சாப் சோய்

தேதி: November 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பேபிகார்ன் - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 4
பூண்டு - 6 பல்
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
க்ரீன் சில்லிசாஸ் - 1 சில்லிசாஸ்
அஜீனமோட்டோ - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
கார்ன்மாவு - டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


 

பேபிகார்னை ஒரு இன்ச் நீளத்திற்கும் வெங்காயத்தை நீளமாகவும் நறுக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மெலிதாக நறுக்கிய பூண்டை சிவந்து விடாமல் வதக்கவும்.
இத்துடன் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
நீளவாக்கில் வெட்டிய மிளகாய் பேபிகார்ன் சேர்க்கவும்.
சாஸ்வகைகள், அஜீனமோட்டோ, உப்புடன் 1/4 கப் நீர் சேர்த்து வேக வைக்கவும்.
மேலும் 1/4 டம்ளர் நீரில் கார்ன்மாவை கரைத்து ஊற்றி பத்து நிமிடம் சிம்மில் வைத்து வேக செய்யவும்.
சப்பாத்தி, நாண், குல்சா போன்றவைக்கு ஏற்ற சைனீஸ் சைட் டிஷ்


மேலும் சில குறிப்புகள்