தோழிகளே இன்றே சொல்லுங்களேன்

தோழிகளே சொல்லுங்கள்.

என் தோழி ஒருவர் திருமணமாகி 2 மாதங்கள் ஆகிரது.அவளுக்கு எப்போதும் கரெக்டாக பீரியட்ஸ் வந்துவிடுமாம்.இந்தமாதம் 5 நாட்கள் தள்ளிவிட்டது.அவள் என்னிடம் கேட்டாள்.நான் ஒருவேளை கன்சீவ் ஆகியிருப்பாய் டெஸ்ட் எடு என்றேன் இல்லை நாங்கள் இப்போது அதற்கான தடைகளை எடுத்துக்கொண்டுள்ளோம்.அதனால் அப்படியிருக்காது என்கிறாள்.

இன்று காலையிலிருந்து வெள்ளை படுகிரது மிகவும் கால்கள் குடைகிரது ஆனால் இரத்தப்போக்கு ஏற்படவில்லை என்கிறாள்.டக்டரிடம் அப்போஇன்ட்மென்ட் திங்கள்கிழமைதான் கிடைத்துள்ளது.அதர்குள் எனக்கு ஏதாவது வைத்தியம் சொல்லுங்கள் என்கிறாள்.

நான் பப்பாளிப்பழம் சாப்பிடலாம்
பைனாப்பிள் ஜூஸ் குடிக்கலாம் என சொல்லலாமா.தோழிகளே சொல்லுங்கள்.வேறு ஏதாவது கை வைத்தியம் சொல்லுங்கள்

தோழிகளே தயவு செய்து இங்கு வந்து எனக்கு உடனே பதில் அளியுங்கள்.

உடலில் உஷ்ணம் அதிகமானால் இந்த மாதிரி problem வரும்.
வெந்தயத்தை காலையில் எழுந்தவுடன் சிறிது வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்(தினமும்)

ஓ தேங்ஸ் பரிமளா,நான் என் தோழியிடம் சொல்கிரேன்.

இயற்கையிலேயே அதுவே தானாகவே தன் சுழற்சியை மேற்கொள்ளும்.இதற்காக இதை சாப்பிட்டால் சீக்கிரம் தீர்வு கிடைக்கும் என்று எதை வேண்டுமானாலும் உட்கொள்ள கூடாது.15 நாள் கூட சில பேருக்கு தள்ளி போகும்.அதனை ovulation problem என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.டென்ஷன்,நேரத்திற்க்கு சாப்பிடாமை கூட காரணமாக இருக்கலாம்.சில பேருக்கு பிரீயட்ஸ் வருவதற்க்கு முன் சில அறிகுறி(இடுப்பின் கீழ் வலி,மார்பு வலி,கால்வலி)தெரியும்,சில பேருக்கு அதுமாதிரி எதுவும் தெரியாது.பல பேருக்கு பிரீயட்ஸ் போது வயிர் வலிக்கும்,சிலருக்கு வலிக்காது.அது அவரவர் உடம்பை பொறுத்து உள்ளது.15 நாள் வரைக்கும் வெயிட் பண்ணலாம்.க்ளைமேட் சேஞ்ச் காரணமா கூட இப்படி இருக்கலாம்.

நம் தளத்திலேயே இதற்கான கைவைத்திய முறைகள் உள்ளது.

எனக்கும் இந்த மாதிரி இருந்தது.இப்ப இல்ல. நான் பெங்களூரில் வசிக்கிறேன். இங்கு அத்திப்பழம்(dry) கிடைக்கிறது. அதையும் சாப்பிடுகிறேன். இது பக்கத்து வீட்டு aunty சொன்னது. பெண்களுக்கு அத்திப்பழம் மிகவும் நல்லதாம்

மேலும் சில பதிவுகள்