அதிகம் சமைத்து அசத்த போவது யாரு????

அதிரா ஆரம்பித்த சமைத்து அசத்தலாம் பகுதி வெற்றிகரமாக போகிறது.ஜலிலாக்காவின் சமையலில் நாம் செய்தவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.இதில் அனைவரது பெயரும் நீங்கள் செய்த குறிப்பும் சரியாக இருக்கிறதா என்று சொல்லிவிடுங்கள்.யாரையாவது விட்டு இருந்தால் தயவு செய்து கூறவும்...

ஆசியா உமர் - வெஜ் சூப்,இட்லிப்பொடி
சாந்தோ - புட்டு
இந்திரா - தயிர் சாதம்,முட்டை புளிக்கொழம்பு,புல்ஸ்
சுரேஜினி - கருனை கிழங்கு வறுவல்,கப்ஸாசோறு
ஸ்ரீ - அவரைக்காய் மசாலா,பாவ் பாஜி மாசாலா,கேபேஜ் முட்டை பொரியல்,காய்கறி சாம்பார்,ஓட்ஸ் ஹல்வா,தக்காளி சாதம்,ஈசி சென்னா மசாலா,
கோவைக்காய், பாகற்காய் கூட்டு
மாலதி - எள்ளோதரை,பருப்பு கீரை கூட்டு
தனிஷா - மிக்ஸ் வெஜிடபுள் சாமார், சில்லி சிக்கன்
தானு - வெஜ்-எக் ஃப்ரைட் ரைஸ்
வனிதா - சிக்கன் பிரியாணி,பூண்டு கோழி
சுகன்யா - மீன் குழம்பு
சீதாலெட்சுமி - கோதுமை தோசை,வெண்பொங்கல்
ஹாசினி - மேத்தி சிக்கன் மசாலா,சுக்கு மிளகு டீ
வத்சலா - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல்,
அம்முலு - முந்திரிப்பகோடா
கதீஜா - உருளைகிழங்கு வறுவல்,லெமென் ரைஸ் -2,சிக்கன் 65
அரசி - பருப்பு கீரை கூட்டு
கவி - காரமுட்டை தோசை, பருப்பு முருங்கை குழம்பு,வெஜ் பிரட் ரைஸ், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,கிரிஸ்ப்பி லாலிபாப் சிக்கன் பிரை,
மேனகா - கத்திரிக்காய் ரசம், அவரைக்காய் பொரியல்
அருன்பாலா - ஏலக்காய் டீ,வெஜிடபுள் குருமா
கவின் - வெஜ்குருமா
ஆயிஸ்ரீ - மட்டன் கீமா வெந்தயக் கீரை,வெள்ளை வெஜ் குருமா,ஆலு பரோட்டா (குழந்தைகளுக்கு) - 5, பாகற்காய் தக்காளி பொரியல்
விஜி - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,இனிப்பு சேமியா,வெஜ் குருமா
இலா - இட்லி மிளகாய் பொடி,மிளகு கோழி
சுஹைனா - மிளகுக் குழம்பு
சாதிகா - மாசி துவையல்
ரேணுகா - மட்டன் சுக்காவும்,மட்டன் தக்காளி கூட்டு,பாகற்க்காய் தக்காளி பொறியலும்,பாகற்காய் கோவக்காய் கூட்டு

ஜலிலாக்கா பார்க்கவே நல்லா இருக்கு.இந்த லிஸ்ட் இன்னும் நீளமா வந்தா நல்லா இருக்கும்.

அட்மின் அண்ணா
நான் சில நாட்களாக அருசுவையை பார்வை இடாததால் இது என் கண்ணுக்கு படாமல் போகிற்று என் பதிவில் இருக்கும் குறிப்புகளையும் [போட்டே தீரனும் ஆமா சொல்லிபுட்டேன் :( இல்லைனா அழுதுடுவேன் ஆமா :))

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

கவிசிவா உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிப்பா....ஆனாலும் தங்க வளையல் வாங்கிக்க சொல்லிட்டு காசு கேட்டுடுவேண்ணு காசா அப்படின்னா என்று அப்பாவியா கேட்டுட்டு போயிட்டா எப்படி?ரெம்பவே உசாரா இருக்கீங்க

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆசியா ஆளுயர மாலை போட்டா எப்படிப்பா நாங்க தாங்கறது...ஆமாம் எங்கள் இருவரின் உயரத்தையும் நீங்கள் எப்போ கணக்கெடுத்தீங்க......

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

செல்விக்கா ரெம்ப நன்றி.எல்லாரும் அடுத்து உங்கள் சமையலை அசத்த தயாராகிறோம்....நீங்களும் சீக்கிரம் ரெடியாகவும் எங்களுக்கு சந்தேகங்களை தீர்க்க

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மர்ழியா இத்தனை குறிப்புகள் செய்துவிட்டு இப்பொழுது சொல்லிவிட்டீர்களே....எனக்கு மிகவும் கவலையாக உள்ள்து..

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

கவலை வேணாம் அட்மினை விட்டால்தானே போதாக்குறைக்கு மெயில் இருக்கு அப்பவும் போடலேனா போன் இருக்கு அதோட அருமையான அண்ணி இருக்காங்க புல் சப்போட்டுக்கு ஒரு வலி பண்ணிட மாட்டேன் :D

ஒரு முடிவோடதானே களத்தில் இறங்கி இருக்கேன்..ஹா ஹா நல்ல பிள்ளையாக போட்டால் அட்மினுக்கு நல்லது :))

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சகோதரி அதிரா அவர்கள் ஆரம்பித்துவைத்து, அவருக்கு உற்ற துணையாய் இருந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் சகோதரி ரேணுகா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் இருவரையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை, மனமார வாழ்த்துவதைத் தவிர. இதுப் போலவே எல்லோருடைய ஆதரவுடன் தொடர்ந்து இதை நடத்துமாரு கேட்டுக் கொள்கின்றேன். இந்த பகுதியில் உங்களுடன் சேர்ந்து என்னால் பங்கு பெற் முடியாமல் போய்விட்டது என்றாலும் எனது பின்னூட்டம் கட்டாயம் இடம் பெறும், இனி அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கின்றேன், நன்றி.

சகோதரி ஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.சமையற் குறிப்புகளின் அசத்தல் ராணியே 16 குறிப்புகளை செய்துப் பார்த்து முதன்மையான இடத்தை பெற்றுவிட்டீர்கள் பாராட்டுகள்.தொடர்ந்து உங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் என் வாழ்த்துக்கள்.

வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறோம்
எங்களை வாழ்த்திப் பாராட்டியுள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி... நன்றி...

கவிசிவா இது நிஞாயமே இல்லை, எதிரணியில் இருந்தபோது ரீ தராமல் இப்பதந்தால் நான் வாங்குவேனோ... வாய் அப்படித்தான் சொல்லும் கையை நீட்டுகிறேன் தாங்கோ... இருந்தாலும் இந்த ரேணுகா சுத்த மோசம், நான் கொடுத்த காப்பு அளவோ இல்லையோ எனச் சொல்லவே இல்லை:)

மர்ழியா, அடுத்த குறிப்பில் அசத்துங்கோ, நீங்கதானே சொன்னீங்க இதுக்கு மேல் என்னால் முடியாது என்று... பின்னர் செய்துபோட்டு எங்களுக்குச் செய்ததைச் சொல்லாமல் சாப்பிட்டுப் போட்டு இப்ப வந்து மெலே கீழே குதிக்கலாமோ?.. சரி பட்டியலில் இல்லாதுவிட்டாலும் இத் தலைப்பில்தானே இருக்கிறது றிலாக்ஸ், இனி அடுத்த தலைப்பில் உடனேயே வந்து சொல்லிப்போடுங்கோ சரியா?
மனோஹரி அக்கா, நிட்சயம் இனிமேல் வந்து கலந்துகொள்ளுங்கள்... மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

முதலாம்பகுதியை வெற்றிகரமாக நடத்திமுடித்த அதிராவிற்கும்,ரேணுகாவிற்கும் வாழ்துக்களும் பாராட்டுக்களும்.இரண்டாம்பகுதி வரும் திங்கள் என்று
அறிவித்திருக்கிறீர்கள்.இப்படியே எல்லோரும் ஆதரவு
வழங்குவார்கள் என நம்புகிறேன்.தொடரட்டும் உங்கள்
இருவரது பணி.

அசத்தல் ராணி என பெயர் எடுத்த ஸ்ரீக்கு வாழ்த்துக்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

மேலும் சில பதிவுகள்