அதிகம் சமைத்து அசத்த போவது யாரு????

அதிரா ஆரம்பித்த சமைத்து அசத்தலாம் பகுதி வெற்றிகரமாக போகிறது.ஜலிலாக்காவின் சமையலில் நாம் செய்தவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.இதில் அனைவரது பெயரும் நீங்கள் செய்த குறிப்பும் சரியாக இருக்கிறதா என்று சொல்லிவிடுங்கள்.யாரையாவது விட்டு இருந்தால் தயவு செய்து கூறவும்...

ஆசியா உமர் - வெஜ் சூப்,இட்லிப்பொடி
சாந்தோ - புட்டு
இந்திரா - தயிர் சாதம்,முட்டை புளிக்கொழம்பு,புல்ஸ்
சுரேஜினி - கருனை கிழங்கு வறுவல்,கப்ஸாசோறு
ஸ்ரீ - அவரைக்காய் மசாலா,பாவ் பாஜி மாசாலா,கேபேஜ் முட்டை பொரியல்,காய்கறி சாம்பார்,ஓட்ஸ் ஹல்வா,தக்காளி சாதம்,ஈசி சென்னா மசாலா,
கோவைக்காய், பாகற்காய் கூட்டு
மாலதி - எள்ளோதரை,பருப்பு கீரை கூட்டு
தனிஷா - மிக்ஸ் வெஜிடபுள் சாமார், சில்லி சிக்கன்
தானு - வெஜ்-எக் ஃப்ரைட் ரைஸ்
வனிதா - சிக்கன் பிரியாணி,பூண்டு கோழி
சுகன்யா - மீன் குழம்பு
சீதாலெட்சுமி - கோதுமை தோசை,வெண்பொங்கல்
ஹாசினி - மேத்தி சிக்கன் மசாலா,சுக்கு மிளகு டீ
வத்சலா - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல்,
அம்முலு - முந்திரிப்பகோடா
கதீஜா - உருளைகிழங்கு வறுவல்,லெமென் ரைஸ் -2,சிக்கன் 65
அரசி - பருப்பு கீரை கூட்டு
கவி - காரமுட்டை தோசை, பருப்பு முருங்கை குழம்பு,வெஜ் பிரட் ரைஸ், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,கிரிஸ்ப்பி லாலிபாப் சிக்கன் பிரை,
மேனகா - கத்திரிக்காய் ரசம், அவரைக்காய் பொரியல்
அருன்பாலா - ஏலக்காய் டீ,வெஜிடபுள் குருமா
கவின் - வெஜ்குருமா
ஆயிஸ்ரீ - மட்டன் கீமா வெந்தயக் கீரை,வெள்ளை வெஜ் குருமா,ஆலு பரோட்டா (குழந்தைகளுக்கு) - 5, பாகற்காய் தக்காளி பொரியல்
விஜி - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,இனிப்பு சேமியா,வெஜ் குருமா
இலா - இட்லி மிளகாய் பொடி,மிளகு கோழி
சுஹைனா - மிளகுக் குழம்பு
சாதிகா - மாசி துவையல்
ரேணுகா - மட்டன் சுக்காவும்,மட்டன் தக்காளி கூட்டு,பாகற்க்காய் தக்காளி பொறியலும்,பாகற்காய் கோவக்காய் கூட்டு

ஜலிலாக்கா பார்க்கவே நல்லா இருக்கு.இந்த லிஸ்ட் இன்னும் நீளமா வந்தா நல்லா இருக்கும்.

மனோஹரி அக்கா,
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. ஏதோ என்னால் முடிந்தது, இந்த வாரம் - ஜலிலாக்காவின் குறிப்புகள் நிறைய செய்து பார்க்க முடிந்தது குறித்து எனக்கு ரொம்பவே சந்தோஷம்.

இனிவரும் வாரங்களிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து என் பங்களிப்பை தொடர கட்டாயம் முயற்சி செய்கிறேன். நன்றி.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

வத்சலா அவர்களுக்கு,
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! : )

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

முதலாம்பகுதியை வெற்றிகரமாக நடத்திமுடித்த அதிராவிற்கும்,ரேணுகாவிற்கும் வாழ்துக்களும் பாராட்டுக்களும்.இரண்டாம்பகுதி வரும் திங்கள் என்று
அறிவித்திருக்கிறீர்கள்.இப்படிய எல்லோரும் ஆதரவு
வழங்குவார்கள் என நம்புகிறேன்.தொடரட்டும் உங்கள்
இருவரது பணி.

அசத்தல் ராணி என பெயர் எடுத்த ஸ்ரீக்கு வாழ்த்துக்கள்

இனிவரும் வாரங்களிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் பங்களிப்பை தொடர கட்டாயம் முயற்சி செய்கிறேன். நன்றி.
விஜி

அன்பு தோழிகளே,

பயந்துட்டீங்களாங்கோ அதெல்லாம் உல்லலாயிக்குதாங்கோ போட்டால்தான் செய்தோம்னு சொல்லனும்னு இருக்கா என்ன?உங்க திரட்டைதான் அன்று கவனித்தேன் இந்த திரட் பார்கல...அதோட அன்றே பார்த்து இருந்தாலும் என்னால் அப்பவே பதிவு போட்டு இருக்கவும் முடியாது...நேர்றுதான் முடிஞ்சது சரி நம்ம பங்குக்கு போடலானு போட்டேன் என் செல்ல அக்காவிற்க்காக!!!அதோட சும்மா காலாய்ச்சல் அவ்லோதான் ள்:D

அதிரா ரேனு ஸ்ரீ உங்க மூவருக்கும் வாழ்த்துகள்!!!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நல்ல நோக்கத்துடன் இந்த இழையை ஆரம்பித்த அதிரா வுக்கும் ரேணுவிக்கும். பட்டம் வென்ற ஷிரிக்கும் வாழ்த்துக்கள்.

அன்புள்ள
என் கேள்விக்கு உடன் பதில் தந்தமைக்கு மிகுந்த நன்றி.உங்களுக்கும் ,ரேனுகாவிற்க்கும், ஸ்ரீக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

பர்வீன்.

இந்தப் பகுதியை ஆரம்பித்து சிறப்பாக நடத்திச் சென்ற அதிராவுக்கும், ரேணுகாவுக்கும், அதிக குறிப்புக்கள் செய்து சிறப்பித்த ஸ்ரீக்கும் எனது வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி, அடுத்த புதுத் தலைப்பு.... ஆரம்பமானதும் எங்களோடு கைகொடுங்கோ... மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்புச் சகோதரிகள் அதிரா மற்றும் ரேணுகாவிற்கு எப்படி இருக்கீங்க? இந்த தலைப்பில் திருமதி ஜலீலாவின் குறிப்புகளை செய்துப் பார்க்க வாய்ப்பளித்தமைக்கு உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள் இந்த வாரயிறுதியை அதற்கு பயன்படுத்திக் கொண்டேன். அதில் அவர்களின் ரவை கிச்சடி, சாம்பார், ராஜ்மா சாலட், ரொட்டி, மீன் பஜ்ஜி, ஆகியவற்றை செய்து மகிழ்ந்து, பின்னூடமும் அனுப்பிவிட்டேன். உங்களுக்கும் அதை தெரிவிக்கின்றேன், இனி அடுத்து வரும் திருமதி செல்வியின் வாரத்திலும் என்னாலான பங்களிப்பை தருகின்றேன் உங்கள் பணி மேலும் சிறக்க எனது அன்பான வாழ்த்துக்கள்.நன்றி.

அருசுவை சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்
எனக்கு சில தினங்களாக அருசுவைய்யில் கூட்டாஞ்சோறு பகுதியினை க்ளிக் செய்தால் too many canectionsஎன்று வருகிறது,எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கிறதா?இல்லை எல்லோருக்கும் இப்படியா?அடுத்து செல்வி அக்காவின் குறிப்புகளை செய்து பார்க்க ஆவளுடன் இருந்தேன் இப்படி சதி செய்கிறதே!

மேலும் சில பதிவுகள்