சமைத்து அசத்தலாம்(2) எல்லோரும் வாங்கோ... பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி ஒன்று, எதிர்பார்த்ததை விட அதிகமாக எல்லோருமே ஒன்றிணைந்து வெற்றியும் கண்டுவிட்டோம். அதேபோல் இது பகுதி - 2 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை செல்வியக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 02) முடிவடையும். புதன்கிழமை(03/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

இன்று சேலம் மீன் குழம்பு,மீன் மசாலா செய்தேன்.சூப்பரோ சூப்பர்.
செல்விமா ஆபிஸ்க்கு அரை நாள் லீவு போட்டு[மழைனு சாக்கு சொல்றீங்க]பதிவு போடுறீங்க.நன்றிமா.இதுல உங்க ஆத்துக்காரையும் உட்கார வெச்சுட்டீங்க.பாவம் அவர்.மனசுக்குல்ல நம்ம அதிராவை திட்டிக்கிட்டே டைப் பண்ணுவார்.அந்த திட்டெல்லாம் நம்ம அதிராவுக்கே.அதிரா எங்க சார்பா எல்லா திட்டும் நீங்களே வாங்கிக்குங்க.ஒ.கே வா அதிரா.

பாவக்காய் எள்ளுப்பச்சடி ம்ம்....சூப்பர்.நேற்று இரவு ராகி புட்டு செய்தேன்.ராகி க்கு விளக்கம் அளித்த வனிதாக்கும் குழப்பம் அளித்த அதிராக்கும் நன்றி.கடசியில் இலாதான் வந்து என் கண்ணீரைத்டைத்தார்.
அடுத்ததாக கோவில் புளியோதரையும் மாங்காய் துவையலும் செய்து வைத்திருக்கிறேன்.இது என் நண்பிக்கு செய்தேன் ஆனால் நானே முடித்துவிடுவேன் போல் இருக்கிறது அத்தனை சுவை .நன்றி அதிரா .நன்றி செல்வி அக்கா.போட்டோ எடுத்தேன். பின்னூட்டம் கொடுக்க கஸ்டமாக இருக்கிறது எல்லோரும் அறுசுவையை ஓப்பன் பண்ணி வைத்து விட்டு பாத்து பாத்து சமைக்கிறாய்ங்களோ???.டூ மெனி கனக்‌ஷன் என்று வருகிறது. அதனால் நாளை வந்து பின்னூட்டம் கொடுக்கிறேன்.
சுரேஜினி

நாம ரெண்டு பேரும் இன்னைக்கு செல்வி அக்காவின் சேலம் மீன் குழம்பு செய்துள்ளோம்!!ரொம்ப நல்லா இருந்தது,நாளைக்கு என்ன செய்யலாம் என்று யோசனைய்யாக உள்ளது,இன்று செய்த மீன் குழம்பை படம் எடுக்க கேமராவை எடுத்துவந்தேன்,கடைசியில் அதில் சார்ஜ் இல்லை,அதனால் எடுக்க முடியாமல் போயிட்டது.நான் காய்ந்த மிளகாயை வருக்கும் சாமானுடன் வருத்து போட்டேன்,அபாரமான ருசி!இனி அடிக்கடி சேலம் மீன் குழம்பு செய்யவேண்டியதுதான்!

செவ்வாய் மாலை வெஜிடபிள் சீஸ் ஆம்லெட்,ஆப்பிள் ஷேக்,புழுங்கல் அரிசி முறுக்கு
இரவு ராயல் உப்புமா,வேர்க்கடலை துவையல்செய்தேன். ரொம்ப சூப்பரா இருந்தது.
ரொம்ப நன்றி.அதிரா.& செந்தமிழ் செல்வி.

அன்பு தோழிகளே,

செல்விக்கா இன்று ஸ்பெஷல் முட்டை ஆம்லெட்டும் ,இரவு ஆப்பத்துக்கு வடகறி யும் செய்தேன் சூப்பர்...வடகறியில் 2 பச்சமிளகாய் குறைத்து போட்டேன்.காரம் பத்தாமல் போச்சு

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இன்று லன்ச்க்கு செல்வியக்காவின் வண்ணமிகு எலுமிச்சை சாதம் செய்து, அதனுடன் முட்டை வறுவல் செய்திருந்தேன்.
சூப்பர் காம்பினேஷன் - சுவையான லன்ச் சாப்பிட்டுகிட்டே இந்த பதிவு போடறேன்! : )
இரவு டின்னருக்கு என்னவென்றும் பார்த்து வைத்துவிட்டேன். மீண்டும் வருகிறேன்...

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அதிரா நலமா?
நான் எங்கேயும் போகலை இங்குதான் உள்ளேன்..செய்த குறிப்பை கனக்கெடுக்கவும்,குறிப்புக்கு கீழ் பதியவும் சரியாக இருக்கிறது...
நான் நிறைய வெல்லாம் செய்யவில்லை...அது என்னால் முடியாது.என்னவர் தினமும் மதியம் வரமாட்டார்.டைம் கிடைத்தால்தான் மதியம் வீட்டுக்கு வருவார்...அதனால் என்னால் உறுதியாய் சமைக்க இயலாது...அவர் வருவேன் என்று 90% உறுதியளித்தால் மட்டும் தான் 2 அல்லது 3 வெரைட்டி...வாய்ப்பு கிடைக்கும் போது சமைத்து விடுவது
என்னை அடிக்கடி தேட வேண்டாம் நான் இங்கு தான் இருப்பேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா,

நானும் கலந்து கொள்கிறேன். இன்று முடியாது நாளை செல்வி அக்காவின் குறிப்பில் இருந்து சமைத்து விட்டுச் சொல்கிறேன்.

பபி.

அதிரா,

நானும் கலந்து கொள்கிறேன். இன்று முடியாது நாளை செல்வி அக்காவின் குறிப்பில் இருந்து சமைத்து விட்டுச் சொல்கிறேன்.

பபி.

அதிரா,

நானும் கலந்து கொள்கிறேன். இன்று முடியாது நாளை செல்வி அக்காவின் குறிப்பில் இருந்து சமைத்து விட்டுச் சொல்கிறேன்.

பபி.

மேலும் சில பதிவுகள்