அதிகம் சமைத்து அசத்த போவது யாரு????

அதிரா ஆரம்பித்த சமைத்து அசத்தலாம் பகுதி வெற்றிகரமாக போகிறது.ஜலிலாக்காவின் சமையலில் நாம் செய்தவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.இதில் அனைவரது பெயரும் நீங்கள் செய்த குறிப்பும் சரியாக இருக்கிறதா என்று சொல்லிவிடுங்கள்.யாரையாவது விட்டு இருந்தால் தயவு செய்து கூறவும்...

ஆசியா உமர் - வெஜ் சூப்,இட்லிப்பொடி
சாந்தோ - புட்டு
இந்திரா - தயிர் சாதம்,முட்டை புளிக்கொழம்பு,புல்ஸ்
சுரேஜினி - கருனை கிழங்கு வறுவல்,கப்ஸாசோறு
ஸ்ரீ - அவரைக்காய் மசாலா,பாவ் பாஜி மாசாலா,கேபேஜ் முட்டை பொரியல்,காய்கறி சாம்பார்,ஓட்ஸ் ஹல்வா,தக்காளி சாதம்,ஈசி சென்னா மசாலா,
கோவைக்காய், பாகற்காய் கூட்டு
மாலதி - எள்ளோதரை,பருப்பு கீரை கூட்டு
தனிஷா - மிக்ஸ் வெஜிடபுள் சாமார், சில்லி சிக்கன்
தானு - வெஜ்-எக் ஃப்ரைட் ரைஸ்
வனிதா - சிக்கன் பிரியாணி,பூண்டு கோழி
சுகன்யா - மீன் குழம்பு
சீதாலெட்சுமி - கோதுமை தோசை,வெண்பொங்கல்
ஹாசினி - மேத்தி சிக்கன் மசாலா,சுக்கு மிளகு டீ
வத்சலா - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல்,
அம்முலு - முந்திரிப்பகோடா
கதீஜா - உருளைகிழங்கு வறுவல்,லெமென் ரைஸ் -2,சிக்கன் 65
அரசி - பருப்பு கீரை கூட்டு
கவி - காரமுட்டை தோசை, பருப்பு முருங்கை குழம்பு,வெஜ் பிரட் ரைஸ், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,கிரிஸ்ப்பி லாலிபாப் சிக்கன் பிரை,
மேனகா - கத்திரிக்காய் ரசம், அவரைக்காய் பொரியல்
அருன்பாலா - ஏலக்காய் டீ,வெஜிடபுள் குருமா
கவின் - வெஜ்குருமா
ஆயிஸ்ரீ - மட்டன் கீமா வெந்தயக் கீரை,வெள்ளை வெஜ் குருமா,ஆலு பரோட்டா (குழந்தைகளுக்கு) - 5, பாகற்காய் தக்காளி பொரியல்
விஜி - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,இனிப்பு சேமியா,வெஜ் குருமா
இலா - இட்லி மிளகாய் பொடி,மிளகு கோழி
சுஹைனா - மிளகுக் குழம்பு
சாதிகா - மாசி துவையல்
ரேணுகா - மட்டன் சுக்காவும்,மட்டன் தக்காளி கூட்டு,பாகற்க்காய் தக்காளி பொறியலும்,பாகற்காய் கோவக்காய் கூட்டு

ஜலிலாக்கா பார்க்கவே நல்லா இருக்கு.இந்த லிஸ்ட் இன்னும் நீளமா வந்தா நல்லா இருக்கும்.

ரேணுகா, அழகாகத் தொகுத்து இருக்கிறீர்கள், பாராட்டுகள்

அன்புடன்

சீதாலஷ்மி

ரேணுகா... என்னோடதுல "தக்காளி ஹல்வா" மிஸ் ஆயிறுச்சு. சேர்த்துக்கங்க plz.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மன்னிக்கவும். நான் செய்தது வெஜ் வெள்ளை குருமா. ஷீர் குரும கடந்த வாரம் செய்தேன். முடிந்தால் சேர்த்துக்கொள்ளுங்கள் ..இல்லாவிட்டால் பரவாயில்லை. உங்கள் முயற்சிக்கு பாரட்டுக்கள்.

இன்னொறு கருத்து...அந்த வாரம் முடிந்த பின் அதே இழையில் கடைசியில் இதைப்போல் தொகுத்துபின் அந்த இழையை முடித்து அடுத்த வாரம்...

சமைத்து அசத்தலாம்(சுபா/செல்வி) என புது திரட் ஆரம்பிக்கலாம்.

கவின் உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி.நானும் அது போல் தான் யோசித்து வைத்திருக்கிறேன்.சுபாவின் சமையல் ஆரம்பிக்கும் போது ஜலிலாக்காவின் சமயலில் சமைத்தவற்றை வரிசைபடுத்தலாம் என்ற என்னம்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி சீதாக்கா.அதிரா எடுத்த முயற்சியால் தான் இது சாத்தியம் ஆயிற்று.அதிராவின் இந்த முயற்சி பாதியில் நிற்காமல் வளர்ந்து கொண்டே வர என்னால் முடிந்த உதவி

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனிதா மீன்டும் மறுபதிப்பு போடும் போது சேர்த்து விடுகிறேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணுகா,
நல்ல யோசிச்சு,ரொம்ப அழகா கவனிச்சு,பொறுமையா படிச்சு,அழகா செய்தவரின் பேரும்,செய்த சமையலின் பேரும் கோர்த்து...இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.பாருங்களேன் இதுக்காகவே இன்னும் நிறைய பேர் இன்னும் 2 நாளில் அதிகமா சமைக்க போறாங்க!இப்படி ஒர் பதிவு போட்டு இங்கு ட்ரையல் எடுப்பதும் நல்லது தான்.

ஏன் சொன்னா,இனி நீங்க இதில் மாற்றம் செய்ய முடியாது.முடிவா போடும் போது,சில சமயம் ஏற்படும் தவறை இங்கே ஒருமுறை போட்டுட்டு,பிழையை திருத்தி அந்த பதிவில் போட வசதியா இந்த த்ரெட் நிச்சயமா துணை கொடுக்கும்!பாராட்டுக்கள்!

ஆகா ரேணுகா என்னால் கூட என்ன முடியல நீங்க கரெக்டாக கவனித்து இருக்கிறீர்கள் எல்லோரையும்.
அட எப்படி பா இப்படி எல்லாம் அசத்துகிறீர்கள்.
ஜலீலா

Jaleelakamal

ரேனு உண்மையில இந்த த்ரெட் ரொம்ப அருமையான ஐடியா..ஏன்னா இப்படி த்ரெட் போட்டபின் தான் அய்யோ நாம செய்யாம இருதா ஒரு மாதிரி இருக்குமேன்னு எதையாவது செய்ய தூண்டுது...நல்ல பொறுப்பா எடுத்து போட்டிருக்கீங்க...நான் ஜலீலகாவின் ஓட்ஸ்,சிக்கன் க்ரேவி செய்தேன்.

ஹலோ ரேணுகா எவ்வளவு பொறுமையா எல்லாருடையதையும் படித்து அழகாக வரிசைபடுத்தியுள்ளீர்கள்.ரேணுகா நான் 13 ம் தேதி ஜலீலா மேடத்தின் சாம்பார் சாத கூட செய்தே.ஆனால் அதை சாம்பார் சாதம் பகுதியில் பின்னூட்டம் கொடுத்தேன்.இங்கு தரவில்லை.ஓகே.மொத்தத்தில் ஜலீலாக்காவின் அனைத்து ரெஸிப்பியும் சூபெரா இருக்கும்னு நினைக்கிரேன்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல செய்த சிலவே நன்றாக இருந்தது.

மேலும் சில பதிவுகள்