கெட்-டுகெதர் - கவுண்ட் டவுன் ஆரம்பம்

அன்பு சகோதர சகோதரிகளுக்கு,

சென்னையில் வரும் 30 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் நமது அறுசுவை நேயர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வருமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இன்னும் சரியாக 7 நாட்களே இருக்கின்றன. நான் முன்பே சொல்லியிருந்ததுபோல் இடம், நேரம் குறித்த தகவல்களை 28 ஆம் தேதி வாக்கில் இங்கே தெரிவிக்கின்றேன். எத்தனை நபர்கள் வருகின்றார்கள் என்பது உறுதியாக தெரிந்தால்தான் அதற்கு தகுந்தாற்போல் இடம் மற்றும் உணவு வசதிகளை செய்ய இயலும். எனவே இது எனது கடைசி வேண்டுகோள். கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் எத்தனை பேர் கண்டிப்பாக வருவீர்கள் என்பதை எனக்கு மின்னஞ்சல் மூலமோ அல்லது இந்த மன்ற இழையிலோ தெரிவிக்கவும்.

இதுவரை வருவதாக உறுதிகூறியுள்ளவர்கள் பட்டியலை இங்கே கொடுக்கின்றேன். இவர்கள் கண்டிப்பாக வருவார்கள். பட்டியலில் யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் இங்கே தெரிவிக்கவும். மற்றொரு இழையில் வந்த பதிவுகளில் கொடுக்கப்பட்டிருந்த தகவலை வைத்து நான் பட்டியலிட்டுள்ளேன். பெயர் விடுபட்டிருந்தால் கோபம் கொள்ளாமல் இங்கே தெரியப்படுத்தவும். இங்கே பெயர் குறிப்பிட்டுள்ளவர்கள் வருவதாக உறுதி கூறியிருந்தாலும், எத்தனை நபர்கள் வருவோம் என்பதை சிலர் இன்னமும் தெரிவிக்கவில்லை. தயவுசெய்து அந்த தகவலை எனது மின்னஞ்சல் முகவரிக்கு உடன் தெரியப்படுத்தவும்.

என்னுடைய மின்னஞ்சல் முகவரி. arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம்.

வருவதாக உறுதியளித்திருப்பவர்கள்

திருமதி. ஜெயந்தி குடும்பத்தினர்
திருமதி. செல்வி குடும்பத்தினர்
திருமதி. ஷாதிகா குடும்பத்தினர்
திருமதி. மர்ழியா குடும்பத்தினர்
திருமதி. தனிஷா குடும்பத்தினர்
திருமதி. சுஹைனா குடும்பத்தினர்
திருமதி. ஜெயலெட்சுமி குடும்பத்தினர்
திருமதி. சீதாலெட்சுமி குடும்பத்தினர்
திருமதி. சாரதா குடும்பத்தினர்
திருமதி. சிஜா தோட்டா குடும்பத்தினர்
திருமதி. லெட்சுமி செல்வா குடும்பத்தினர்
திருமதி. விஜி அவர்களின் சகோதரி குடும்பத்தினர்

இன்னும் யார் யாரெல்லாம் வரத் தயார் என்பதை உடன் தெரியப்படுத்தவும். 25 ஆம் தேதிக்குள் இறுதிப்பட்டியல் கிடைக்கப்பெற்றால் நன்றாக இருக்கும்.

மேலே உள்ள பதிவை தெரியப்படுத்தவே இந்த பதிவு. சரியாக 7 நாட்கள் இருக்கின்றன. கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் உடன் தெரியப்படுத்தவும்.

ஸாதிகா இல்லத்தில் இருந்து மூன்று நபர்கள்.

arusuvai is a wonderful website

க்ர்ர்ர்ர்ர்ர்....ஹ்ம்ம் பொறாமை வருது.

தளிகா, ம்ம்ம்ம்ம்ம் வாங்கோ... தனியா பெருமூச்சு விடுவதை விட, என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கோ... இருவருமாக விடுவோம்..... அப்படியே கெட்டுகெதரில் என் உடன் பிறப்பை நான் விசாரித்ததாகவும் சொல்லிடுங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா உங்க உடன்பிறப்பு யார்பா அது?நான் ஊர்ல இருந்தாலும் கலந்துக்குவேனான்னு சந்தேகம் தான் ஆனால் பொறாமையாவும் இருக்கு.

காலை பத்து மணியளவில் தொடங்கலாம் என்பதுதான் எனது திட்டமும். எல்லோராலும் அந்த நேரத்திற்குள் வர இயலும் என்று சொல்ல இயலாது. எப்படியும் 11 மணிக்குள் அனைவரும் வந்துவிடுவார்கள் என்று நம்புகின்றேன். சரி, உத்தேசமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை என்று வைத்துக்கொள்வோம். இந்த ஆறு மணி நேரத்திற்கு அங்கே என்ன என்ன ப்ரொகிராம்ஸ் வைக்கலாம் என்று யாரேனும் ஆலோசனை கொடுங்கள். எல்லாரும் வீட்டுக்காரங்களோட (ஹவுஸ் ஓனரை சொல்லலீங்க..) வந்தா ஜோடிப்பொருத்தம் மாதிரி எதாவது வைக்கலாம். ஜெயந்தி மாமி ஒரு க்விஸ் ப்ரொகிராம் தயார் பண்ணிட்டு இருக்காங்க.

வானிலை வேறு மிரட்டிக்கொண்டிருக்கின்றது. புயலே அடித்தாலும் சொன்னவர்கள் அத்தனை பேரும் வந்துவிடவேண்டும்.

அதிரா, தளிகா.. கவலைப்படாதீங்க. கூடிய சீக்கிரம் நீங்க இருக்கிற நாட்டுலேயே கெட்டுகெதருக்கு ஏற்பாடு பண்ணலாம். (ரெண்டு டிக்கெட் மட்டும் புக் பண்ணிடுவீங்கன்னு நம்புறோம். ஒருத்தர் இப்படித்தான் UAE க்கு டிக்கெட் எடுத்து கொடுக்கிறதா சொன்னாரு. அப்புறம் சத்தத்தையே காணோம். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒருத்தர் குவைத்துல ப்ரோகிராம் எல்லாம் ஏற்பாடு பண்ணுனாரு. கொஞ்ச நாள்ல ஆளே காணாம போயிட்டாரு.)

ஹூம் .........எல்லோரும் நல்லா என்ஞ்சாய் பன்னுங்க........!

பாபு அண்ணா,

நீங்கள் சொன்ன டைம் எல்லோருக்கும் வசதியாக இருக்கும்.கண்டிப்பாக மழை வாராது.(அதான் நாஙல்லம் வாரோமே மழை பயந்துட்டு ஓடிடும்).

ப்ரொகிராம்ஸ் 1.ஜோடிபொருத்தம்(நீங்கள் சொன்னது போல)

2. வினாடி வினா(ஜெயந்தி ( மாமி நாங்களாம் ஈசியா ப்தில் சொல்றா மாதிரி கேள்வி தாயார் பண்ணுங்கோ இல்லனா நாங்க திரு திருனு முழிக்கனும்)

3. அந்தாக்ஷாரி

4.விளையாட்டு போட்டிகள்(அது தான் அண்ணா சேர் கேம்ஸ்)

குழந்தைகள் அவ்ர்களுக்கு ஏதேனும்சின்ன் சின்ன் போட்டிகள் நடத்தலாம்.அவர்களும் நம்மோடு சேர்ந்து கலக்குவார்கள்.

அண்ணா இதுல எதாவது தவாறாக் இருப்பின் மன்னிக்கவும்.

இன்னும் யோசித்து சொல்கிரேன்.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுத்ர்சன்

அட்மின் அவர்களுக்கு

அழைப்புக்கு மிக்க நன்றி.

அனைவரையும் சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளோம்.

எங்கள் வீட்டிலிருந்து நான், என் கணவர், எங்கள் மருமகள் ஆகிய மூன்று பேரும் வருகிறோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

சுஹைனா!!! அப்படின்னா .. பாட்டுக்கு பாட்டு

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்