அரட்டைக்கு அடிக்க வாங்க- 30

தோழிகளே மனம் விட்டு இங்கே பேசலாம்.எப்படி வேண்டுமானாலும் அரட்டை அடிக்கலாம்.மொத்ததில் எல்லோரும் வாங்க ஜாலியா பேச,சிரிக்க,குதூகலிக்க அட வாங்கப்பா எல்லோரும்!!!

அட ஆமாம்பா,எனக்கு இதில் மட்டும் கொஞ்ச அனுபவம் தான்.ஏன் சொல்லுங்க?அவள் குறும்பு செய்தால் நான் கொஞ்சம் திட்டி விடுவேன்.அவள் அவங்க அப்பாவை தொந்தரவு செய்தாலும்,நான் போய் ஏன்டீ செல்லம் இப்படி அப்பாவை படுத்துறேன்னு சொன்னா,அவளுக்கு என் மேல் தான் கோபம் வரும்.ஆனால் பாருங்க அவங்க அப்பா வாயே திறக்காம நல்ல பேர் வாங்கிடுவார்....

மர்ழி
நாங்க நல்ல இருக்கோம் பா..நீங்க நல்லா இருக்கீங்களா? உங்க குட்டியை இப்போதான் பார்த்தேன் பா..குட்டிக்கு உடம்பு முடியாம இருக்குனு சொல்லிருந்தீங்க?இப்போ எப்படி இருக்கா? சீக்கிரம் சரியாகிடுவா கவலைபடாதீங்க..
சுகன்
இப்போ கொஞ்சம் நம்பிக்கை வருது பா..எல்லாமே ரொம்ப கரெக்டா சொல்றீங்க அவங்க அப்பா நல்ல பேரு வாங்கும் போது எனக்கு அவங்க அப்பா மேலயும் ரொம்ப கோபம் வரும்..ரெண்டுபேரையும் கத்திவிட்டுருவேன்..சரி இனி கோபத்த குறைச்சுக்கிறேன்..

அட நீங்க வேறே பா!நமக்காவது கோபம் குறையறதாவது?அப்ப தான் இன்னும் கோபம் ஓவர் ஸ்பீட்ல் வரும்.பாருங்களேன்!சும்மான்னா நீங்க ஒரு 1 நாள் முழுக்க குழந்தை கிட்ட கோபப்படாம இருந்து பார்க்கலாம்னு யோசிச்சாலே போதும்,அடுத்த செகன்டே நமக்குள் இருக்கிற அந்த கோபம் வந்து எட்டி பார்த்து ஹாய் சொல்லிட்டு போயிடும்.அந்த கோபம் வந்து போனபின் அக்குழந்தையை பார்த்து ச்சே..இன்னிக்கு உன்கிட்ட கோபமே காட்டகூடாதுன்னு பார்த்தா,உன் மேல போய் கோபத்தை காட்டிட்டேனேன்னு ஃபில் பண்ண ஆரம்பிச்சிடுவோம்.... கஷ்டப்பட்டு ஒரு ப்ளேடு போட்டுட்டேன்பா..

ஒன்னு கவனிச்சீங்களா...நாம கோபப்படக்கூடாதுன்னு பேசிட்டு இருக்கும் போதே அந்த கோபம் என்ற வார்த்தையையே கிட்டத்தட்ட 10 முறை யூஸ் பண்ணிட்டேன்.இது தாம்பா அந்த கோபத்தோட மகிமை!!!

சுகன்!! நல்ல ஐடியாவா இருக்கு.. இப்படி ஒரு பத்தி கோவத்தை பற்றி சிறு குறிப்பு வரைக என்று கேட்ட மாதிரி எழுதுரீங்க்...

தாமரை.. ஏம்மா கவலைபடுறீங்க .. ஸ்கூலிற்க்கு போனால் பிரெண்ஸ் தான் வேனும் என்று சொல்லும் காலம் வெகு தூரமில்லை.. என் நண்பியின் மகள்.. "ஐ வான்ட் டு கோ டு ஸ்கூல் ஐ மிஸ் Amy " பாருங்க..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கோபத்தை கன்ட்ரோல் செய்வதை விட,அது வராம பாத்துக்க ட்ரை பண்ணலாம்.கோபத்தை அடக்கினால் அதுவே ஒரு டிப்ரெஷன் ஆகிடும் என்பது என் தனிப்பட்ட கணிப்புபா.ஓ... குறிப்பே எழுதிட்டேனா?அது என்னமோ கோபத்தை பற்றி எழுதும் போது அதுமேலேயே அவ்வளவு கோபம் வருது,ஏன்டா வருதுன்னு?

சுகன்... நீங்க சொல்வது 100% உண்மை.. எதை எதிர்க்கிறோமோ அது பன் மடங்கு பலத்துடன் திரும்பி வரும். இந்த டெக்னிக் முயற்சி செய்து பாருங்க.. ஒரு நாளைக்கு என் மகளுக்கு 10 கோபம் கோட்டா.. கணவருக்கு 5 . 10ஐ தாண்டினால் பேசுவதை நிறுத்துங்க.. குழந்தை என்ன செய்தாலும் கண்டுகாதீங்க... அதே போல கணவருக்கும்... கோவம் வரும்போது வாயும் திறந்திருந்தால் ரொம்ப கஷ்டம்.. ஒன்னு திட்டுவோம்.. இல்லை சாப்பிடுவோம் ( நான் ரெண்டு கேட்டகிரியும் தான்)

சாப்பாடு கொடுங்க எல்லா வேலையும் செயுங்க.. குழந்தை மாற்றத்தை உணர்வாள்.. இல்லைன்ன.. கொஞ்சம் அமைதியாக இருக்கும் போது. எடுத்து சொல்லுங்க.. பாரு.. இப்படி செய்ததால் அம்மாக்கு கோவம் வந்தது என்று. I am no expert. But worth a try

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எடுத்துசொல்லியே எனக்கு கோபம் வருதுப்பான்னா?நீங்க என்னடான்னா அதையே ரீட்ரை பண்ண சொல்றீங்க.நாம் அவ்வளவு தூரம் எடுத்துசொல்லியும் அதே தவறு திரும்பவும் அவர்கள் செய்யும் போது இன்னும் கோபமா வரும் தெரியுமோ.இதுக்கு ஒரே ஒர் ஐடியா தான்பா வச்சிருக்கேன்.யாராவது எப்பவாவது தப்பு செய்தாங்கன்னா,செய் எவ்வளவு முடியுமோ செய்மா...செய்...இப்படி சொல்லி சொல்லியே கோபத்தை விட்டுட்டு இருக்கேன்.

என்னது,10ஐ தாண்டினால் பேசுவதை நிறுத்துங்க.. குழந்தை என்ன செய்தாலும் கண்டுகாதீங்க...அதே போல கணவருக்கும்... இப்படி இருந்தேன்னு வச்சுக்குங்க,அப்பாடா நிம்மதின்னு ரெண்டு பேரும் ஆட்டம் போடுவாங்கப்பா..நான் வாயை மூடிட்டா,இன்னும் ரொம்ப சந்தோஷம்..திட்டிலிருந்து அவங்க பெரிய எஸ்கேப்...நானும் இந்த அமைதிலாம் ட்ரை பண்ணுவேன்,ஆனா அது ஃபேயிலியர்(failure) ஆயிடுதுப்பா.ஏன் சொல்லுங்க,நாம திட்டினாலோ,பேசிட்டாலோ அவங்க செய்த தப்பை உணர்ந்துடுறாங்க,ஆனால் சைலண்டா இருந்தா அவங்க வெறுப்பாகிடுவதுதான் உண்மை.

பொய் கோபம் காமியுங்கள். இதன் மூலம் நீங்கள் பாதிப்புக்குள்ளாக மாட்டீர்கள். எனக்குப்பிடிக்கலைனு சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுங்கள். வேறு வேலையில் மூழ்கிவிடுங்கள்.

பொய் கோபம் காமிக்க ஆரம்பிச்சு சீரியஸ் கோபம் வந்துடுச்சுன்னா?அந்த இடத்தை விட்டு போகிறது மூண்றாவது நபர் கிட்ட செய்யலாம்.இவங்க கிட்ட செய்ய மனசு வரலைபா.எனக்கு கோபமே வராது.அப்படியும் வரும் போது தான் இங்கே நான் கூறிய சில கருத்துக்கள்...பொதுவா பார்த்தீங்கன்னா,நம் மீது யாராவது கோபப்பட்டா,நமக்கு மனசு எவ்ளோ வலிக்கும்.

அதுபோல தான் நாம் அதை செய்யும் போது அவங்க மனசு வலிக்கும் என்று தோன்றும்.நானே என் மகளிடம் என்னை மீறி கோபப்படும் போது,அவ அழுவதை பார்த்ததும் ச்சே..கொஞ்ச நேரத்தில் நான் எப்படி என் பொறுமையை இழந்தேன்னு நினைக்க தோன்றிடும்.சரிப்பா இதுக்கு மேல நான் இத பத்தி பேசி யாரையும் போரடிக்க விரும்பலை...

Came across this in www.workingmother.com

http://www.newyorker.com/arts/critics/books/2008/11/17/081117crbo_books_acocella?currentPage=all

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்