அதிகம் சமைத்து அசத்த போவது யாரு????

அதிரா ஆரம்பித்த சமைத்து அசத்தலாம் பகுதி வெற்றிகரமாக போகிறது.ஜலிலாக்காவின் சமையலில் நாம் செய்தவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.இதில் அனைவரது பெயரும் நீங்கள் செய்த குறிப்பும் சரியாக இருக்கிறதா என்று சொல்லிவிடுங்கள்.யாரையாவது விட்டு இருந்தால் தயவு செய்து கூறவும்...

ஆசியா உமர் - வெஜ் சூப்,இட்லிப்பொடி
சாந்தோ - புட்டு
இந்திரா - தயிர் சாதம்,முட்டை புளிக்கொழம்பு,புல்ஸ்
சுரேஜினி - கருனை கிழங்கு வறுவல்,கப்ஸாசோறு
ஸ்ரீ - அவரைக்காய் மசாலா,பாவ் பாஜி மாசாலா,கேபேஜ் முட்டை பொரியல்,காய்கறி சாம்பார்,ஓட்ஸ் ஹல்வா,தக்காளி சாதம்,ஈசி சென்னா மசாலா,
கோவைக்காய், பாகற்காய் கூட்டு
மாலதி - எள்ளோதரை,பருப்பு கீரை கூட்டு
தனிஷா - மிக்ஸ் வெஜிடபுள் சாமார், சில்லி சிக்கன்
தானு - வெஜ்-எக் ஃப்ரைட் ரைஸ்
வனிதா - சிக்கன் பிரியாணி,பூண்டு கோழி
சுகன்யா - மீன் குழம்பு
சீதாலெட்சுமி - கோதுமை தோசை,வெண்பொங்கல்
ஹாசினி - மேத்தி சிக்கன் மசாலா,சுக்கு மிளகு டீ
வத்சலா - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல்,
அம்முலு - முந்திரிப்பகோடா
கதீஜா - உருளைகிழங்கு வறுவல்,லெமென் ரைஸ் -2,சிக்கன் 65
அரசி - பருப்பு கீரை கூட்டு
கவி - காரமுட்டை தோசை, பருப்பு முருங்கை குழம்பு,வெஜ் பிரட் ரைஸ், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,கிரிஸ்ப்பி லாலிபாப் சிக்கன் பிரை,
மேனகா - கத்திரிக்காய் ரசம், அவரைக்காய் பொரியல்
அருன்பாலா - ஏலக்காய் டீ,வெஜிடபுள் குருமா
கவின் - வெஜ்குருமா
ஆயிஸ்ரீ - மட்டன் கீமா வெந்தயக் கீரை,வெள்ளை வெஜ் குருமா,ஆலு பரோட்டா (குழந்தைகளுக்கு) - 5, பாகற்காய் தக்காளி பொரியல்
விஜி - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,இனிப்பு சேமியா,வெஜ் குருமா
இலா - இட்லி மிளகாய் பொடி,மிளகு கோழி
சுஹைனா - மிளகுக் குழம்பு
சாதிகா - மாசி துவையல்
ரேணுகா - மட்டன் சுக்காவும்,மட்டன் தக்காளி கூட்டு,பாகற்க்காய் தக்காளி பொறியலும்,பாகற்காய் கோவக்காய் கூட்டு

ஜலிலாக்கா பார்க்கவே நல்லா இருக்கு.இந்த லிஸ்ட் இன்னும் நீளமா வந்தா நல்லா இருக்கும்.

துஷ்யந்தி... சும்மா சொல்ல கூடாது.... நம்ம அதிரா சொன்ன மாதிரி ரேணுகா'வ குட்டி சொல்லனும். ;) என்ன ரேணுகா.... சரியா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிரா,வனிதா,துஷ்யந்தி மற்ற அனைவரும் கேட்டு கொள்ளுங்கள்.நான் அதிராவின் தலைபிலும் இங்கும் பல முறை கூறியிருக்கிறேன்.ஜலிலாக்கா சமையல் சமைத்தவர்கள் இங்கு அல்லது அதிரா பதிவில் போட்டால் தான் நான் கணக்கெடுக்க முடியும் என்று.துஷ்யந்தி நீங்கள் அதிராவின் பதிவில் 2 குறிப்பு மட்டும் தான் போட்டுள்ளீர்கள்.அதை தான் நான் கணக்கெடுக்க முடியும்.மேலும் நான் நேற்று இரவு ஒரு இரவு 2 மணி வரை அனைத்தையும் சரிபார்த்து விட்டு இங்கு பதிவு போட்டேன்.யாருடையதாவது விடுபட்டு இருந்தாள் இந்திய நேரப்படி மதியம் 1 குள் தெரிவிக்கவும் என்று....அதற்க்கு முன் நீங்கள் போட்டு கவனிக்காமல் விட்டிருந்தால் தான் பிரச்சனை.இனி மாற்றுவது கடினமே...கோவிக்காதீங்க....இதில் என் தவறு ஏதும் இல்லை என நான் நினைக்கிறேன்......

வனிதா நீங்க இருந்தாலும் ரெம்ப மோசம்ப்பா என்ன குட்ட ஏன் உங்கலுக்கு இவ்வளவு ஆவல்....அதனால் உங்கள் ஆவலை நிறைவேற்ற தலைகுனிந்து காத்திருக்கிறேன்.வலிக்காமல் மெதுவா குட்டுங்கப்பா....நான் ரெம்ப பாவம்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

துஷ்யந்தி மாற்றிவிட்டேன்.இப்பொழுது உங்களுக்கு திருப்திதானே.ஆஹா உங்கள் முகத்தின் பிரகாசம் என் கண்கள் எல்லாம் கூசுகிறது....

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா ரெம்ப தேக்ஸ்ப்பா...ரெம்ப பொறுப்பா என்னை காப்பாத்தி,போட்டு குடுத்ததுக்கு எல்லாத்துக்கும் தான்....

இரண்டு அண்ணன்களை கூப்பிடவில்லை இருவரும் ஒருவர் தான்,அவரை இப்படி கூப்பிடாலாவது இங்க எட்டி பார்ப்பாரா என்றுதான் கூப்பிட்டேன்.

பாலு ரெம்ப சூடா இருக்குப்பா கொஞ்சம் ஆத்தி கொடுங்களேன்...

உங்களுடைய பாதி பூங்கொத்தையும் வாங்கிகிட்டேன்...ரெம்ப தேங்க்ஸ்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சச.... என்ன இது சிறுபுள்ள தனமா???? தலையில் குட்டுக்கு பதிலா கைய்யில் ஒரு ரோஜா கொடுத்திருக்கிறேன் தோழி.... சிறப்பான உங்கள் உழைப்பை பாராட்டி. :) சும்மா உலோலாய்க்கு..... குட்டு போட சொன்னேன். ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன அதிரா, வெறும் பால் தானா??? நீங்க கவலை படாதீங்க ரேணுகா.... அவங்க குடுத்த பால்'ல நான் பாதாம், பிஸ்தா சேர்த்து தற்றேன் (ஆத்தியும் தான்).

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் ரோஜாவை வாங்கி கொண்டேன்...குட்ட வந்த கை பூக்கொடுத்து சென்ற காரணம் என்னவோ..உங்கள் பாராட்டு நன்றி.நான் அதிராவிடம் பாதாம் பால் கேட்கலாம் என்று தான் எண்ணினேன்.பாவம் நேரமில்லாமல் இருப்பதால் விட்டுவிட்டேன்...அதான் நீங்க தரிங்கல்ல அப்பறம் எனக்கென்ன கவலை.....

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆனாலும் இந்த கணக்கெடுப்புக்கு உங்களுக்கு ரொம்பப...... பொறுமை தேவைப்பட்டிருக்கும் சகோதரி.உண்மையில் தங்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா கைதட்டுபா.இழையை தொடங்கியது அதிராவாக இருந்தாலும்,மனமுவந்து இந்த கணக்கெடுப்பை கண்ணும்கருத்துமாய் எடுத்ததற்க்கு என்னுடைய பாராட்டுக்கள்!அதிரா உங்களுக்கும் என் பாராட்டுக்கள் பின்னே வெற்றிகரமா முதல் எபிசோடை இனிதே முடித்ததற்க்கு!திங்கட்கிழமை அடுத்த எபிசோட் அரம்பிக்க போகுதா?அதுவும் இதுபோல் இனிமையா அமைய என் வாழ்த்துக்கள்!!

கலக்கறீங்கபா எல்லாரும்...

நானும் குறிப்பெல்லாம் எடுத்துதான் வைக்கறேன்..ஆனா இன்னைக்கு நாளைக்குன்னு தள்ளி போயிடுது :-(

உங்களோட அடுத்த எபிசோட் ல கண்டிப்பா கலந்துக்கறேன்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

அதிர உக்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.வாழ்த்துக்கள்.பட்டிமன்றத்தில் ஹாட் டீ கேட்டீங்க.அப்போ எதிரணியில் இருந்ததால் தரவில்லை.அப்புறம் தெம்பா வாதாடிடுவீங்களெங்கற நல்ல எண்ணம்தான் :)).இப்ப புடிங்க ஹாட் டீயும் மிளகாய் பஜ்ஜியும்.
ரேணுகா ஆனாலும் உங்களுக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி.எப்படீப்பா இதெல்லாம்?வாழ்த்துக்கள்.அப்புறம் வாங்கிகோங்க தங்க வளையல்.
(வளையலுக்கு காசா?அப்படீன்னா என்ன?)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்