வெஜ் மிளகு குருமா

தேதி: November 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. தோல் நீக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், காலிபிளவர் - கலந்து 1/4 கிலோ
2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
4. பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
5. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
6. சோம்பு - 1/4 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 11/2 தேக்கரண்டி
8. தனியாத்தூள் - 11/2 தேக்கரண்டி
9. உப்பு
10. கையால் பொடித்த மிளகு - 2 தேக்கரண்டி
11. கொத்தமல்லி, கருவேப்பிலை

அரைக்க:

1. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
2. முந்திரி - 5
3. பாதாம் - 5
4. ஏலக்காய் - 2


 

காய்களை வேகவைத்து எடுத்து வைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் (அ) பட்டர் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் நிறம் மாற ஆரம்பித்ததும் பூண்டு சேர்க்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து பாதி வதக்கவும்.
இதில் கரம் மசாலா, மிளகாய் தனியா தூள், உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி, கருவேப்பிலை போட்டு கிளறவும்.
பின் அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.


பார்க்க மிகவும் அழகாகவும், சுவையாகவும் இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா, சாதம் அனைத்திர்க்கும் பொருந்தும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா இந்த குறிப்பை செய்தேன். மிளகின் மணத்துடன் மிகவும் நன்றாக இருந்தது . வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டோம். வெஜ் புலாவுடனும், பரோட்டாவுடனும் மிகவும் பொருத்தமாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

இதோ இந்த குருமாஇவைதான் தேடினேன்,சப்பாத்திக்கு ரெம்ப நல்லா இருந்த்து,என் பையன் காய்கறி குருமா சாப்பிட்டதை நினைத்தால் ரெம்ப ஆச்சரியம் தான்,ரெம்ப பிடித்துவிட்டது வனி எனக்கு

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மிக்க நன்றி வின்னீ. :)
மிக்க நன்றி ரேணுகா. பையன் சாப்பிட்டானா?! ரொம்ப சந்தோஷம் ரேணுகா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டின்னருக்கு பரோட்டாவிற்கு, இந்த வெஜ் மிளகு குருமா செய்தேன். நான் இதுவரை மிளகு சேர்த்துச் செய்ததில்லை, வித்தியாசமான சுவையோடு நன்றாகயிருந்தது. பாஸ்கர் தனக்கு, நாளை லன்ச்- ற்கு இதுதான் வேண்டும் வேறு ஒன்றும் செய்ய வேண்டாமென்று சொல்லீட்டான்ப்பா. அவன் இப்படிச் சொல்வது ரொம்ப ரேர். குறிப்புக்கும், காலையில் வேலையைக் குறைத்ததற்குமாகச் சேர்த்து ரொம்ப............. நன்றிப்பா.

அன்புடன்:-)...........
உத்தமி:-)

அப்பப்பா.... சம சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி உத்தமி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா உங்க வெஜ் மிளகு குருமா செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.மிளகு மணத்துடனும் ஏலக்காய் மணமும் கொண்டு அசத்தல் சுவையில் இருந்தது.ஆனா காரம் கொஞ்சம் அதிகமா இருந்தது.அடுத்த முறை காரம் கம்மி பண்ணி செய்யனும்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மிக்க நன்றி திவ்யா... என் சமையல் பொதுவாக காரம் அதிகமாக தான் இருக்கும். நீங்கள் முதன் முதலில் செய்வதால் உங்களுக்கு தெரியாமல் போயிருக்கும்... :) அடுத்த முறை குறைச்சிடுங்கோ. செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா