ஓமு ரைஸ் (ஆம்லெட் ரோல்டு ஃப்ரைட் ரைஸ்)

தேதி: November 24, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இது ஒரு ஜப்பானிய வகை உணவு. தென்கொரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று. முதன் முதலாக ஜப்பானில் தான் தோன்றியது. கொரியா, ஜப்பானின் காலணி ஆதிக்கத்தில் இருந்ததால், கொரியாவிலும் அதிகமாக உண்ணப்படுகிறது.

 

வடித்த சாதம் - ஒரு கப்
குடைமிளகாய் – 1/4
வெங்காயம் – 1/4
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
வேக வைத்த மக்காச்சோளம் – ஒரு தேக்கரண்டி
தக்காளி ஸாஸ் – 4 தேக்கரண்டி
முட்டை - 2
உப்பு, எண்ணெய் – தாளிக்க மற்றும் ஆம்லெட் போட


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம், குடைமிளகாய் வதங்கியதும் அதனுடன் சாதம், மிளகுத் தூள் சேர்த்து கிளறி விடவும்.
அதன் பின்னர் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
பிறகு அதில் மக்காச்சோளத்தை சேர்த்து கலந்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல் அல்லது அகலமான தவாவை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அடித்து வைத்துள்ள முட்டையை அகலமான ஆம்லெட்டாக ஊற்றவும்.
இரண்டு நிமிடம் கழித்து ஆம்லெட் வெந்ததும் செய்து வைத்திருக்கும் ப்ரைட் ரைஸை ஆம்லெட்டின் நடுவில் வைக்கவும்.
பின்னர் ஆம்லெட்டின் இரண்டு பக்கங்களை உட்புறமாக படத்தில் உள்ளது போல் மடிக்கவும். ஓமு ரைஸ் தயார்.
பரிமாறும் தட்டினை ஓமு ரைஸின் மீது கவித்து வைக்கவும்.
தவாவினை தலைக்கீழாக கவிழ்த்து திருப்பி வைத்து ஓமுரைஸினை தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
பரிமாறும் தட்டில் ஓமுரைஸினை வைத்த பிறகு விருப்பத்திற்கு ஏற்றவாறு தக்காளி சாஸைக் கொண்டு அலங்கரிக்கவும். குழந்தைகளுக்கு பரிமாறும் போது சின்ன சின்ன கார்ட்டூன்ஸ் அல்லது ஏதேனும் எழுத்துக்களால் அலங்கரிக்கலாம்.
சுவையான வித்தியாசமான ஓமுரைஸ் தயார். இந்த வித்தியாசமான ஜப்பானிய உணவு குறிப்பினை அறுசுவை நேயர்களுடன் பகிர்ந்து கொண்டவர், கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துக் கொண்டிருக்கும் <b> செல்வி. இந்திரா </b> அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

இதில் பச்சை பட்டாணி, விரும்பிய காய்கறிகள் (முட்டைகோஸ், கேரட்) கூட சேர்த்து செய்யலாம். அசைவம் அதிகம் விரும்புவர்கள் சிக்கன், மட்டன், இவைகளில் ஏதாவது ஒன்றையும் வைத்து செய்யலாம். நிறைய செய்ய வேண்டுமெனில், நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் ஃப்ரைட் ரைஸை தயார் செய்து, 6 - 12 வரையுள்ள ஸ்டெப்பை திரும்ப செய்யவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

waav இந்திரா அருமை..நல்ல ஐடியாவாக இருக்கு.குழந்தைகள் விருப்புவார்கள்..அந்த அறுசுவை டாட் காம் ஐடியா அருமை.படங்கள் தெளிவாக உள்ளது

வித்தியாசமான ரெசிபி.சத்தானது கூட.neat presentation.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய்,
எப்படி இருக்கீங்க. எதுவா இருந்தாலும் முதலில் பார்த்து எண்ணத்தை சொல்வதில் உங்கல அடிச்சிக்க ஆளே இல்ல அருசுவையில. உங்கலுக்கு அடுத்து ஜலீலாக்கா அண்ட் ஆசியாக்கா. (நேரந்தானே எல்லாத்துக்கும் காரணம்!!!!!!)

இப்படிக்கு
இந்திரா

indira

இப்பதான் நினைச்சேன். வந்துடீங்க பாருங்க.

நன்றிக்கா உங்க கமெண்ட்ஸுக்கு.

இப்படிக்கு
இந்திரா

indira

நான் ரொம்ப சாதாரணம்,நிறைய சீனியர் இருக்காங்க.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் இந்திரா இப்போதான் இந்த ரெசிப்பி செய்து சாப்பிட்டேன்.எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.இனிமேல் அடிக்கடி செய்வேன்.தேங்ஸ்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய்,
செய்து, சுவைத்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி கவிசிவா அவர்களே.

இப்படிக்கு
இந்திரா

indira

ஓமூ ரைஸ் சூப்பர் இன்னைக்கே செய்யரேன்.

நன்றி இந்திரா அவர்களே.

நல்ல குறிப்பு இந்திரா,
முட்டைப்பொரியலும் சோறும் சாப்பிடாமல், இது கொஞ்சம் வித்தியாசமான விதமாக இருக்கிறது, விருந்தினருக்கு செய்து வைத்தால் நிட்சயம் கவரும். நேரமுள்ளபோது செய்துவிட்டுச் சொல்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரொம்ப அருமையா இருக்கு பார்க்க ஒரு கருத்து.. முகப்பில் அருசுவை.காம் என்ற படம் வருமாறு அமைக்க அட்மினை கேட்டுக்கொள்கிறேன்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய்,
தானு, அதிராக்கா, இலா,சுஹைனா அனைவருக்கும் வணக்கம். தங்களின் உற்சாகமுட்டும் கமெண்ட்சுக்கு மிக்க நன்றி.
கவிதாயினி சுஹைனா அவர்களே, மக்காசோளம் இல்லையெனில் பரவாயில்லை. இங்கு ப்ரொஸஸ்டு கார்ன் அதிகமா (நம்ம ஊர்ல பொரியல் மாதிரி)பயன்படுத்துகிறார்கள். கேனில் அடைத்து கிடைக்கிறது. கொஞ்சம் இனிப்பாகவும் இருக்கும் இது.
பச்ச பட்டாணி போட்டுகோங்க நல்லா இருக்கும்.அனேகமா ஹஜ்ஜில உங்களுக்கு இது கிடைக்கலாம். அங்க ட்ரை பன்னுங்க. பிறகு தமிழ்னாட்டுல வந்தும் ட்ரை பன்னுங்க. சோ யு குட் டிபரென்சியேட் த டேஸ்ட் அண்ட் ஐடியா ஃபார் வாட் டு ஆட். நன்றி

இப்படிக்கு
இந்திரா

indira

ஹாய் இந்திரா, உங்க ரெசிப்பி நல்ல ஐடியாவா பாக்கவும் சூப்பரா இருக்கே. அந்த பேர் ஐடியாவும் நல்லா இருக்கு. செஞ்சுப் பாக்கணும். அப்புறம் நீங்க கேட்ட ரமணிச்சந்திரன் லிங்க் எனக்கு தெரிஞ்சு SCRIBD, RAPIDSHARE,TECHSATISH,PKB மற்றும் சில இலங்கைத் தமிழ் வெப்சைட்னு 101+ நாவல் தேத்தி இருக்கேன். பாதி நாவல் இப்ப அங்கே அந்த லிங்குகளில் இல்லை. இப்ப இதெல்லாம் நான் உங்களுக்கு எப்படி அனுப்ப? எல்லாம் பெரிய பெரிய பைல். அட்டாச் செஞ்சு அனுப்பறது கஷ்டம். நான் எங்கும் போய் அப்லோட் பண்ணவும் நேரமில்லை. இந்த முறை இந்தியா போகும்போது யாராவது ஒரு பிரெண்டுக்கிட்ட சிடியில் போட்டு கொடுக்கப் பாக்கறேன். அவங்க மூலமா வேணா இந்தியா போறவங்க காப்பி பண்ணிக்கலாம். இதுதான் இப்போதைக்கு தோணுது. ஒரு நாள் என்னிடம் உள்ள நாவலின் லிஸ்டை (ஒரு டெக்ஸ்ட் பைலில் வெச்சிருக்கேன்) பதிவா போடறேன். தனிஷா உங்களுக்கும் தர்றேன்.

அன்புள்ள இந்திரா, நான் இன்று உங்கள் ரெசிப்பி செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. என் 4 வயது மகன் மிகவும் விரும்பி சாப்பிட்டார். நான் எனது வீட்டு தோட்டத்து குடமிளகாயில் செய்தேன், மிகவும் சுவையாக இருந்தது.நன்றி.
வாணி
always smile

இந்திரா அக்கா SUPER

இந்திரா அக்கா SUPER

வாவ் சூபர் ரொம்ப சிம்பிள் அன்ட் ஈசி.
டெகெரேட்டி வாகவும் இருக்கு. முட்டை தோசை மாதிரி ஊற்றி சாதத்த்தை பிரட்டை கொடுப்பதற்கும் இதற்கும் ரொம்ப வித்தியாசம் யாருமே இத செய்து கொடுத்தா லபக்குன்னு மூனு வாயில் போய் விடும் ஏன்னா அதில் கெட்சப் இருக்கே ஹா ஹா ஹி
ஜலீலா

Jaleelakamal

ஒமு ரைஸை செய்து, சுவைத்து பின்னுட்டம் தந்த ஆயிஷா, வாணி (நம்ம வீட்டு தோட்டத்து காய்கறிகளை வைத்து செய்து சாப்பிட்டா அதோட சந்தோஷத்துக்கு அளவே இல்ல) அவர்களுக்கும் மற்றும் தேவா(ரமணிசந்திரன் நாவல் பற்றி நேரம் கிடைக்கும் போது பேசலாம் என இருக்கிறேன்), ஜலீலா அவர்களின் பாராட்டுக்கும் நன்றி.

இப்படிக்கு
இந்திரா

indira

ஓமு ரைஸ் நல்லா இருந்தது,வழக்கமான ப்ரைடு ரைஸ் போலில்லாமல் வித்தியாசமாக இருந்த்து,என் மகள் விரும்பி சாப்பிட்டாள்.