கொத்தமல்லி கோழி

தேதி: November 25, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கோழி - எலும்பில்லாதது 1/2 கிலோ

அரைக்க:

1. கொத்தமல்லி இலை - 1/2 கப்
2. பச்சை மிளகாய் - 2
3. மிளகு - 10
4. தயிர் - 1/4 கப்
5. வெங்காயம் - 1/2
6. பூண்டு - 4 பல்
7. இஞ்சி - 1/2 இன்ச்
8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
9. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
10. உப்பு


 

அரைக்க வேண்டிய அனைத்தையும் தண்ணீர் இல்லாமல் அரைத்து கோழி துண்டுகளுடன் கலந்து இரவு முழுதும் அல்லது குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது ஃபிரிட்ஜ்'ல் ஊற வைக்கவும்.
ஒரு நான் -ஸ்டிக் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும், ஊறிய கோழி துண்டுகளை கலவையுடன் சேர்த்து கொட்டி மூடி போட்டு வேக விடவும். (தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. ஆனால் அடிக்கடி திரந்து பார்த்து கிளரி விடவும்.)
சுவையான "Green Coriander Chicken" தயார்.


மேலும் சில குறிப்புகள்