இலங்கைத் தோழிகள் சங்கம் பாகம்3

இந்த மண் எங்களின் சொந்த மண்.....

#தோழிகள் சங்கம் ஈழம்#

தமிழே உயிரே வணக்கம்
தாய் பிள்ளை உறவம்மா
எனக்கும்
உனக்கும்

அன்னை இந்திராவின் 91 வது பிறந்ததினம் இன்று.....

"ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே"

ஹாய் சுரேஜினி,தனு எப்படி இருக்ரிங்கள்? சாரிப்ப்பா எனது யாஹூ மெயில் work பன்னலை
இது எனது hotmail add பன்னிகோங்க
anpudan thusi

மறைந்து போனாலும்
மறந்து போகாத.....
பிறப்பின் சிறப்பை
உலகுக்கு நாட்டிய...
பாரதம் பெற்றெடுத்த
தன்னிகரில்லாத்தாய்

ஈழதோர் பிரச்சனையில்
இன்முகம் காட்டி
நின் கரம் நீட்டி
எங்கள் மனங்களில்
இன்னமும் வாழும் அன்னை
இந்திராகாந்தி

பதவியில் நீயிருந்ததால் இன்று
பரிதாபக்குரல் கேட்டு
பாராமுகம் காட்டிடாமல்
பக்கத்துணையாய் இருந்திருப்பாய்.

எல்லை கடக்கும்
எங்கள் துயர் தீர்க்க அன்னையே
இன்னொரு பிறவி
எடுத்துவர மாட்டாயா?

எம் மண்ணிற்காய் குரல் கொடுக்க
எம் மரணத்துக்காக குரல் கொடுக்க...
பிறந்துவா தாயே

சுரேஜினி

அனைவரும் நலமா,
வத்சலா எனது நண்பி Bielefeldஎனும் இடத்தில் இருக்கிறா. எனது மகளின் மிடில் நேம்தான் வானதி. 'V'இல் வர வேணும் அத்தோடு தமிழ் பெயராக இருக்க வேண்டும் எண்டு வைத்தது. (சாத்திரத்துக்காக அல்ல. சங்கீதத்துக்காக). உங்கள் மகன் பெயர் என்ன?

இமா, நீங்களும் இன்னும் லைஸென்ஸ் எடுக்கவில்லைய ? :) (ஒரு ஒற்றுமை எண்டீர்களே அதுதானே)

ஸுரேஜினி, கவிதை அருமை. எனக்கும் அன்னை இந்திராவைப் பிடிக்கும். எங்கள் பழைய பிரின்ஸிபல் ஒருவரும் அவரைப் போலதான். :)
நேரம் கிடைக்குதில்லை. பிறகு வாறான்.

-நர்மதா :)

நண்பிகள் எல்லோரும் நலமா? சுரேஜினி நீங்கள் எழுதிய கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா? ஏன் இணையத்தில் எழுதுவதில்லை. தொடர்ந்து எழுதுங்கோ. நர்மதா நலமாக இருக்கிறீர்களா? மகள் எப்படி இருக்கிறா? துஷியந்தி என்ன ஆளையே காணோம். துஷி நலமா? இமா,இலா, வத்சலா,வாணி,காயத்திரி,ஜீவி, வேணி,தாரணி விடுபட்ட நண்பிகள் அனைவரும் நலமா.அதிரா என்ன உங்கள் பெயரைக்காணவில்லை என யோசித்தீர்களா? உங்கள் அதிரடியான பதில்கள், கேள்விகளுக்காக ஸ்பெஷலாக சுகம் கேட்கிறேன்.இந்த வரிசையில் சுரேஜினியும் வருகிறா.அதிரா, சுரேஜினி, துஷி,துஷியந்தி, இமா நர்மதா இமெயிலில் தொடர்பு கொள்ள விருப்பம். பதில் தாருங்கள். துஷியின் ஐடி பார்த்தேன் மெயில் போடலாமா? நானும் ஜேர்மனியில்தான் இருக்கிறேன். பதில் தருங்கள். அன்புடன் அம்முலு

ஹாய் அம்முலு நான் நலம் நீங்கள் எப்படி இருக்ரிங்கள்?
தாரளமாக எனக்கு மெயில் போடுங்க நான் உங்கள் மெயிலை எதிர் பார்க்ரேன்

அன்புடன்
துஷி

ஹாய் நர்மதா, என் கம்பியூட்டரில் ஏதும் பிழையோ தெரியாது. உங்கள் கடைசிப் பதிவை முழுமையாகப் படிக்கமுடியவில்லை. நடுவில் உள்ள வரி மங்கலாகத் தெரிகிறது. ;-D.
சுரேஜினி, கவிதை நன்றாக இருக்கிறது.
அம்முலு உங்கள் குறிப்புப் பார்த்தேன். ஒரு சின்ன வேலை இருக்கிறது. கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. வேலை முடிந்ததும் நிச்சயம் உங்களோடு தொடர்புகொள்வேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

தோழிகளே எல்லாரும் நலமா?
சுரேஜினி நீங்கள் எழுதிய கவிதை மிகவும் நன்றாக உள்ளது.தொடர்ந்தும் எழுதுங்கள்.

நர்மதா, எனது மகனின் பெயர் மாருஷன்.அவர் 4ஆம்
வகுப்பு படிக்கிறார்.

அம்முலு நீங்கள் ஜேர்மனியில் எங்கு இருக்கிறீர்கள்?
நீங்கள் தாயகத்தில் எந்த இடம்? விரும்பினால் சொல்லுங்கோ.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஹலோ வத்சலா சுகமாக இருக்கிறீங்களா?நான் உங்கள் இடத்தில் இருந்து ஒரு 150 கி.மீ தூரம் தான். சீகன் என்ற இடத்துக்கு பக்கத்தில் ஒரு சிறிய கிராமம். எனக்கு ஒரு மகன் இருக்கிறார்.3ம் வகுப்பு. நீங்கள் வேலை செய்கிறீகளா? உங்களுக்கு கேக், ஐஸிங் செய்யத்தெரியும் என எழுதியிருந்தீர்கள். இணையத்தில் எழுதலாமே. எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி .அன்புடன் அம்முலு

மேலும் சில பதிவுகள்