கருனைக்கிழங்கு வடை

தேதி: November 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

கருணைக்கிழங்கு - கால் கிலோ
பச்சைமிளகாய் - ஒன்று
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி(தேவைக்கு)
வெங்காயம் - ஒன்று (பொடியாக அரிந்தது)
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி துருவல் - கால் தேக்கரண்டி
மைதா,சோளமாவு, அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை மாவு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

கருணைக்கிழங்கை தோலெடுத்து மண்ணில்லாமல் கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி கால் தேக்கரண்டி உப்பு போட்டு வேகவைத்து ஆறியது தண்ணீரை வடித்து மசித்து கொள்ள வேண்டும்.
சோம்பு தூள், பச்சைமிளகாய், தேங்காய் துருவல், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவேன்டும்.
மசித்த கிழங்கில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், அரைத்த விழுது, வெங்காயம், மைதா, சோள மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு என அனைத்தையும் போட்டு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
தோசை தவாவில் எண்ணெயை ஊற்றி வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இப்ப தான் உங்க கருணைக்கிழங்கு வடை செய்தேன் நன்றாக இருந்தது மிக மிக சுவையாக இருந்தது நன்றி

ஜலீலாக்கா நேற்று வடை செய்தேன்.இவ்வளவு சுவையாக இருக்கும் என்று நான் எதிர்பாக்கவில்லை.சுவையும் மணமும் பிரமாதம்.நெக்ஸ்ட் வீக் மறுபடியும் செய்வதாக இருக்கிறேன்.கேட்டதும் சிரமம் பார்க்காமல் குறிப்பு தந்து உதவியதற்கு நன்றி ஜலிலாக்கா .

சுரேஜினி

டியர் சுரேஜினி,
நீங்கள் கருனை கிழங்கு வாங்கி வைத்து கொண்டு வடைய தேடுகிறீகளே என்று தான் அவசரமா உடனே கொடுத்தேன்.அதே மாதிரி செய்து பின்னூட்டம் உட்னே அனுப்பியமைக்கும் மிக்க நன்றி.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா உங்களுடைய குறிப்பில் கருனை கிழங்கு வடை மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஹாய் அக்கா எப்படி இருகிங்க இப்ப தான் உங்க கருணைக்கிழங்கு வடை செய்தேன் நன்றாக இருந்தது. நான் கொஞ்சம் பூண்டு தட்டிப்போட்டுசெய்தென்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

துஷ்யந்தி , பிரியா மிக்க நன்றி
பிரியா பூண்டு தட்டி போட்டா நல்ல மணமாக இருந்திருக்குமே.

கருனைகிழங்கு வடை செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க மகிழ்சி.
இப்படி செய்தாவது என்னை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்

Jaleelakamal