நன்றி தேவா !

நன்றி தேவா !
உங்களது அழகுப்பொடி தயாரித்து எனது 3 1/2 வயது குழந்தைக்கு தினமும் தேய்த்து குளிப்பாட்டி வருகிறேன். அவள் உடம்பில் பொரி பொரியாகவும் தேமல் போன்றும் இருந்ததெல்லாம் மாறி விட்டது.சருமம் ட்ரையாக இல்லாமல் நன்றாக உள்ளது.மிகவும் நன்றி தேவா. அவளுக்கு தொடர்ந்து பயன்படுத்தலாமா? அப்படியே அவளது பொடுகு பிரச்சினைக்கும் ஒரு குறிப்பு கொடுத்தால் நல்லது.உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

கவி தேவாவின் அந்த குறிப்பு உள்ள த்ரெட் தரமுடியுமா..நான் தேச்சு அழகாக போறேன்

அந்த த்ரெட் http://www.arusuvai.com/tamil/forum/no/3677 இது தான்.

sachu

SIVAKAVI
அன்பு தளிகா!
வெங்கிசரஸ் கொடுத்துள்ள அதே த்ரெட் தான் .
நானும் தேய்த்து குளிக்கிறேன். சருமம் மிகவும் மென்மையாகவும்,ட்ரையாக இல்லாமலும் இருக்கிறது. பெருமையெல்லாம் தேவாவையே சேரும். மிகவும் நன்றி தேவா.
தேவாவுக்கு ஒரு பெரிய ஓ.....

forum no 3677.

anbe sivam

என்னங்க இப்படிலாம் சொல்லி என்னை வெட்கப்பட வெக்கறீங்க. உங்க பொண்ணுக்கு எப்பவுமே இந்த பொடியை யூஸ் பண்ணலாம். உங்களுக்கும் அது நல்ல பலன் தந்ததுன்னு சொல்லி இருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. மறக்காம எனக்கு நன்றின்னு ஒரு பதிவு போட்ட உங்களுக்கு என்னோட பதில் நன்றி. இதை வெச்சு ஸ்க்ரப்பிங், பேக்னு கூட போடலாம். செஞ்சுப் பாருங்க.

ஹலோ தேவா மேம்,
எப்படி இருக்கிங்க?உங்களிடம் பேசுவது இதான் முதல் முறை. உங்க குறிப்புகள் அனைத்தும் சூப்பர்.நீங்கள் சொன்னது போல பொடி தயார் செய்து குளிக்க எனக்கும் ஆசையாக உள்ளது, ஆனால் , இங்கே கிடைக்காதே. அடுத்த தடவை இந்தியா செல்லும்பொது கண்டிப்பாக செய்து பார்த்திடுவேன்.
தேவா மேம், எனக்கொரு doubt.apricot face scrubber வாங்கினேன்.எத்தனை நாளைக்கு ஒரு முறை போடனும்?என் hubby அதை use செய்யலாமா?
and also, wht abt olay face cream?
நேரம் கிடைக்கும்போது பதில் தரவும் மேம்.

ஹாய் விஜி, எப்படி இருக்கீங்க? பொடியை இந்தியா போகும்போது மறக்காம லிஸ்ட் கொண்டு போய் தேவையான பொருட்களை வாங்கி அரைச்சுடுங்க. ஸ்க்ரப் வாரம் ஒரு முறை உபயோகித்தால் போதும். ஓலே பேஸ் க்ரீம் ஆயில் சருமம் இல்லாவிட்டால் உபயோகிக்கலாம். உங்கள் கணவரும் ஸ்க்ரப்பினை உபயோகிக்கலாம். அவர்கள் சருமத்திற்கும் நல்லது.

//கவி தேவாவின் அந்த குறிப்பு உள்ள த்ரெட் தரமுடியுமா..நான் தேச்சு அழகாக போறேன்// - தேவா, உங்களுக்கு இதுல ஏதும் உள்குத்து தெரியுதா? :)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

Hi Deva mam,
thanks for ur immediate reply.
and one more doubt mam,in one of ur replies i saw cinthol soap is best.here i cnt get tht soap,instead which soap i can use?reply me when u find time.
regards ,
viji

ஹாய் விஜி, ஓல்ட் சிந்தால் நன்றாக இருக்கும். இந்தியா செல்லும்போது நான் எப்போதும் மொத்தமாக வாங்கி வந்து விடுவேன். ஆனால் இந்த முறை வாங்கி வந்தது தீர்ந்துப் போய், இபோது ஓட்மீலும், ஷியா பட்டரும் கலந்த கசன்ஸ் சோப் வாங்கி உபயோகிக்கிறேன். இது மற்ற சோப் போன்று ஸ்மூத்தாக இருக்காது. ஓட்ஸின் கொர கொரப்பு உடலில் சோப் போடும்போதே ஸ்க்ரப் செய்வது போல் இருக்கும். ஓட்ஸ் துகள்களை நன்றாக பார்க்கலாம். ஷியா பட்டர் சாப்ட்டாக சருமத்தை வைக்க உபயோகப்படுத்துவோம். தற்போது இந்த சோப் நன்றாக இருக்கிறது. தாங்கள் தற்போது உபயோகிக்கும் சோப் தங்களுக்கு நல்லது என்று தோன்றும் பட்சத்தில் அதையே தொடர்ந்து உபயோகப்படுத்துங்கள். அதிக மாய்ச்சுரைசிங் க்ரீம் உள்ள சோப்களான Dove, Nivea போன்றவற்றை உபயோகித்தால் கண்டிப்பாக மாதம் ஒரு முறை உடல் முழுக்க ஸ்க்ரப் செய்து குளியுங்கள். அப்படி செய்யாவிட்டால் பலருக்கு அதிகப்படியான மாய்ச்சுரைசிங் க்ரீம் கலந்த இந்த சோப்புகள் உடலில் கரும்புள்ளி போன்று முதுகிலும், தாடையிலும், தோள்பட்டையிலும் உண்டாக்கிவிடும். சிலருக்கு ஜான்சன் பேபி சோப் பிடிக்கும். அது மைல்ட் என்பதால் உடலுக்கு எதுவும் செய்யாது. அதே சமயம் நமது உடல் குழந்தைகள் உடல்போல் பாதுகாப்பானதாக இல்லை. வெயில், குளிர், காற்று, தூசு என்று பலவித விஷயங்களால் பாதிக்கப்படும்போது அதிலிருந்து காக்க ஜான்சன் பேபி சோப் போதுமா என்று தெரியவில்லை. க்ளிசரின் அதிகமுள்ள பியர்ஸ் போன்ற சோப்களையும் டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். இவையும் மைல்ட் சோப் வகையே. நிறைய சாய்ஸ் இருக்கிறது. தேர்ந்தெடுப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. முகம் கழுவ மட்டும் என்றால் லிக்விட் சோப்களை தேர்ந்தெடுங்கள்.

தேவா மேடம்,
வணக்கம். உங்கள் குறிப்புக்கள் அனைத்தும் அறுமை. எனக்கு useful la இருந்தது. என்னுடையது normal skin. . நான் dove சோப் use பண்ணுறேன். அப்புறம் nivea body lotion . முகத்துகு என்ன face cream போடலாம். அப்புறம் face powder na என்ன. நான் US இருக்கேன்.நிங்க ரொம்ப் பிசினு நினைக்கிறேன். பிரியா இருக்கும் போது பதில் சொல்லுங்க.
நன்றி

be healthy

be healthy

மேலும் சில பதிவுகள்