சிக்கன் பிரியாணி (செட்டிநாட்டு முறை)

தேதி: November 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (21 votes)

 

1. பாசுமதி அரிசி - 1 1/2 கப்
2. கோழி - 1/2 கிலோ (எலும்போடு பெரிதாக வெட்டிவைத்தது)
3. வெங்காயம் - 1 (பெரிதாக நறுக்கியது)
4. தக்காளி - 1 ( பொடியாக நறுக்கியது)
5. பச்சை மிளகாய் - 5
6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
7. தேங்காய் பால் - 1 1/2 கப்
8. தண்ணீர் - 1 1/2 கப்
9. கொத்தமல்லி, புதினா - 1/2 கப்
10. தயிர் - 1/2 கப்
11. எண்ணெய் - 100 மில்லி
12. நெய் - 3 தேக்கரண்டி
13. உப்பு
14. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
15. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
16. கரம் மசாலா தூள் - 1/4 தேகரண்டி
17. பட்டை
18. லவங்கம் - 5
19. பிரியாணி இலை - 1
20. ஏலக்காய் - 3


 

கோழியுடன் பாதி தயிர், மஞ்சள் தூள், பாதி உப்பு சேர்த்து கிளறி ஊறவிடவும்.
அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், 2 தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.
இதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
இத்துடன் மீதமிருக்கும் தயிர், மிளகாய் தூள், மீதம் உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறி 3 நிமிடம் வைக்கவும்.
நன்றாக குழைந்து மிளகாய் தூள் வாசம் போனதும், ஊற வைத்துள்ள கோழியை சேர்த்து வேக விடவும்.
கோழி வெந்ததும் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி முக்கால் பாகம் வேக விடவும்.
இப்போது அதன் மேல் கரம் மசாலா தூள் தூவி, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சிறுந்தீயில் 10 - 15 நிமிடம் தம் போடவும்.
சாதம் முழுதாக வெந்ததும் இறக்கி விடவும். சுவையான செட்டிநாட்டு கோழி பிரியாணி தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

inru unga biriyani saiten romba nalla irutuchi.taste um diffrent ta irutuchi romba thx

hi frnd..just now i did this briyani..it was very nice..

everyone is the sculpture of his own lyf!!

ஹாய் வனிதா,
பிரியாணி தம் போடுவது எப்படி என்று விளக்கமாக சொல்லவும். பா. நான் நாளை பிரியாணி ச்ய்ய போகிறன். Pls urgent pa.

ஹாய் வனிதா,
இன்று இந்த சிக்கன் பிரியாணி செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இது கொஞ்சம் கொஞ்சம் என்னுடைய அம்மா சொல்லி தந்த ரெசிபி போலவே இருந்தது :)
ஆனால் இறுதியில் நீங்கள் சொல்லி இருப்பது போல் தம் போடவில்லை... மாறாக குக்கரில் வைத்து செய்தேன். பிரியாணியும் சிக்கன் ஃப்ரை காம்பினேஷனும் ரொம்ப நன்றாக இருந்தது. நான் சமைத்து நானே விரும்பி உண்டது இன்று தான் என்று நினைக்கிறேன் :)

இப்போது கேள்வி பகுதி..
தம் போடுவதினால் என்ன பயன்?
இங்கே மேலே ஒரு பதிலில் நீங்கள் சொல்லி இருப்பது போல தம் போடும் போது மேலே தண்ணீர் உள்ள பாத்திரம் வைப்பதன் காரணம் என்ன?

நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லவும்... அவசரம் இல்லை. நன்றி :)

- பிந்து

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கீதா மதன்... தம் போட அடி கனமான பாத்திரம் பயன்படுத்துங்க. சிருந்தீயில் மேலே ஒரு தோசை கல் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரம் வைத்து அதன் மேல் இடைவெளி இல்லாமல் மூடும் தட்டு போட்டு மூடவும். அதன் மேல் தண்ணீர் உள்ள பாத்திரம் வைக்கவும். நல்ல அடிகனமான பாத்திரம் என்றால் தோசை கல் தேவை இல்லை. முக்கால் பாகம் வெந்த சாதத்தை இப்படியே 15 நிமிடம் வைத்து முழுதும் வேக வைத்தால் தம் பிரியாணி தயார்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. தாமதமா பார்க்கிறேன்... மன்னிக்கனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்க அம்மாவும் குக்கரில் தான் செய்வாங்க ;) ஆனா அதுலையே தம் போடுவாங்க. எனக்கு வராது அவங்க பண்ற மாதிரி. என்ன இருந்தாலும் அவங்க அனுபவம் நமக்கு வருமா.

தம் பிரியாணி என்பது முகல் காலத்து சமைக்கும் டெக்னிக் ;) அவங்க கங்கு அடுப்புல (தீ இல்லாம, வெறு நெறுப்பு கங்கு) தம் போடுவாங்க. வேற ஒன்னும் இல்லை... வேகமா சமைக்காம 5 நிமிடத்தில் சமைக்கிற விஷயத்தை சிறுந்தீயில் 20 நிமிஷம் சமைக்கிறோம். அப்படி சமைக்கும் போது அந்த ஸ்டீம் வெளிய போகாம இருக்க நிறைய மெதட் பயன்படுத்தலாம். ஒன்னு மூடி போட்டு மூடி வாய் பகுதியில் சப்பாத்தி மாவு பிசைந்து வைத்து சீல் பண்ணலாம். இன்னொன்னு சும்மாவே மூடி மேல நல்லா வெயிட்டா எதாவது வைக்கலாம். அந்த வெயிட்டா வைக்க தான் நம்ம தண்ணி நிரப்பிய பாத்திரம் வைக்கிறோம். வேற ஒன்னுமில்லை. இப்படி வைத்து ஸ்டீம் உள்ள அரஸ்ட் ஆகும் போது இந்த வெது வெதுப்பான சூடு, உள்ல இருக்கும் மசாலா ஃப்ளேவர் எல்லாமே பாதி வெந்த அரிசியில் நல்லா ஊறி மிச்சமும் வேகும். அது சாதாரணமா சமைக்கும் பிரியாணியை விட நல்ல வாசமும், சுவையும் கொடுக்கும்.

இப்போ தம் பிரியாணி ரகசியம் தெரிஞ்சுதா??? உண்மையில் தம் பிரியாணி என்பது லேயர் லேயரா வெச்சு தான் போடுவாங்க. லாவியோட ஒரு குறிப்பு இருக்கும் பாருங்க... அப்படி தான் போடுவாங்க. நம்மலாம் சமைக்காத கறியை லேயர்ல வெச்சு போட்டா வேகுமோ வேகாதோன்னு பயந்துகிட்டு தான் அரிசியோட சமைச்ச கறியை கடைசியா தம்மில் போட்டு எடுக்கறோம்.

எல்லா குறிப்பையும் செய்து பார்க்கும் உங்க சமையல் ஆர்வமும் எல்லாத்தையும் தெரிஞ்சு செய்யனும்னு நினைக்கிற உங்க எண்ணமும் எனக்கு பிடிச்சிருக்கு. :) நன்றி பிந்து.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி :) எனக்கு கேள்வி கேட்க தான் தெரியும்... நல்ல வேளை உங்களுக்கு பதில் தெரிஞ்சுருக்கு அதனால பிரச்சனை இல்லை :)

- பிந்து

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Dear Mrs.Vani,

Tried ur recipe. It was really very nice. My daughter enjoyed it.Thanks a lot.

With regards,

Sridevi Ramgopal.

மிக்க நன்றி தோழி. குழந்தைகளுக்கு பிரியாணி வகைகள் பிடிக்கும், காரம் குறைவாக இருந்தால் விரும்புவார்கள். செய்து பார்த்து கறுத்து சொல்லி சந்தோஷ படுத்திடீங்க. :) அதுவும் குழந்தைக்கு பிடிச்சதுன்னு சொன்னது இன்னும் சந்தோஷம். நன்றி.
- வனிதா

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank u very much for ur reply. donno how to reply in tamil. tamilla converse seivadhu will be more friendly. actually i replied u the same day after trying ur briyani recipe. my daughter s 4 yrs old n my son is 1 1/2 yrs old. both of them liked briyani very much that day. kaaram paarthu paarthu thaan potten. romba nalla irundhadu. unga spl item vaera enna?

regards,

Sridevi Ramgopal

நன்றி உங்கள் குறிப்பிற்கு. தமிழில் டைப் செய்ய கற்றுக் கொண்டேன்.

நன்றி தோழி ஸ்ரீதேவி... குழந்தைகள் நலமா?! உங்க பதிவை இப்ப தான் பார்த்தேன். நான் இந்த தளத்திற்கு புதிது. கிராமத்து சமையல், செட்டிநாடு சமையல், மசாலா வகைகள் தான் குறிப்புகள் தர விருப்பம். இதுவரை அதிக குறிப்புகள் தரவில்லை. தந்த குறிப்புகளை "கூட்டாஞ்சோறு" பகுதியல் பார்த்தால் கிடைக்கும். :) உங்களுக்கு என்ன பிடிக்கும்'னு சொல்லுங்க, நான் மத்தவங்க குடுதிருக்க குறிப்ப பாத்து கூட சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

didnt find time to mail. hw r u? all fine here. i like to cook butter chicken, chettinad chicken gravy n chicken lollipop. ellam kathukkittu kutties n husband ai asathanum. its my wish. mail u in detail later. no time.

bye friend.

Sridevi

செட்டி நாடு சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
அதில் மட்டும் சுவை அதிகமாக இருபதற்கு காரணம் தான் தெரியல.....

நன்றி !!! நன்றி

கணேஷ்... அவர்கள் தேங்காய், பச்சை மிளகாய் பயன்படுதுவது தான் காரணமோ என்னவோ..... உண்மையில் எந்த உணவும் ருசிக்க வீட்டில் அரைத்த மசாலாக்கள் பெரிதும் உதவும். கடையில் வாங்குவது அவசரத்துக்கு மட்டுமே. செட்டிநாடு இன்னும் பழைய, வீட்டில் செய்யும் முறையை உபயோகிப்பதே ருசிக்கு காரணம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Can you please post Chettinad Vegetable Briyani with bread Croutons instead of meat.

சூப்பர்ர்ர் செட்டிநாடு சிக்கன் பிரியாணி வனி

மிக்க நன்றி மேனகா. :)

Newyorker... I just now saw your post. Im really very sorry, I donno the recipe you are asking for. I'll check with my friends and post the recipe when i get it.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thanks, Appreciate your help. I went to Annamalai University in the 70's and it was very popular in the Engineering Hostel.The whole kitchen was run by chefs from Chettinad.

Thank you with they help of your instruction i prepared biriyani first time and it was really nice. thank you thank you thank you

Slave of God

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி தோழி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதை நான் நாளை செய்து பார்க்கப்போகின்றேன்.

நன்றி இந்தப் மெப்தளத்துக்கும் இதர பெண்மணிகளுக்கும்.

நான் ஒரு ஆண் மகன்.நான் தான் என்வீட்டில் சமையல் காரன். எனக்கு மூன்று பிள்ளைகள். மனைவி மூன்றாவது பிள்ளையோடு நேரம் செலவழிப்பா..நான் இதர வேலைகளை செய்கின்றேன்.

இந்த கோழி பிரியாணி முயற்சி செய்துவிட்டுச்சொல்கின்றேன்.

நல்லாக வந்தது.

நன்றி

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு செட்டிநாடு பிரியாணி என்றால் ரொம்ப பிரியம். USAல் எனக்கு ரொம்ப பிடித்த Hotel Anjappar Chettinad தான். என் கணவர் வெளியே சாப்பிட போலாமா என்று கேட்டாலே.... Anjappar பிரியணி சாப்பிடலாமான்னு தான் கேட்பேன். ஸொ அவர் என் தொந்தரவு தாங்க முடியாம, அருசுவை பார்த்து கத்துக்கன்னு சொன்னார், உங்க
செட்டிநாடு பிரியாணி பர்த்ததும் செய்து விட்டேன். சுவையோ சுவை. மிக்க நன்றி.......!!!!!!!!!!

இப்படிக்கு,
உங்கள் புதுத் தோழி (பிரியாணி பிரியை)

மைதிலிதியாகராஜன்

செய்து பார்த்து பின்னுட்டம் [அதுவும் இத்தனை பிரியமா பிரியாணி சாப்பிடும் உங்களுக்கு பிடிச்சிதுன்னு சொன்னது] தந்து என்னை மகிழ்ச்சிகுள்ளாக்கிய தோழி மைதிலிதியாகராஜன்.... எப்படி நன்றி சொல்ல... :D அத்தனை சந்தோஷம். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா