சில உணவுப்பொருட்கள் அனைவராலும் ஒரு பெயரால் அழைக்கப்படுவதில்லை.அதனால்தானோ நெறய பின்னூட்டங்களில் அதுவென்றால் என்ன? இதுவென்றால் என்ன என்று கேள்விகள் வருகிறது.?
அவை எல்லாவற்றையும் இங்கே வந்து தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

ராகி மாவு
ஒன்றரை வருடங்களாக அருசுவை பார்த்து சமைக்கிறேன்.சில உணவுப்பொருட்கள் முன்பெல்லாம் இது என்ன பொருள் என்று தெரியாமல் அந்தக்குறிப்பை கைவிட்டு வேறு தேடுவேன்.இப்போ உறுப்பினராகி கேட்டுத்தெரிந்துவிட்டு சமைக்க முன்வந்திருக்கிறேன்.என்னைப்போல் இன்னும்பலர் இருக்கிறார்கல் என்று நினைக்கிறேன் எனவே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வோமா?
ராகி மாவு என்றால் என்ன?
சுரேஜினி
சுரேஜினி!!!
சுரேஜினி!!!
ராகி=கேழ்வரகு=கேப்பை-மில்லட்-பிங்கர் மில்லட்
படம் பாருங்க..
http://en.wikipedia.org/wiki/Ragi
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
சுரேஜினி!!! கேவுரு !!!
இன்னும் ஒரு அடிஷன். குரக்கன் என்றாலும் ராகி தான்.
ரியல் கேவுரு ( பாருங்க எப்படி எங்க ஊர்ல சொல்றது) பிரவுன் கலரில் இருக்கும் மாவாகியது ஒரு டபுள் கலர் மாதிரி இருக்கும். கேவுறு அரைபதுக்கு ஒரு ஒல்ட் ஷ்டயில் மாவு அரவை கல் இருக்கு. இன்னமும் எங்க அம்மா வீட்டில இருக்கு
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
இலா
ஓ .....இலா நம்ம குரக்கனா.அதுவா இது.ரொம்ப நன்றி இலா.இன்றுதான் முதல்முதலா இதன் செடியையும் பாத்தேன் உங்க புண்ணியத்துல.
சுரேஜினி
அப்படியா...
அப்படியா... நல்லது
எங்க ஊரில கேழ்வரகு/வரகு(வரவு)/சாமை எல்லாம் முந்திரி காட்டில் ஊடுபயிர் மாதிரி வைப்பார்கள். பார்த்து இருக்கேன்.. சாப்பிட்டும் இருக்கேன்... அப்ப எங்க அப்பா சொல்வார்.. நெல்லு சோறு என்பது ஒரு டெலிகசி மாதிரி.. இப்ப எல்லாம் பழசு எல்லாம் மறந்து போயி அவைஎல்லாம் டெலிகசி ஆகிட்டடு.
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
அதிரா.... இங்க வாங்க
அதிரா.... இங்க வாங்க. பாருங்க... இலா நல்ல புள்ளயாட்டும் இங்க விளக்கிட்டாங்க. :) எங்க ஊர்லயும் கேழ்வரகு'ன்னு தான் சொல்லுவோம். அப்போ அதிரா.... நான் சரியா தான் சொல்லி இருக்கேன். ஹிஹிஹீ.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுரேஜினி!!! முக்கியமான விஷயம்...
பல நாள் இந்த கேழ்வரகு/குரக்கன் மா இதில பண்டங்கள் சாப்பிடாமல் இருந்தா.. பார்த்து சாப்பிடுங்க. எனக்கு இது சூடு என்று அம்மா சொன்னார்கள். அப்படியே சாப்பிட்டாலும் மோர் கொஞ்சம் குடிங்க...
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
நன்றி இலா
தகவலுக்கு நன்றி இலா.இப்போதான் இதை சாப்பிட தொடங்கியிருக்கிறேன்.டாக்டர் என்னை உடம்புக்கு உஷ்ணம் தரும் உணவுகளையும் காரத்தையும் தவிர்க்கும்படி சொல்லி இருந்தார்.அதனால்ரொம்ப நன்றி.
சுரேஜினி
சுரேஜினி,
திரு்நெல்வேலி பக்கம் கேப்பை ,கேப்பை மாவு என்று சொல்வோம்.ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுக்கு பல வழக்கச்சொல் .
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
தோழிகளே,
தோழிகளே, தனியா தூள் என்றால் என்ன?
எல்லாம் நன்மைக்கே...