அதிகம் சமைத்து அசத்த போவது யாரு????

அதிரா ஆரம்பித்த சமைத்து அசத்தலாம் பகுதி வெற்றிகரமாக போகிறது.ஜலிலாக்காவின் சமையலில் நாம் செய்தவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.இதில் அனைவரது பெயரும் நீங்கள் செய்த குறிப்பும் சரியாக இருக்கிறதா என்று சொல்லிவிடுங்கள்.யாரையாவது விட்டு இருந்தால் தயவு செய்து கூறவும்...

ஆசியா உமர் - வெஜ் சூப்,இட்லிப்பொடி
சாந்தோ - புட்டு
இந்திரா - தயிர் சாதம்,முட்டை புளிக்கொழம்பு,புல்ஸ்
சுரேஜினி - கருனை கிழங்கு வறுவல்,கப்ஸாசோறு
ஸ்ரீ - அவரைக்காய் மசாலா,பாவ் பாஜி மாசாலா,கேபேஜ் முட்டை பொரியல்,காய்கறி சாம்பார்,ஓட்ஸ் ஹல்வா,தக்காளி சாதம்,ஈசி சென்னா மசாலா,
கோவைக்காய், பாகற்காய் கூட்டு
மாலதி - எள்ளோதரை,பருப்பு கீரை கூட்டு
தனிஷா - மிக்ஸ் வெஜிடபுள் சாமார், சில்லி சிக்கன்
தானு - வெஜ்-எக் ஃப்ரைட் ரைஸ்
வனிதா - சிக்கன் பிரியாணி,பூண்டு கோழி
சுகன்யா - மீன் குழம்பு
சீதாலெட்சுமி - கோதுமை தோசை,வெண்பொங்கல்
ஹாசினி - மேத்தி சிக்கன் மசாலா,சுக்கு மிளகு டீ
வத்சலா - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,பாகற்காய் தக்காளி பொரியல்,
அம்முலு - முந்திரிப்பகோடா
கதீஜா - உருளைகிழங்கு வறுவல்,லெமென் ரைஸ் -2,சிக்கன் 65
அரசி - பருப்பு கீரை கூட்டு
கவி - காரமுட்டை தோசை, பருப்பு முருங்கை குழம்பு,வெஜ் பிரட் ரைஸ், செட்டிநாடு ஸ்பைசி சிக்கன்,கிரிஸ்ப்பி லாலிபாப் சிக்கன் பிரை,
மேனகா - கத்திரிக்காய் ரசம், அவரைக்காய் பொரியல்
அருன்பாலா - ஏலக்காய் டீ,வெஜிடபுள் குருமா
கவின் - வெஜ்குருமா
ஆயிஸ்ரீ - மட்டன் கீமா வெந்தயக் கீரை,வெள்ளை வெஜ் குருமா,ஆலு பரோட்டா (குழந்தைகளுக்கு) - 5, பாகற்காய் தக்காளி பொரியல்
விஜி - கேழ்வரகு இனிப்பு ரொட்டி,இனிப்பு சேமியா,வெஜ் குருமா
இலா - இட்லி மிளகாய் பொடி,மிளகு கோழி
சுஹைனா - மிளகுக் குழம்பு
சாதிகா - மாசி துவையல்
ரேணுகா - மட்டன் சுக்காவும்,மட்டன் தக்காளி கூட்டு,பாகற்க்காய் தக்காளி பொறியலும்,பாகற்காய் கோவக்காய் கூட்டு

ஜலிலாக்கா பார்க்கவே நல்லா இருக்கு.இந்த லிஸ்ட் இன்னும் நீளமா வந்தா நல்லா இருக்கும்.

மனோஹரி அக்கா, ரஸியா
மனோஹரி அக்கா, பிந்தினாலும் சமைத்து அசத்திவிட்டீங்களே, கொஞ்சம் முன்னே செய்திருந்தால் லிஸ்டில் பெயர் வந்திருக்கும், பறவாயில்லை, அடுத்தடுத்த லிஸ்டில் உங்கள் பெயரும் இடம்பெறட்டும்.

ரஸியா, எனக்கும் சிலவேளைகளில் அப்படி வருகிறது, சுகன்யாவும் சொன்னதாக ஞாபகம், இருந்தாலும் விட்டுவிடுவோமா?... தட்டித் தட்டி பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.

நான் இப்பவே பகுதி 2 இற்கான தலைப்பை போடப்போகிறேன், ஆனால் நாளை இலங்கை, இந்திய நேரப்படி காலையில் இருந்து கணக்கெடுப்பு ஆரம்பமாகும். எல்லோரும் ஆர்வத்தோடு இருப்பதைப்பார்க்க எனக்கும் ஆர்வம் அதிகமாகிறது. மீண்டும் அனைவருக்கும் நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எப்படி இருக்கீங்க?அப்பாடி எனக்கு மட்டுமல்ல்,மற்ரவர்களுக்கு இருப்பது அறிந்து ரொம்ப நிம்மதி!:-)
நானும் தினமும் கூட்டாஞ்சோறு தலையில கொட்டோகொட்டுன்னு கொட்டிகிட்டு தான் இருக்கேன் திறக்கமாட்டேங்கிறதே!பார்ப்போம் இல்லையின்னா ஒவ்வொரு பகுதிக்கா போய் செல்வி அக்காவின் குறிப்பை தேடவேண்டியது தான் அவர்கள் குறிப்பு திறக்க முடிந்தால் நமக்கு தேடுதல் வேட்டயின் நேரம் மிச்சமாகும் பார்ப்போம்,அவர்கள் குறிப்பைய்யும் செய்து அசத்துவோம்!

அறுசுவையை ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமானோர் access செய்யும்போது இந்த error message தோன்றும். தற்போது அறுசுவையை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது ஒரு காரணம். அடுத்த காரணம், சிலர் அறுசுவையை அப்படியே டவுன்லோடு செய்ய நினைப்பது. அவர்களின் IP address ஐ கண்டறிந்து அவர்கள் அறுசுவை தளத்தை access செய்ய இயலாதவாறு ban செய்து வருகின்றோம். மற்றொரு காரணம், சில பக்கங்களின் அளவு (page size) அதிகமாய் இருப்பது.

அதிக அளவிலான பக்கங்களை ஒரே நேரத்தில் பலர் திறக்கும்போது, அது சர்வர் லோடினை அதிகரித்து, இந்த பிரச்சனையை உண்டாக்கும். அறுசுவைக்கு peak hours என்று சில மணி நேரங்கள் சொல்லலாம். அந்த நேரங்களில் நிறைய பேர் பார்வையிடுவார்கள். அப்போது இந்த பிரச்சனை உண்டாகும்.

இது நிரந்தரமானது அல்ல. இந்த பிரச்சனை வரும்போது தொடர்ந்து பக்கங்களை திறக்க முயற்சி செய்யாமல், சிறிது நேரம் விட்டுவிட்டு பின்னர் பக்கத்தினை திறந்தீர்கள் என்றால் எல்லாம் சரியாகியிருக்கும்.

அண்ணா நீங்கள் சொல்வது சரியாக இருகலாம்.
நான்internet explorer ல் திறக்கும் போது அப்படி வருகிறது ஆனால் mozillaa firefoxல் திறக்கும் போது உடன் திறக்கிறது!

மேலும் சில பதிவுகள்