தெளிவான இளைஞர்களை காண ஓடி வாருங்கள்

அம்மாமார்களே முதலில் குழந்தைகளுக்கு பொறுமையை வளர்த்து விடுங்கள்..நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவர்களது மனதில் பதியும்.

http://dailythanthi.com/article.asp?NewsID=450086&disdate=11/13/2008&advt=1

இதை தொலைக்காட்சி செய்திகளில் நேரடியாக காணும்போது இன்னும் கொடுமையாக இருந்தது. ஒவ்வொருவர் முகத்திலும் இருக்கும் கொலைவெறியைப் பாருங்கள். இவர்கள் தாக்குவது கொள்ளைக்காரனையோ, தீவிரவாதியையோ அல்ல. சக மாணவர்களை. இவர்கள்தான் நாளை சட்டம் என்னும் இருட்டறையில் ஒளியேற்றப் போகின்றவர்கள்.

சட்டக்கல்லூரிகள் எல்லாம் இப்போது அரசியல்வாதிகளை தயார் செய்யும் களமாக மாறிக்கொண்டு வருவதற்கு இது உதாரணம்.

அம்மா தொலைக்காட்ச்சியில் கூட காண்பித்தார்களா..அப்ப மற்றவர்கள் பூப்பரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்தார்களா??
புகைப்படமும் வீடியோவும் எடுக்கும்வரை அந்த பசங்களை அடிக்க விட்டார்களா...அதுக மூஞ்சியும் மொகரையும் பாருங்க ..படிக்கிர பசங்களை போல இருக்காங்களா??ஏதோ tvல காண்னும் ரவிடிக போல்.இவங்க என்னத்த படிச்சு கிளிச்சு..ஹ்ம்ம் கலிகாலம்.
சந்திராயனை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன்.அந்த வேளையில் இது..அப்துல் கலாம் பார்த்தால் ரத்தக் கண்ணீர் வடிப்பார்..ச்சே எதிர்பார்ப்பு எல்லாம் போய் கேவலமா இருக்கு..

இன்று காலை தொலைக்காட்சி செய்தியில் ஒளிபரப்பினார்கள்... கொடூரம்.. படிக்கற வயசுல இப்படி ஒரு வெறித்தனம் இருக்க முடியுமா? அதுவும் சட்டம் பயிலுகிற மாணவர்கள் :-( அந்த பசங்களோட அப்பா அம்மால்லாம் இத பார்த்திருப்பாங்களா?

விலங்குகளை கூட நாம அப்படி அடிக்க மாட்டோம்..அந்த அளவுக்கு வெறி...படிக்கற பசங்களுக்கு அப்படி என்ன பிரச்சனை இருக்க போகுது !!?

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

காலையில் எழுந்ததும் இந்த புகைப்படங்களைப் பார்த்ததில் இருந்து நெஞ்சு கொதிக்குது. இந்த மாணவர்களின் மனசில் இப்படி ஒரு வக்கிரம் புகுந்ததற்கு என்ன காரணம்? ஆயிஸ்புகழ் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ஆக்கி விட்டார்கள். நன்றாகப் போய் நாலு வார்த்தை கேட்க வேணும் என்று மனசு அடித்துக் கொள்கிறது. இவங்க எல்லாம் நாளைக்கு வழக்கறிஞராக பயிற்சி எடுத்து, அப்புறம் நீதிஅரசர் ஆகி ... அடக் கடவுளே! இந்த நாட்டை உங்களாலும் காப்பாற்ற முடியாது என்று நினைக்கிறேன்.

ஆச்சு, இன்னும் இரண்டு நாளில் எல்லாப் புலனாய்வு பத்திரிக்கைகளும் " அலறல், நெஞ்சைப் பதற வைத்த, கொடூரம் என்ற அடைமொழிகளுடன் கவர் ஸ்டோரிகள் வெளியிடுவார்கள். அரசியல்வாதிகள் வாய் மூடி மௌனியாக இருப்பார்கள். ஒரு விசாரணைக் கமிஷன் வைப்பார்கள். ஏனென்றல் ஓட்டு வங்கி பாதிக்கப் படக் கூடாதல்லவா, எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை குறை சொல்லி அறிக்கை வெளியிடுவார்கள்.

ஆனால் இந்த இளைஞர்கள் மனதாலும் உடலாலும் பாதிக்கப் பட்டு இருக்கிறார்களே, இவர்களைத் திருத்துவதற்கு, யார் என்ன செய்யப் போகிறார்கள்? இன்னொரு காந்திஜி வந்து உண்ணாவிரதம் இருந்து, அஹிம்சை, சகிப்புத்தன்மை எல்லாம் போதிக்க வருவாரா?

அன்புடன்

சீதாலஷ்மி

ஆஅ இப்போ ஏஷியானெட் வைத்தேன் அதில் பார்த்தால் அம்மம்மா தாங்கலை..அடிஉதை குத்து கொலைவெறின்னு அங்க ஒரே புகைமண்டலம் தள்ளி நின்று போலீஸ்காரர்கள் முளித்துக் கொண்டு..நம்ப போலீஸ்காரங்களுக்கு கடமையை வளர்க்காமல் தொப்பையைத் தான் வளர்க்க ட்ரெயினிங் கொடுப்பாங்க போலிருக்கு.
நம்ப காவல் துறை ஒன்னும் எதிலும் சளைத்தவர்கள் அல்ல ஆனால் எனகென்ன வந்தது என்ற ஒரு மணம் நம் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு உண்டு அது தான் பல ப்ரச்சனைக்கும் காரணம்.
அதுவும் நான் எப்பவும் யோசிப்பேன் இப்படி தலையணையுறை மாதிரி ட்ரெஸை யூனிஃபார்மாஇ கொடுத்தால் போலீஸ்காரங்க எப்படி ஓடுரது?கொஞ்சம் லூசா இருந்தா தானே காலை அதுக்கும் இதுக்கும் அசைக்க முடியும்.
நம்ப நாட்டில் உயிருக்கு மதிப்பே இல்லாம ஆகிப் போச்சு...50 வருஷமான பில்டிங்கின் ஒரு பக்கம் இடிந்து விழுந்து நாலு பேர் போனாத் தான் மத்தவ்ங்களை காலி பன்ன வப்பாங்க.
அப்படி எதை எடுத்துக்கிட்டாலும் கடைசி அந்த உயிர் போகும் அபாயம் வந்தபின் தான் அதற்கான நடவடிக்கையே எடுப்பாங்க.வேனா நம்ப சாலை விதியை கூட எடுத்து பாருங்க.
அப்டியே வெளிநாடு கணக்க பாலிஷ் பன்னின மாதிர் ரொடு இல்லாட்டாலும் கூட சாலை விதின்னு ஒன்னை ஒழுங்கா நடைமுறை படுத்தும் அளவுக்கு இருந்தால் எத்தனை உயிரை காக்கலாம்?
ஒரு 50 பேர் செத்தாத் தான் மக்கள் சேர்ந்து மறியல் செய்து தடுப்புச்சுவர் கட்டிக் கொடுப்பார்கள்...முன்னாடி மாட்டு வண்டி அப்டியே வண்டிக்காரன் கண் மூடி கனாக் காண மாடு வாலை ஆட்டி ஆஅட்டி அண்ண நடை போட பின்னாடி பென்ஸ் அதுக்கு பக்கவாட்டில் சைக்கில் அவரால் முடிஞ்ச மாதிரி காலுக்கு பலம் கொடுத்து மிதிக்க எதுக்குமே நேரம் இல்லாத டூ வீலர்காரன் எல்லாத்தையும் முந்தியடிச்சு போக அப்பப்பா அது ஒரு கண்கொள்ளா காட்ச்சி...வெளிநாட்டு வாழ்க்கை வாழ்து கொண்டு ஊருக்கு போனால் ஒரு வாரத்துக்கு வெளியே போகும்போது ஒருவித பீதி மனசுக்குள்..வெளியே சொன்னால் எங்கே ரொம்ப பீலா விடுறோம்னு நெனப்பாங்களோனு பயம் வேற
.பிறகு போகப் போக சரியாகிடும்...ஒரு அட்ஜஸ்ட்மென்ட்லயே போகுது நம்ப வாழ்க்கை..

தளிகா சிஸ்டர்,சுகமா? நானும் பார்த்தேன். அ(து)வர்களைப்ப் பார்த்தால் நம்ம நாட்டை (சட்டத்தினால்)தூக்கி நிறுத்திற மாதிரியா இருக்கிறாங்க.தன்னாலே முடிந்த உபயம்னு கலவரத்தினை பரப்பிவிட முயற்சி செய்கிற கூட்டத்தை சேர்ந்த மாதிரி இருக்குதுகள்!!!!அவர்கள் எல்லாம் எங்கு முன்னேற!!!
இங்கேயும் அவர்களை போல ஒரு சில இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இங்கே கார்களை கொண்டு செய்யும் வீர தீர பிரதாபங்களைப் பார்த்தீர்களேயானால் பாப்ரே ஒரு செகெண்ட் நம்ம இதயத்துடிப்பே கதிகலங்கிடும்.இப்ப ரேஸ் பைக் ஸ்டைல் வேறு ஆரம்பிச்சிருக்கு!கொஞ்சம் போக்குவரத்து துறை கட்டுகோப்பா இருக்கிறதால ஏதோ போயிட்டு இருக்குது.
ஆனா நீங்கள் சொன்னது போல் நம்ம ஊர் வாழ்க்கை நம்மளை மாதிரி பொது ஜனங்களுக்கு ஒரு காப்ரமைஸ் கம் அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிண்டுருக்குபா!என்ன சொல்யூஷன் ஒண்ணும் புரியலைப்பா,பெருந்தலைவர்கள் அவர்களின் இளைய தலைமுறைகளை(அது எண்ணிலடங்கா அளவுகளில் இருப்பது ஒருபுறம்)
பற்றிய கவலைகளில் இருப்பது ஒருபக்கம்.நெக்ஸ்ட் மெரா நம்பர் கப் ஆயகா ஸ்டைலில் காத்திருக்கும் ஆப்போசிட் கட்சி தலை(வி)வர்கள்.
The speed of the leader determines the rate of the pack.

சட்டக்கல்லூரி மாணவர்களுக்குள் என்ன தான் ப்ரச்சனை என்றாலும் இப்படியா வெறி பிடித்து கொண்டு தாக்கி கொள்வது?அவரவர் பெற்றோர் டி.வி.யில் பேட்டி பார்க்கும் போது மனசே கலங்குது.அதுவும் ஒரு உருட்டுக்கட்டையை வைத்து கொண்டு ஒருத்தன் ஒருவனை அடிக்க,சுற்றி சுற்றி அவனையே தொடர்ந்து அடிக்கிறார்கள்.இந்த மாதிரி இளைஞர்களின் கையில் அந்த சட்டம் சிக்கி எப்படி தவிக்கபோகுதோ??

ஏன் போலீஸ் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்?அக்கல்லூரியின் முதல்வர் ஏன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்?இன்னும் சொன்னால் போலீஸை விட கல்லூரி முதல்வருக்கே பொறுப்பு அதிகம்.காலேஜ் காம்பவுண்டில் போலீஸ் நுழைய அவரின் அனுமதி பெற்றே ஆக வேண்டும்.

சென்ற முறை இதே மாதிரி ஒரு ப்ரச்சனையில் போலீஸ் தலையிட,கைக்களப்பாகி அது மீடியாவில் போலீஸின் அராஜகம் என்ற கோணத்தில் காட்டப்பட்டது.ஒருவேளை இந்தமுறை காவல்துறையினர் அதனால் தயங்கினரோ.ஒருவன் வீடியோ எடுக்கும் அளவில் அனைவரும் பார்க்கும் போது ஒருத்தன் கூட தடுக்காதது ஏன் தான் பலரின் கேள்வியா இருக்கும்.

கண்டிப்பா ஒரு போலீஸ் அதிகாரியாவது,வேடிக்கை பார்க்காம,அவன் அடிப்பதை தடுக்கவாவது முயற்சி பண்ணியிருக்கனும்.அவனது தாக்குதல் அந்த காவல் அதிகாரியின் மீது விழுந்தாலும்,அவர் திருப்பி தாக்காமல் இருந்திருந்தால் இப்படி ஒரு கறை காவல் துறையின் மீது விழுந்திருக்காது.

கண்துடைப்பு போல இவர்களே இது மாணவர் ப்ரச்சனை!இதில் தலையிடக்கூடாதுன்னு சும்மா இருக்க சொல்லி உத்தரவு போடுவாங்க!அப்புறம் அவங்களே சஸ்பெண்ட்,இட மாற்றம் என்று தண்டனை கொடுக்கிற மாதிரி கொடுப்பாங்களாம்.இதில் தாக்கப்பட்ட மாணவன் அங்கு வேடிக்கை பார்த்த ஏதாவது ஒரு போலீஸின் மகனாயிருந்தாலோ,கல்லூரி முதல்வரின் மகனாயிருந்தாலோ இப்படி தான் நடவடிக்கை எடுப்பாங்களா?????

//இதில் தாக்கப்பட்ட மாணவன் அங்கு வேடிக்கை பார்த்த ஏதாவது ஒரு போலீஸின் மகனாயிருந்தாலோ,கல்லூரி முதல்வரின் மகனாயிருந்தாலோ இப்படி தான் நடவடிக்கை எடுப்பாங்களா?????//
சுகன்யா, கேட்டீங்களே ஒரு கேள்வி, இதை சட்டமன்றத்துல போய் கேக்கறதுக்காகவாவது சட்ட சபைக்கு போக விரும்பறோம்

அன்புடன்

சீதாலஷ்மி

அரசியல் ஆரம்பமாகிவிட்டது. அரசு ஒரு விசாரணை கமிஷன் அமைத்தாயிற்று. ஜெயா ப்ளஸ்ஸில் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் வரும் எல்லோருமே முதல்வர் கருணாநிதி தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்று மறக்காமல் சொல்கின்றார்கள். சன் டிவியும் (இப்போது ஒதுக்கப்பட்டுவிட்டதால்) பாரபட்சமின்றி தொடர்ந்து காட்டி, போலீசார் மீது நடவடிக்கை வேண்டும் என்று சொல்பவர்களை ஹைலைட் செய்து கொண்டிருக்கின்றது. அரசாங்கம் கல்லூரி முதல்வரை தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கின்றது. கூடவே சில போலீஸ் அதிகாரிகளையும். சிலர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் சில மாணவச்செல்வங்களை கைது செய்திருக்கின்றனர். வழக்கறிஞர்கள் எல்லாம் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை தொடங்கிவிட்டனர். மாநிலத்தில் உள்ள மற்ற சட்டக்கல்லூரிகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன(தேர்வுகளை ரத்து செய்து). கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற அராஜகத்தை கண்டித்து, சாத்வீக முறையில் தங்களது கல்லூரியை அடித்து நொறுக்கி தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். பத்திரிக்கைககளுக்கு அடுத்த சில நாட்களுக்கு தலைப்புச் செய்திகளுக்கு பஞ்சமே இல்லை. எல்லா அரசியல் தலைவர்களும் டிவியில் தலைகாட்டுகின்றார்கள். இந்த பரபரப்பு அடங்க சில நாட்கள் ஆகலாம்.

பாம்பை அடிப்பது போன்று அடித்து போடப்பட்ட அந்த இளைஞன், எழுந்து நடக்கக்கூட திராணியில்லாமல் தள்ளாடி விழுந்ததையும், அவனை பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தாய் தன் மார்பில் அடித்துக்கொண்டு அழும் காட்சியை பார்க்கும்போதும் வரும் கண்ணீரைத் தடுக்க முடியவில்லை. 3 பேர் கவலைக்கிடமாக இருக்கின்றார்களாம். இப்போதே அரசியல் தலைவர்கள் சொல்லிவிட்டார்கள். அவர்கள் மருத்துவ செலவிற்கு நிதி ஒதுக்கவேண்டுமென்று. நாளை இவ்வுலகைவிட்டு அவர்கள் யாரேனும் பிரிந்தார்கள் என்றால் சற்று கூடுதல் நிதி கிடைக்கும். கொடுத்த உயிருக்கு அரசாங்கம் கொடுக்கும் விலை.

காவல்துறை வேடிக்கைப் பார்த்ததை எல்லோருமே குறை சொல்லியிருக்கின்றார்கள். காவல்துறையின் சீர்க்கேடுகளை எப்போதும் கடுமையாக விமர்சிக்கும் எனக்கு இந்த விசயத்தில் அவர்கள் மீது கோபம் வரவில்லை. அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும் அவர்கள்தான் பலிகடா ஆகியிருப்பார்கள். ஆயிரம் குறைகள் இருந்தாலும், பொது இடங்களில் நடைபெறும் இதுபோன்ற செயல்களை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததில்லை. முன்பு ஒரு பிரச்சனையில் காவல்துறை இதே சட்டக்கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களை தடுத்தபோது, காவல்துறை எப்படி சட்டக்கல்லூரி வளாகத்திற்குள் வரலாம் என்று பெரிய பிரச்சனையாக்கினார்கள். கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதத்திற்கென்றே உயர்நீதிமன்றத்துக்கு வரும் வழக்குகள் இல்லா வழக்கறிஞர்கள் எல்லாம் உண்ணாவிரதம் போராட்டம் என்று பெரிதாக்கினார்கள். அது சட்டக்கல்லூரி என்றல்ல. எந்த கல்லூரியானாலும் போலீஸ் உள்ளே வந்துவிட்டதென்றால் உடனே, காலேஜ் கேம்பஸ்க்குள் போலீஸ் எப்படி வரலாம் என்று அதை பிரச்சனையாக்குவதே வழக்கம். இது நான் படித்த கல்லூரியிலும் நடந்தது. சரி, இப்போது போலீஸ் சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும். கொலைவெறியோடு மண்வெட்டி, இரும்பு கம்பிகள் என்று இளம் தாதாக்களாய் வீரவலம் வந்துகொண்டிருந்த நமது சிங்கங்கள் போலீஸாரையும் தாக்கி இருப்பார்கள்.
அது கலவரத்தின் சூட்டை அதிகமாக்கியிருக்கும். நாளை அத்தனை பேரும் மாணவர்கள் செயலை மறந்து போலீஸாரின் மீது பாய்ந்திருப்பார்கள். எப்படி இருந்தாலும், எது நடந்தாலும் போலீஸார்தான் பலிகடா. நீங்களே வெட்டி சாய்த்துக்கொண்டு, பிரச்சனையை முடித்துக்கொள்ளுங்கள் என்று போலீஸார் நின்றது அவர்களது இயலாமையால் மட்டுமல்ல. வெறுப்பின் உச்சக்கட்டத்தினால். ஆனால் ஊடகங்கள் எல்லாம் போலீஸார் மீது மட்டும் பாய்வது நல்ல அரசியலாக இருக்கின்றது. எவன் அடிபட்டால் என்ன, இரத்தம் சிந்தினால் என்ன, உயிருக்கு போராடினால் என்ன, நமக்கு செய்தி கிடைத்தால் போதும் என்று கடமை உணர்வோடு எல்லோர் பின்னாலும் ஓடி, அவர்கள் அடிப்பதை சுற்றி நின்று படம் எடுத்த ஊடக கண்மணிகள் கடைசியாக போலீஸாரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கின்றனர்.
எப்படி இது எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்து கொண்டு இருக்கின்றீர்கள் என்று.

"ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்".

உலகிற்கு நாகரீகம் கற்றுக் கொடுத்த இந்திய தேசத்தின் வருங்காலத் தூண்கள் மீண்டும் கற்கால வாழ்க்கை முறையை நவீன உலகுக்கு கற்றுக் கொடுக்கிறார்களோ?மனம் நொந்து வெட்கித் தலைகுனிய மட்டுமே முடிகிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்