கொத்தமல்லி இலை ரசம்

தேதி: November 13, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்தமல்லி இலை - ஒரு கட்டு
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் -4
மிளகு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 நெட்டு


 

கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைக்கவும்.
புளியை ஒரு டம்ளர் நீரில் கரைத்து வைக்கவும்.
மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்தமிளகாய் 2 சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
தக்காளியை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விடவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் காய்ந்தமிளகாயை கிள்ளிப்போடவும். கறிவேப்பிலையையும் போடவும். பின்பு கொத்தமல்லி இலையைப் போட்டு வதக்கவும். இலை வதங்கி வரும் பொழுது மஞ்சள் சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு போடவும்.
தண்ணீர் கொதித்து வரும்பொழுது புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
புளிக்கரைசல் கொதித்து வரும்போது அரைத்து வைத்த விழுதினைச் சேர்க்கவும்.
அது கொதித்து வரும் பொழுது தக்காளிக் கரைசலைச் சேர்க்கவும்.
ஒரு கொதிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்
சுவையான கொத்தமல்லி ரசம் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வத்சலா, இக் குறிப்பை செய்து பார்த்தேன். சூப்பர் போங்க. ரசம் நல்லா வாசனையாக ரொம்ப நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

மிக ருசியாகவும்,மணமாகவும் இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வின்னி, ஆசியா உங்கள் இருவரினதும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"