S.T. கார்கோவில் அனுப்பிய பொருட்கள் எல்லாம் பிர்ச்சி கொண்டு போய் கேண்டில் பண்ணினாங்களாம் என் மாமனார் வாங்க மாட்டேனு மறுத்துட்டாங்களாம். என்னென்ன பொருள் போச்சுனு தெரியல. மனசு ரொம்ப வேதனையா இருக்கு கிளம்பும் நேரத்தில். ரொம்ப பிரபலமாயிட்டோம்னு ரொம்ப திருடுராங்க. ஒரே டென்ஷன் சுகன்.

ஆயிஸ்ரீ உங்க வாழ்த்துக்கு நன்றிப்பா. நீங்க பட்டிமன்றத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். உங்க எழுத்து மிகவும் அற்புதம். நான் ரொம்ப ரசித்தேன்.

சுஹைனா நல்லபடியா ஹஜ் செய்துட்டு வாங்க. எங்களுக்காகவும் துவா செய்யுங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனீ
கிளம்பியாச்சா பத்திரமா போய்ட்டு வாங்க.டென்ஷனோடு கிளம்பாதீங்க.

ஆமா கவி. உங்க போன்நம்பர் எனக்கு மெயில் பண்ணுங்க. ஊரில் போய் பார்க்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அப்பாடி இப்படியெல்லாம் கூட நடக்குதா?நீங்க பக்காவா பேக் பண்ணியுமா இப்படி செய்கிறார்கள்!அந்த நிறுவனத்திடமே கம்ப்ளெயிண்ட் பண்ணி பார்த்தீங்களா?

நான் கார்கோவில் ஒருமுறை கூட அனுப்பியதில்லை.அதனால் எனக்கு அந்த நிறுவனம் பற்றி சரியா தெரியலைப்பா.எதுவா இருந்தாலும் டென்ஷன் வேண்டாம்.ஏன்னா முதன்முதலில் இங்கிருந்து ஊருக்கு போறீங்க!சோ,முடிந்தளவு எதை பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமா போயிட்டு வாங்க!

முதல்முறைல அதான்.பிறகு இது அனுபவமாகிடும்.கடைசி நிமிஷ டென்ஷ்ன்லாம் எப்ப வரலாம்னு காத்துகிட்டு தான் இருக்கும்!அதுக்கு இடம் கொடுக்காம நாம தான் உஷாரா இருக்கனும்!கவலைப்படாம போயிட்டு வாங்க!

போய் வருகிறேன். எனக்காக இறைவனை பிராத்தியுங்கள். நன்றி. மீண்டும் சந்திப்போம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா,குட்டிப்பொண்ணு ப்ளு ஜீன்ஸ்&ரோஸ் டாப்ஸ்ல ரொம்ப க்யூட்டா இருப்பாங்கதானே!!!பால் பாட்டில் எக்ஸ்ட்ரா ரெண்டு ஸ்டெரிலைஸ் பண்ணி கையில் (பேகில்)வச்சிக்கோங்க. ஃபிளைட்டில். ஏர்ஹோஸ்டசிடம் கேட்டால் கூட அல்மராய் பால் ஹீட் செய்து தருவார்கள்.உங்க பொருள் பத்திரமா கிடைச்சிரும்பா
ஓகே பை பை ஹாவ் எ நைஸ் ஜர்னி&வெக்கேஷன் ஃபிரெண்ட்
GREAT MINDS HAVE PURPOSES,OTHERS HAVE WISHES.

மேலும் சில பதிவுகள்