நரை முடி நீங்க.......என்னசெய்ய வேண்டும்...?

ஹாய்... பிரண்ட்ஸ்... எனக்கு தலை முடி நரைத்து வருகின்றது... ஏதேனும் வைத்தியம் இருந்தால் சொல்லுங்களேன்...

ஹேர் டைதான், வேறென்ன.. :-)

அட்மினுக்கு அனுபவம் பேசுதோ :D

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சத்தம் போட்டு சொல்லாதீங்கோ....

ஹா ஹா அட்மினுக்கு ஏந்தான் சொன்னோமோன்னு இருக்கும் காலையில் கவி சிவா கிட்ட ஹி ஹிஹி

இது நான் நிறைய டிப்ஸ்களில் படித்தது.

மருதாணி, கருவேப்பிலை, வேப்பிலை, துளசி, கரிச்லாங்கண்ணி இஅலை இதை அனைத்தையும் காயவத்து பொடி செய்து அதை டீ டிகாஷனில் போட்டு ஊறவைத்து தேவை பட்டால் தயிரும் சேர்த்து கொள்ளலாம். இரவு ஒரு இரும்பு வானலியில் ஊரவைக்கனும்.
அதை மறு நாள் தலையில் நன்கு தேய்த்து அரை மணிநேரம் ஊரவைத்து குளிக்கவும்.

( இல்லை பொடியக வே திரித்து வைத்து கொள்ளுங்கள் அதனுடம் பாசி பருப்பு, வெந்தயம் சிறிது) கலந்து கொள்ளவும், நெல்லி முல்லி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதையும் சேர்த்து கொள்ளுக்கள்/

இது என் பாட்டி சொன்னது.

அப்படி இல்லையா நல்லெண்ணையில் (1/4 kg)vilகருவேப்பிலை , மிளகு அரை தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி வெந்தயம் கால் தேக்கரண்டி, அரிசி அரைதேகக்ரண்டி கொதிக்கும் நல்லெண்ணையில் போட்டு ஊறவைத்து ஆறியதும் அதை தனம் தடவி கொன்டே வாங்க நாளடைவில் கருப்பாகும். ( வாரம் இரு முர்றை தேய்த்தும் குளிக்கவும்)

ஜலீலா

Jaleelakamal

ஆடாதோடை இலை 20, இளம் எருக்கங்குச்சி 2, சம்பா குத்தரிசி ஒரு கைப்பிடி, இலை கள்ளிப்பால் ஒரு கரண்டி, செம்பருத்திப்பூ 20, செம்பருத்தி இலை 10, நாவல் மரப்பட்டை நாலு, சிறுகட்டுக்கொடி ஒரு கையளவு, காசா மரப்பட்டை நாலு துண்டு, காசினிக்கீரை ஒரு கையளவு, சூரியகாந்தி விதை 25, சோம்பு அரைக்கரண்டி, சீரகம் கால் கரண்டி, கறிவேப்பிலை நாலு கொத்து இது எல்லாத்தையும் வெயில் படாம நிழல்ல ஒரு வாரம் காய வைச்சு எடுத்து, விறகு அடுப்பில வெங்கல சட்டியை வச்சு, ஈரமில்லாத கருவ மரக்கட்டையை அடுப்பில வைச்சு, மண்ணெண்ணெய் ஊத்தாம எரிய விட்டு, சட்டியில காய வைச்ச பொருள் எல்லாத்தையும் ஒண்ணாப் போட்டு நாலு கரண்டி கடுகு எண்ணெய் விட்டு நல்லா சுண்ட வதக்கி, சட்டியை இறக்கி தனியா வச்சிடணும் (வேண்டாம்னா தூக்கியும் போட்டுடலாம்.) இப்ப அடுப்பில பாதி எரிஞ்சிருக்கிற கரிக்கட்டைய எடுத்து, தண்ணி ஊத்தாம அணைச்சு, கரியை மட்டும் தனியா எடுத்து, கொஞ்சம் நல்லெண்ணெய் கலந்து தலைக்கு தேய்ச்சிக்கிட்டா தலைமுடி உடனே கருப்பாயிடும். குளிக்காம, மழையில நனையாம, தலையில தண்ணியே படாம பாத்துக்கிட்டா தலைமுடி எப்பவும் கருகருன்னு இருக்கும். யாராவது ட்ரை பண்ணிப் பார்த்து சொல்லுங்க.. ;-))

உங்கள் நண்பர் முடி வளர (மாடு கிட்ட நக்க போனாரே) முயற்சி பண்ணபோ இநத மாதிரி பாட்டன் வைத்திய முறை எதுவும் தெரிய வரல போல :-(

ஹஹஹா ..அட்மின் தமாஷ் கேட்டு ரொம்ப நாளாச்சு..

இப்பெல்லாம் எதாவது சொல்றதுன்னாலே பயமா இருக்குங்குங்க. sportive ஆ இருக்கிறவங்களைவிட sensitive ஆ இருக்கிறவங்கதான் அதிகமா இருக்காங்க..

RSMV அவர்களுக்கு, மாட்டை நக்கவிடுறதே ஏதோ ஒரு பாட்டன் சொன்ன வைத்தியம்தான்..:-)

நான் மேலே சொல்லியிருப்பது கிண்டலுக்குதான் என்றாலும், நான் கிண்டல் செய்திருப்பது ஜலிலா அக்காவை அல்ல. கை வைத்திய முறைகளை. அவர் பதிவு கொடுக்கும்முன்பே அப்படி ஒன்றை டைப் செய்ய ஆரம்பித்துவிட்டேன். இதை வேறு மாதிரி திரித்து, யாரும் எங்களுக்குள் பிரச்சனையை உண்டு பண்ணிவிடாதீர்கள் :-)

அட்மினின் நகைச்சுவை பிரமாதம்.

இது இருக்கட்டும், நான் சொல்ல வந்தது என்னன்னா ...வழக்கம் போல சொந்தக் கதை, சோகக் கதைதான்.

என் கணவருக்கு கெமிக்கல் டை உபயோகப் படுத்தியதால், அது அலர்ஜி ஆகி, தலையில் புண் வந்து ஆறாமல் ரொம்பக் கஷ்டப் பட்டோம். வம்பை விலை கொடுத்து வாங்கிய கதை ஆகி விட்டது. அதனால் டை உபயோகப் படுத்துவது என்றால் , அலர்ஜி டெஸ்ட் செய்து பார்த்தபின் உபயோகப் படுத்துங்கள்.

அல்லது அட்மின் அவர்களின் யோசனையை பின் பற்றலாம். எந்தப் பிரச்னையும் வராது. (அட்மின் காரண்டி)

அன்புடன்

சீதாலஷ்மி

1/2 லி நல்லெண்ணை காய்ச்சி இறக்கி 50 கி கறிவேப்பிலை போட்டு முடவும். மறுனாள் இதை மிதமாக சூடு செய்து தலையில் நன்றாக தேய்த்து பின் க்ளிக்கவும். வாரம் 2 முரை செய்தால் நரை மாறும்

anuchakko

மேலும் சில பதிவுகள்