ஆப்பிள் பை

தேதி: November 14, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

இந்த ஆப்பிள் பை குறிப்பினை செய்து காட்டியவர், இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள். இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

ஆப்பிள் - 4 அல்லது 5
சீனி அல்லது ப்ரெளன் சீனி - 1/4 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
கருவாத்தூள்(cinnamon powder) - ஒரு சிட்டிகை
எலுமிச்சம் பழம் - ஒன்று
மாவு - 2 கப்
சீனி - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பட்டர் - 1/2 கப் (8 மேசைக்கரண்டி / 1 stick)


 

ஆப்பிளை கழுவிக் கொண்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். பட்டரை சிறுத் துண்டுகளாக வெட்டவும் (உருக்க வேண்டாம்). அவனை 425 F ல் வைத்து முன்பே சூடு செய்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு, சீனி சேர்த்து கலக்கவும்.
பின்னர் கலந்து வைத்திருக்கும் மாவுடன் பட்டரை சேர்த்து ஐஸ் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசையவும். (அழுத்த வேண்டாம்)
பின்னர் மாவை பாதியளவாக பிரித்து ப்ளாஸ்டிக் பையினுள் போட்டு ஃப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைக்கவும்.
எலுமிச்சை பழத்தின் தோலை துருவி ஒரு தேக்கரண்டி லெமன் செஸ்ட்(lemon zest) எடுத்து வைத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு ஒரு மேசைக்கரண்டி எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கி வைத்திருக்கும் ஆப்பிள் துண்டுகளுடன் ப்ரவுண் சீனி, உப்பு, கருவாத்தூள்சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த கலவையை ஒரு பானில் போட்டு அதனுடன் துருவிய லெமன் தோல், லெமன் ஜூஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து வேக விடவும். ஆப்பிள் துண்டுகள் வெந்து தண்ணீர் ஓரளவிற்கு வற்றியதும் எடுத்து மீதமுள்ள தண்ணீரை வடித்து விடவும். ஆப்பிள் துண்டுகள் கரைந்து விட கூடாது.
பிரிட்ஜில் வைத்திருக்கும் மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து பெரிய வட்டமாக தேய்க்கவும். பை பானிற்குள் வைக்கும் அளவிற்கு தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
இதை பட்டர் அல்லது பேக்கிங் ஸ்ப்ரே தடவிய 8 அங்குல பை பானிற்குள்(8' pie pan) வைத்து அதன் ஓரங்களை அழுத்தி விட்டு பானுடன் ஒட்டி விடவும். பார்க்க கிண்ணம் போல் இருக்கும்.
அதன் உள் வேக வைத்த ஆப்பிள் துண்டுகளால் முழுவதுமாக நிரப்பி விடவும்.
மீதமிருக்கும் மாவை எடுத்து சிறிய வட்டமான சப்பாத்தியாக தேய்த்து ஆப்பிளின் மேல் முழுவதுமாக மூடி வைக்கவும், அல்லது மாவை நீளவாக்கில் கீறிவிட்டு சிறுசிறுத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
அதை ஆப்பிள் நிரப்பி வைத்திருக்கும் பானில் பின்னல் போல் வைத்து அடியில் உள்ள மாவுடன் சேர்த்து அதன் ஓரங்களை ஒட்டும்படி மூடவும். மேலே வைத்து மூடிய பின்னர் ஓரங்களில் இருக்கும் மாவை எடுத்து விடவும். பின்னர் மாவின் மேல் ப்ரஷ்ஷால் சிறிது தண்ணீரை தடவி விட்டு ப்ரவுன் சீனியை தூவவும்.
பிறகு இதை முற்சூடு செய்து வைத்திருக்கும் அவனில் 25 - 30 நிமிடங்கள் வைத்து பேக் செய்து எடுக்கவும். சுவையான ஆப்பிள் பை தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Dear Narmatha,

Here you mentioned flour. what flour is this? wheat/maida/rice or plain flour?

Try and try again until you reach the target.

Anitha

Try and try again until you reach the target.

Anitha

lakshmi ravindran
this is looking very nice, i will try weekends

lakshmi ravindran