கர்பதடை அலோசனை வழங்குங்களேன் பிளீஸ்!!!

ஹாய் பிரன்ஸ் நான் அருசுவைக்கு புதிது...என்னையும் உங்களில் சேர்த்து கொள்வீர்களா?எனக்கு இப்ப உங்கள் அனைவரின் உதவியும் தேவை உதவுவீர்கள என நம்புகிறேன்

எனக்கு ஒரு குழந்தை இருக்கு இப்ப நான் இரண்டாவது குழந்தை உண்டாகி இருக்கேன் 8 மாசம் ஆகிறது..இந்த டெலிவரியுடன் கர்பதடை செய்யலாம்னு நானும் என் கணவரும் முடிவு எடுத்து இருக்கோம் சூழ்நிலை காரணமாக....

ஆனால் அதை பற்றி எனக்கு எதுவுமே தெரிய வில்லை..நிறைய வகைகள் இருக்கா?ஏதோ லேசர் முறை என்ரெல்லாம் சொல்லுகிறார்கள் அது எப்படி என தெரிய வில்லை..பேம்லி பிலானிங்கில் ஏதும் தீங்கு ஏற்படுமா? எனக்கு அனேகமாக இந்த குழந்தை சிசேரியன் என தெரிகிறது அதோடயே இப்படி லேசர் முறையில் பேம்லி பிலேன் செய்யலாமா?அது நல்லதா?இல்ல்லை வேறு எந்த பேம்லி பிலான் நல்லது?எப்படி செய்வது சிறந்தது நன்கு தெரிஞ்சவங்க சொல்லுஙக பிளீஸ் உங்க பதிலுக்காக காத்திருக்கின்றேன்..

குறிப்பு:

பிற்காலத்தில் குழந்தை வேணும் என என்னினால் ரிலீஸ் செய்யும் பேம்லி பிலானிங் பற்றி சொல்லுங்களேன்...பேம்லி பிலானிங் செய்தால் உடல் எடை கூடுமா?பிலீடிங் பிராப்லம் ஏதும் வருமா?பிராப்லம் வராத பேம்லி பிலான் எது?

பதில்களை ரொம்ப ஆர்வமாக எதிர்பார்கிறேன்...எனக்கு உதவுங்கள்...நன்றி

எதிர்பார்புடன்,

நஹ்லீன்

ஹாய் பிரன்ஸ் நான் அருசுவைக்கு புதிது...என்னையும் உங்களில் சேர்த்து கொள்வீர்களா?எனக்கு இப்ப உங்கள் அனைவரின் உதவியும் தேவை உதவுவீர்கள என நம்புகிறேன்

எனக்கு ஒரு குழந்தை இருக்கு இப்ப நான் இரண்டாவது குழந்தை உண்டாகி இருக்கேன் 8 மாசம் ஆகிறது..இந்த டெலிவரியுடன் கர்பதடை செய்யலாம்னு நானும் என் கணவரும் முடிவு எடுத்து இருக்கோம் சூழ்நிலை காரணமாக....

ஆனால் அதை பற்றி எனக்கு எதுவுமே தெரிய வில்லை..நிறைய வகைகள் இருக்கா?ஏதோ லேசர் முறை என்ரெல்லாம் சொல்லுகிறார்கள் அது எப்படி என தெரிய வில்லை..பேம்லி பிலானிங்கில் ஏதும் தீங்கு ஏற்படுமா? எனக்கு அனேகமாக இந்த குழந்தை சிசேரியன் என தெரிகிறது அதோடயே இப்படி லேசர் முறையில் பேம்லி பிலேன் செய்யலாமா?அது நல்லதா?இல்ல்லை வேறு எந்த பேம்லி பிலான் நல்லது?எப்படி செய்வது சிறந்தது நன்கு தெரிஞ்சவங்க சொல்லுஙக பிளீஸ் உங்க பதிலுக்காக காத்திருக்கின்றேன்..

குறிப்பு:

பிற்காலத்தில் குழந்தை வேணும் என என்னினால் ரிலீஸ் செய்யும் பேம்லி பிலானிங் பற்றி சொல்லுங்களேன்...பேம்லி பிலானிங் செய்தால் உடல் எடை கூடுமா?பிலீடிங் பிராப்லம் ஏதும் வருமா?பிராப்லம் வராத பேம்லி பிலான் எது?

பதில்களை ரொம்ப ஆர்வமாக எதிர்பார்கிறேன்...எனக்கு உதவுங்கள்...நன்றி

அன்புடன்,
நஹ்லீன்

யாராவது பதில் சொல்லுங்களேன் பின்னாடி உதவும்.எனக்கும் இதனை பற்றி சரியா தெரியலை..செய்தவர்கள் சொல்லுங்களேன்

நான் இருப்பது US இல். இங்கு இருக்கும் முறைகள் என்றால் கொஞ்சம் தெரியும். ஆனால், இந்தியாவில் என்ன என்று தெரியவில்லை. எனது தோழி ஒருவர் tubaligation என்று ஒரு operation செய்துள்ளார். ஆனால், அது இனிமேல் குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்தவர்கள் செய்யும் operation.
வாணி

always smile

அன்பின் nahleen, இவையெல்லாம் கருத்தடை வழிமுறைகள். குழந்தை பிறந்ததும் ஒரு Handoutஇல் USஇல் தருவார்கள்: விக்கிபீடியாவில் இவற்றை தேடி பாருங்கள். தெளிவான விளக்கம் போட்டிருக்கிறார்கள்.
Abstinence
BirthControl pilla
Cervical Barriers
Fertility awareness
Contraceptive Implants
IUD
IUS
Contraceptive patch
Contraceptive sponge
Spermicides
Vaginal ring
-நர்மதா :)

ஹாய் தளிகா,vany ,நிலா
உங்க பதிவிற்க்கு நன்றி

என்ககு எது சரியான முறை,எபப்டி செய்வது நல்லது என தெரியவில்லை நஆள் வேற நெருங்கிட்டு வருகிறது எனக்கு சரியான ஆலோசனை தாங்க அருசுவையின் அன்பு தோழிகளே பிளீஸ் பதில்களை எதிர்பார்த்துட்டு இருக்கேன்..நான் இந்தியாவிதான் இருக்கிறேன் அதனால் இந்தியாவில் உள்ள முறைகள்தான் தேவை

அன்புடன்,
நஹ்லீன்

அன்புடன்,
நஹ்லீன்

ஹாய்nahleen உங்கள் பதிவை பார்த்தேன். இதில் நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்களுடைய பெண்மருத்துவரை போய்பார்த்து ஆலோசனை பெற்றுக்கொள்ளூங்கள். இல்லாவிட்டால் வேறு ஒரு நல்ல ஸ்பெஷலிஸ்டிடம் போய் ஆலோசனை பெறவும். இதுதான் சிறந்தது என நான் நினைக்கிறேன். நிறைய மருத்துவர்கள் சென்னையில் இருக்கிறார்கள். நீங்கள் சென்று பார்த்து ஆலோசனை பெறவும். மறக்காமல் கணவரை அழைத்துச்செல்லவும். நன்றி. அன்புடன் அம்முலு.

டியர் அம்முலு உங்க கருத்துக்கு மிகவும் நன்ரி...நான் எதிர் பார்த்தது இங்கு நிறைய பேர் இருக்காங்க அவங்களுடைய அனுபவங்களை வைத்து எதிர் பார்த்தேன்... எனக்கு உதவுங்களேன் பிளீஸ்..அனுபவங்களை வைத்து முடிவெடுப்பது ரொம்ப நல்லது அல்லவா அதற்க்காகதான் கேட்கிறேன்

அன்புடன்,
நஹ்லீன்

அன்புடன்,
நஹ்லீன்

முதலில் எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது.ஆனால் உங்கல் தவிப்பும் ஆலோசனையின் தேவை அவசியமும் எனக்கு நன்கு புரிகிறது.ஆனால்நமது சமூக, சமய, கலாச்சார, முறைப்படி மக்கள் மனங்களில் இன்னும் முழுதாக ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தால் இதை யாரும் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ல மாட்டார்கள் என்று என் நண்பி சொன்னார்.ஹாட் ல் பிரச்னை உள்ள என் நண்பி ஒருவருக்கு டாக்டரே பரிந்துரை செய்திருக்கிறார்.ஆனால் அவரும் உங்களைப்போலதான் டாக்டரை தவிர வேறு யாராவது அனுபவங்களைச்சொல்ல மாட்டார்களா என்று எதிர்பார்த்து இன்றுவரை எந்த பலனும் கிடைக்கவில்லையாம் .யாராவது சொன்னால் எனக்கு சொல்வதாக சொல்லி இருக்கிறார்.தெரிந்தால் கட்டாயமாக உங்களுக்கு தெரியப்படுத்துவேன் சகோதரி.நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் அல்லவா மனதைக்குழப்ப வேண்டாம்.இந்த வெப் ல் சில தகவல்கள் இருக்கிறது பாருங்கள்.
http://www.indg.gov.in/health/womenhealth/b95bb0bc1ba4bcdba4b9fbc8?set_language=ta

சுரேஜினி

உங்க அலோசனைக்கு ரொம்ப நன்றி..நிச்சயம் போய் பார்கிறேன்..இதில் மறைக்க்க என்ன இருக்குன்னு தெரிய வில்லை?என்னவெல்லாமோ பேசுகிறோம் எல்லாமே வாழ்க்கைக்கு யூசானதுதானே அதே போல்தானே இதும் யாரும் ஆசைக்காக இந்த முடிவை எடுக்க மாட்டார்களே எல்லாம் சந்தர்பம் சூழ்நிலை,உடல்நிலையை பொறுத்துதான் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்க்கு உளாகிறாரள் எனக்கும் அதே நிலைதான் எனக்கு 3 குழந்தை பெற்ருகனும்னு ஆசை (குழந்தை செல்வத்தை விட பெரிய செல்வம் ஏது?)ஆனால் என் நிலை இப்ப சரி இல்லை..அதனால் இப்ப நான் எடுத்து இருக்கும் முடிவு இது..விபரமாக பதில் கொடுத்தமைக்கு நன்றி தோழி..

அன்புடன்,
நஹ்லீன்

அன்புடன்,
நஹ்லீன்

குமுதம் ஸ்னேகிதியில் இருந்து டாக்டர் கீதா அர்ஜுன் அவர்களின் ஆர்ட்டிகிள்................
தனுஸ்ரீ தன்னுடைய திருமண நாளுக்காக சந்தோஷமாக காத்திருந்தாள். அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, மகப்பேறு மருத்துவர் ஒருவரிடம் அப்பாயிண்ட்மென்ட்டும் வாங்கி வைத்திருந்தாள். காரணம் அவளும், அவள் வருங்காலக் கணவனும் ஒரு வருடத்துக்கு குழந்தை வேண்டாம் என்பதால் அதற்கான ஆலோசனை பெற நினைத்தார்கள்.

சுமங்கலிக்கு குழந்தை பிறந்து சில வாரங்கள்தான் ஆகி இருந்தது. டெலிவரிக்குப் பிறகான செக்கப்புக்காக ஹாஸ்பிட்டலுக்குச் செல்லும்போது, அவளுடைய மகப்பேறு மருத்துவரிடம் கருத்தடை முறை பற்றிப் பேசினாள். அவள் சில வருடங்களுக்கு அடுத்த குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட விரும்பினாள்.

தனலக்ஷ்மிக்கு 2 குழந்தை. அவளோ இனி பர்மனெண்ட்டாக குழந்தை வேண்டாம் என்று நினைக்கிறாள்.

மேலே சொன்ன மூன்று பெண்களுக்கும் வெவ்வேறு விதமான கருத்தடை முறைகள் தேவைப்படுகிறது. கருத்தரிப்பைத் தவிர்க்க சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமாகும்.

கருத்தடை என்றால் என்ன?

கருத்தடை என்பது, கருத்தரிப்பதைத் தடை செய்யும் முறையாகும்.

கருத்தரிப்பதைத் தவிர்க்க நிறைய வழிமுறைகள் உள்ளன. அதில் சில வழிமுறைகள் மற்ற வழிமுறைகளை விடச் சிறந்தது.

அதில் ஹார்மோன் மருந்துகள், கருத்தடைச் சாதனங்கள், கருத்தரிப்பு நிகழக்கூடிய நாட்களில் செக்ஸைத் தவிர்ப்பது (இதைத் தான் `பாதுகாப்பான நாட்கள்' என்று அழைப்பார்கள்) மற்றும் அறுவை சிகிச்சை.

கருத்தடை முறையில் பாதுகாப்பான பல முறைகள் வந்து இன்றைய பெண்களின் உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது.

கருத்தடை முறைகளைத் தெரிந்துகொண்டு, அதில் உங்களுக்கும், உங்கள் லைஃப் ஸ்டைலுக்கும் எது சரியானதோ அதைத் தேர்ந்தெடுங்கள்.

கருத்தடையில் என்னென்ன வகைகள் இருக்கிறது?

ஹார்மோன் முறை:-

கருத்தடை மாத்திரைகளோ, ஊசிகளோ (வாய் வழியாக எடுத்துக் கொள்ளப்படுவது) மற்றும் ஈஸ்ட்ரோஜன் அல்லது புரோஜெஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்கள் அடங்கியது. இந்த ஹார்மோன்கள் பெண்களுடைய சினைப்பையிலிருந்து மாதாமாதம் வெளிவரும் கருமுட்டையைத் தடை செய்து விடும். தவிரவும், இந்த முறையினால் கருப்பையின் வாய்ப்பகுதியில் இருக்கும் வெள்ளைச் சளி போன்ற டிஸ்சார்ஜ் (mucus discharge)தடிமனாகி, விந்து கர்ப்பப்பைக்குள் நுழையாமல் தடை செய்துவிடும்.

சில நாட்கள் வரை குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட நினைக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரைகள் மிகச் சிறந்த வழி.

கருத்தடை மாத்திரை சாப்பிடும் பெண்கள் அதை மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருத்தடை ஊசி ஒன்று இருக்கிறது. அது 3 மாதங்களுக்கு கர்ப்பத்தைத் தடுக்கும். இதனால் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த ஊசியை எடுத்துக்கொள்ளலாம்.

சில கட்டுக்கதைகள்!

கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்கள் குண்டாகி விடுவார்கள் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் இது உண்மையல்ல. உடலில் நீர் சேர்வதால் ஒன்று அல்லது இரண்டு கிலோ மட்டும் வெயிட் போடலாம். இந்த மாத்திரையினால் கேன்சர் வருமோ என்று சில பெண்கள் தயங்குவார்கள். இது உண்மையல்ல. இதில் கவனிக்க வேண்டிய நல்ல விஷயம் என்னவென்றால், இந்த கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு வரும் ஓவேரியன் கேன்சரை வர விடாமல் தடுக்கும்.

ஆணுறைகள்:-

எச்.ஐ.வி, ஹெப்படைடிஸ் போன்ற செக்ஸ் வழியாகப் பரவும் வியாதிகளைத் தடுப்பதில் இந்த ஆணுறைகள் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் கருத்தடை விஷயத்தில் ஆணுறைகள் ஃபெயிலியர் ரேட் அதிகம். அதாவது 15%. அதனால் கர்ப்பம் ஏற்பட்டால் கவலை இல்லையென்றால் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

கருத்தடைச் சாதனம்:- (Intrauterine device IUD)

இந்த சாதனம் ஒரு சிறிய பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டது. அதன் மேல் காப்பர் (அ) ஹார்மோன் இருக்கும். இதை கருப்பைக்குள் வைப்பார்கள். இந்த காப்பர் (அ) ஹார்மோன் கர்ப்பப்பைக்குள் இருப்பதனால் கருத் தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் கர்ப்பப்பைக்குள் நிற்க விடாது. இந்த கருத்தடைச் சாதனத்தை அதன் டைப்பைப் பொறுத்து 3 முதல் 5 வருடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். இதன் ஃபெயிலியர் ரேட் வெறும் 3% லிருந்து 5% வரைதான். தவிர, இந்த முறை ஏற்கெனவே குழந்தை பிறந்தவர்களுக்கு மிகவும் ஏற்றது.

பாதுகாப்பான நாட்கள் (சேஃப்டி பீரியட்):-

கருத்தடை முறையில் இந்த முறைதான் இயற்கையான ஃபேமிலி பிளானிங். இந்த முறையில் எந்த கருத்தடைச் சாதனத்தையும், கருத்தடை மாத்திரைகளையும், ஊசிகளையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. கருத்தரிப்பதைத் தடைசெய்ய வேண்டுமென்றால், பீரியட்ஸ் தொடங்கிய முதல் 7 நாட்கள் வரை உறவு கொள்ளலாம்.

(பீரியட்ஸ் ஆன முதல் நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்) மற்றும் அடுத்த மாத பீரியட்ஸ் வருவதற்கு முந்தைய 7 நாட்களும்தான் `பாதுகாப்பான நாட்கள்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கருத்தடை முறை பீரியட்ஸ் ரெகுலராக இருக்கும் பெண்களுக்கு மட்டும்தான் பொருந்தும். இந்த முறையின் ஃபெயிலியர் ரேட் 25%.

கருத்தடை ஆபரேஷன் (Sterilisation):-
இந்த கருத்தடை முறையில், விந்தணு அல்லது கருமுட்டையை எடுத்துக்கொண்டு செல்லும் கருக்குழாய்களை ஆப்ரேஷன் மூலம் மூடி விடுவார்கள். இந்த ஆப்ரேஷனைச் செய்து கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ பிறகு எப்போதுமே பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது.

வாசக்டமியில், ஆணின் விந்தணுவைக் கடத்திச் செல்லும் குழாயை சர்ஜன் வெட்டி, சீல் செய்து விடுவார். பெண்ணுக்குச் செய்யும் போது, ஓவரியிலிருந்து கருப்பைக்கு கருமுட்டையை ஏந்திச் செல்லும் கருக்குழாயை கட் செய்து, சீல் பண்ணி விடுவார். இதில் ஆணுக்குச் செய்யும் ஆப்ரேஷன் பெண்ணுக்குச் செய்யும் அறுவை சிகிச்சையைவிட சுலபமானது. இந்த சிகிச்சையினால் ஆண்மை குறையாது. இந்த கருத்தடை முறையில் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி ஃபெயிலியர் ரேட் ஒரு சதவீதத்துக்கும் கீழேதான்!

எமர்ஜென்சி கருத்தடை முறை!

பாதுகாப்பில்லாமல் உறவு கொண்டாலோ அல்லது ஆணுறை உபயோகப்படுத்தியும் அது கிழிந்து இருந்தாலோ எமர்ஜென்சி கருத்தடையான `மறுநாள் காலையில் பயன்படுத்தும் மாத்திரைகளை' எடுத்துக் கொள்ளலாம். இந்த ஹார்மோனல் மாத்திரையை உறவு கொண்ட 72 மணிநேரத்துக்குள் ஒரு மாத்திரையும், அதன் பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்குள் மற்றொரு மாத்திரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையைப் பற்றி உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. துரதிர்ஷ்டவசமாக இந்த கருத்தடை மாத்திரைகளை தற்போது தடை செய்து உள்ளார்கள்.

தம்பதிகள் கருத்தடை முறையைப் பயன்படுத்தவில்லை என்றால் ஒரு வருடத்துக்கு குழந்தைப் பிறப்பு 80% இருக்கும். கருத்தடை ஆபரேஷன் முறையைத் தவிர ஹார்மோன் முறை மருத்துவம், கருத்தடைச் சாதனம் (IUD) ஆகியவை மிக எஃபெக்ட்டிவான முறைகள். எந்த வகை கருத்தடையும் உபயோகிக்காமல், பாதுகாப்பான நாட்களை மட்டும் உபயோகித்தால் (Safe period) கர்ப்பம் ஆவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்