பிரியா விடை தந்து பிரிகின்றேன் தோழிகளே !

ஏகன் கருணையில் இறுதிக் கடமையைத் தான் முடிக்கவே,
வாகை முகம்மது(ஸல்) வழ்ந்த இடத்தினை தான் காணவே,
பாலை வனத்திலே ஹஜ்ஜை முடித்திட ஓர் பயணமே!
வேதம் தந்த பூமி, காண வந்ததொரு தேன் தருணமே!!

ஆசைக்கிளிகளாம், பெற்றக் குழந்தைகள் தாய் பொறுப்பிலே,
பாசவிடை தனை நானும் தந்துவிட நீர் விழியிலே!
நேச நட்புதனை விட்டுப் பறக்கிறேன் வான் வழியிலே!!
பாச உணர்வுடன் ஆசி தந்திடுவீர் தேன் மொழியிலே!!!

அன்புள்ள அட்மின் அவர்களே, அன்புத்தோழியர், ஆசியா அக்கா, சுகன்யா, கவி.எஸ், ஜெயந்திமாமி, தாமரை, அதிரா, ரேணுகா, மேனகா, விஜிசத்யா, ஆயிஸ்ரீ, மனோமேடம், மனோகரியக்கா, செல்விஅக்கா, தேவா, தனிகா, தனிஷா, மர்லியா, வனிதா, கதிஜா, தென்றல்ஜாஸ்மின், துஷ்யந்தி, இமா, வாணி, ஜெயலஷ்மி, சாதிகா அக்கா, கவின், ஸ்வேதா, ஹேமா, சீத்தாலஷ்மிஅக்கா, ஜெயஸ்ரீ, க்விசிவா, இலா, மீனா, சுஸ்ஸ்ரீ, தனு, இந்திரா, அருண்பாலா, சிஜா, ஹாசினி, ஹர்ஷினி, திவ்யா, கீதாச்சல், உமாராஜ், சுரேஜினி, சுரேகா, பர்வீன் பானு, ஜலீலாக்கா, ஜீஜா, சுதா, விஜிமலை, சதாலஷ்மி, சரஸ்வதி மேடம், மாலதியக்கா, தமிழ்செல்வி, ஜானகி, மணிசாரா, கவிசாரா, நிலா, பரிமளா, ரஃபி இன்னும் பெயர் விடுபட்ட அனைவருக்கும், பிரியா விடை தருகிறேன்.

உங்கள் அனைவரையும் நவம்பர் 26 இரவு, எம்மில்லத்தில் நடக்கும் விருந்துக்கு, அன்புடன் அழைக்கின்றேன். 27 சென்னை சென்று, 30 இரவு 8.45க்கு ப்ளைட். 30 காலை சென்னை கெட் டு கெதருக்கு முடிந்தால், சிறிது நேரம் வந்து செல்வேன். யார் வருகிறீர்கள்? ஜனவரி 15 அன்று உங்களை மீண்டும் சந்திக்கிறேன். அதுவரை என்னை மறந்து விடாதீர்கள். உங்களையும், அறுசுவையையும், என் குழந்தைகளையும், ரொம்ப மிஸ் பண்ணுவேன். கடைசி நேரத்தில், இந்த பதிவு போட முடியாவிட்டால் என்ன செய்வது என்று, ஒரு வாரம் முன்பே போட்டுவிட்டேன்.

இந்த வருடம் என் பிறந்த நாளையும்(dec.28) புது வருடப் பிறப்பையும் மக்காவில் கொண்டாடுவேன். என் இனிய ஸ்னேகிதிகளுக்கு அட்வான்ஸ் கிருஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அறுசுவையாய் விருந்தளிக்க அழைப்பிங்கு வைக்கின்றேன்
வருகைதனை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பேன்,
பிரியா விடை தந்து பிரிகின்றேன் தோழிகளே!
ப்ரார்த்தனை எனக்காக புரிவீரா மனதினுள்ளே?!

விழியோரத் துளியோடு...பை...பை...தோழிகளே........

சுமஜ்லா

அன்பு சுஹைனா,

உங்கள் ஹஜ் புனிதப் பயணம் எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் இனிதே நிறைவேற இறைவனை வேண்டுகிறோம், மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்.

உங்களுக்கு எங்களுடைய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

மனம் கனியும் இறை அனுபவங்களுடன் நீங்கள் திரும்பி வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருப்போம்.

முடிந்தால் சென்னை கெட் டு கெதரில் சந்திக்கலாம்.

பயணம் புறப்படுமுன் உங்களுக்கு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை
ஹஜ் பயணம் நிறைவேற்றித் திரும்ப சென்னை வரும்பொழுது சென்னையில் எங்கள் இல்லத்துக்கு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அவசியம் வர வேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன்.

உங்கள் இல்ல விருந்து அழைப்புக்கு மிக்க நன்றி.

பயணம் இனிதே அமைய இறைவனை வேண்டுகிறோம். மீண்டும் வாழ்த்துகிறோம்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புள்ள சுஹைனா அவர்களுக்கு தங்கள் புனித பயணம் இனிதே நிறைவேற எல்லோருக்கும் பொதுவான இறைவன் ஆசி வழங்குவார். கவலைப்படாமல் நன்றாக சந்தோசமாக இப்புனித பயணத்தை மேற்கொள்ளுங்கள். நீங்கள் நகைச்சுவையாக எழுதும் எழுத்துக்கு நான் ரசிகை. நீங்கள் நன்றாக எழுதுறீங்க. மீண்டும் தங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.நன்றி. அன்புடன் அம்முலு.

கவிதாயினி சுஹைனா, உங்கள் ஹஜ் புனிதப் பயணம் நல்ல முறையில் முடிய உளம்கனிந்த வாழ்த்துக்கள்.
முடிந்தால் சென்னை கெட் டு கெதரில் சந்திப்போம். இல்லாவிட்டால் நீங்கள் திரும்பிவருவதற்குள் நமது அறுசுவைதளம் புது இடத்திற்கு குடி புகுந்துவிடும் என்று நம்புகிறேன். அங்கு சந்திப்போம்.
உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். அந்த புனிதமான இடத்தில் நீங்கள் உலக அமைதிக்காகவும், எல்லோர் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
உங்கள் பிறந்த நாளுக்கும், புது வருடக்கொண்டாட்டத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

அன்புத்தோழி சுஹைனாவிற்கு,
உங்களின் ஹஜ் புனிதப்பயணம் இனிமையாகவும் அமைதியாகவும் இருக்க நீங்கள் வரும் வரை நாங்கள் இறைவனிடம் வேண்டியே இருப்போம்.உங்கள் குழந்தைகளின் பிரிவு உங்களுக்கு மனது கஷ்டமாக இருக்கும்.புனிதப்பயணம் வாய்ப்பு தந்த அந்த எல்லாம் வல்ல இறைவன் அதையும் தாங்க வலிமை தரட்டும்.
உங்களின் கவிதையாலே ஹஜ்ஜின் அருமை பெருமையை கேட்க நாங்கள் ஆர்வத்துடன் இருப்போம் தோழி.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி.

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக)சுஹைனா.நல்ல படி ஹஜ் கடமைகளை செய்து இறைவனின் திருபொருத்தத்தை பெற்று வர வாழ்த்துகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

கண்கள் குளமாகுதம்மா சுஹைனாவை நினைக்கயிலே,
என் அன்புத்தோழி
உன் பண்பு
யாருக்கு வரும்?
உங்கள் ஹஜ் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
காத்திருக்கிறேன் விழிகளில்
பெருக்கெடுக்கும் நீரோடு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா அக்கா.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்கள் ஹஜ் புனிதப் பயணம் எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் இனிதே நிறைவேற இறைவனை வேண்டுகிறோம்

அன்புள்ள சுஹைனா, உங்கள் பயணம் இனிதே அமைய எனது வாழ்த்துக்கள். விருந்துக்கு அழைப்பிதலுக்கு நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்.
வாணி
always smile

ஹெலொ சுஹைனா,
வாழ்த்துக்கள். ஹேவ் ய ஹேப்பி அண்ட் ஸெஃப் ஜேனி.

இப்படிக்கு
இந்திரா

indira

உங்களுடைய ஹஜ் பயணம் நல்ல படியாக அமைய தூவா செய்கிறேன்

சுஹைனா வாழ்த்துகக்ள் உங்கள் ஹஜ் ஏற்று கொள்ள கூட ஹஜ்ஜாக அல்லாஹு தாலா ஆக்குவானக.
நான் ஏற்கன்வே மெயிலில் எல்லாம் தெரிவித்துவிடேன் நீங்களும் எல்லாம்,தாயாராக இருப்ப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
பார்த்து நல்ல படியாக போய் வருங்கள் நாங்களும் போகனும் துவா செய்யுங்கள்.
ஈத் முபாரக், பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்