கத்திரிக்காய் அரைச்ச குழம்பு

தேதி: November 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

 

1. கத்திரிக்காய் - 3 (நறுக்கியது)
2. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
3. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
4. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
5. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
6. பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
9. கருவேப்பிலை, கொத்தமல்லி
10. உப்பு

வறுத்து அரைக்க:

1. மிளகாய் வற்றல் - 3
2. மிளகு - 1 தேக்கரண்டி
3. தனியா - 1 தேக்கரண்டி
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. சோம்பு - 1/2 தேக்கரண்டி
6. உளுந்து + கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
7. பட்டை
8. லவங்கம் - 2
9. தேங்காய் - 5 தேக்கரண்டி


 

வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு வறுத்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். (எல்லாம் வறுத்த பின் தேங்காய் சேர்த்து அரைக்கவும்).
பாத்திரத்தில் எண்ணெய் 1 குழிக்கரண்டி விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கத்திரிக்காய் வதங்கிய பின், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தேவையான தண்ணீர், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.


குளிர், மழை நேரத்தில் காரசாரமாக சூடான சாதத்தில் சாப்பிட அருமையான குழம்பு. முட்டை பொரியல் கூட சேருங்க.... நல்ல பொருத்தம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

i prepared last night. really this dish is nice. this is the first time i am giving comment. nice receipe

I have tried this receipe today. Really,It was very super and tasty.

Keep it up. Good Luck

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

மிக்க நன்றி. வருஷத்துக்கு மேல இதை பார்க்காம இருந்திருக்கேன் ;( ரொம்ப சாரிங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. ரொம்ப தாமதமா பார்த்து பதில் போடுறேன். கோவிக்காதீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா, நேற்று கத்திரிக்காய் அரைச்ச குழம்பு செய்தேன். நன்றாக இருந்தது :)

நீங்க குளிர், மழை நேரத்தில் செய்ய சொன்னதை நான் சம்மர் ஸ்டார்ட் ஆனதற்காக செய்தேன் :)

நன்றி..

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நான் காரம் அதிகம் என்பதால் அப்படி சொன்னேன் ;) ரொம்ப மகிழ்ச்சி பிந்து... உங்களுக்கு பிடிச்சா சந்தோஷம் தான். நன்றி பிந்து.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா நலமாக இருக்கீங்களா? உங்களுடைய இந்த கத்தரிக்காய் அரைச்ச குழம்பு மிகச் சுவையாக இருந்தது. கணவர்,மகன் நன்றாக இருந்தது எனகூறினார்கள். வெங்காய தக்காளி காரச் சட்னி, இஞ்சி கிரீன் டீ,ஆரஞ்சு டிலைட்,செய்துபார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது.இந்த குழம்பு, பருப்புக்கீரை படம் எடுத்துள்ளேன். அட்மினுக்கு அனுப்பிவைக்கிறேன். ரெம்ப நன்றி. அன்புடன் அம்முலு.

நான் நலம் அம்முலு. மிக்க நன்றி. படம் வேரா?! கலக்குங்க. அனுப்புங்க பார்க்க நானும் ஆசையா இருக்கேன். :) நன்றி அம்முலு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா

இன்னைக்கு இந்த recipe try செய்தேன்.பார்த்தால் நன்றாக வந்த மாதிரி தான் இருந்தது(எனக்கு இருக்கும் சமையல் அனுபவத்தில் பார்த்தாலே தெரிஞ்சிடுமே நல்லா இருக்குமா இல்லையான்னு.Ha ha).நன்றி.

எனக்கு Brinjal அலர்ஜி என்பதால் நான் Taste பார்க்கவில்லை.
Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மீண்டுமா?!!! உத்ரா... அநியாயம் பண்றீங்க. எப்படியோ செஞ்சுட்டீங்க. இனி சாப்பிடுறவங்க பாடு. நமகென்ன... :( ரொம்ப ரொம்ப நன்றி உத்ரா.... (சும்மா விளையாட்ட தான் சொல்றேன் நீங்க கோசிக்க மாட்டீங்கன்னு. ;) சரியோ??)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

I prepared your kathrikai araicha kuzhambu today. it came very well. my hubby enjoyed it much. thanks a lot for the recipe..

keep posting many more recipes like this..

Have a good day

புதிதா அறுசுவைக்கு நீங்கள்? இது வரை உங்கள் பதிவுகள் பார்த்த நினைவில்லை அதான் கேடேன். :) மிக்க நன்றி பிந்துபாலாஜி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று மதியம் இந்த ரெஸிப்பி செய்தேன். ரொம்ப சூப்பரா இருந்தது. குறிப்பிற்கு நன்றிப்பா!

மிக்க நன்றி சாய் கீதா. :) காரமா இருந்ததா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா,
நலமா? நேற்று முன் தினம் இந்த குழம்பு செய்தேன். பட்டை, கிராம்பு வாசம் அவ்வளவாக பிடிக்காது என்பதால் சேர்க்கவில்லை. சுவை ரொம்ப நன்றாக இருந்தது. மீதி இரவு தோசைக்கும் சாப்பிட்டோம். அதற்குமே பொருத்தமாக இருந்தது. நல்லதொரு குறிப்புக்கு பாராட்டுக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வேலை எல்லாம் முடிந்ததா? மிக்க நன்றி செல்வி. :) உங்க பின்னூட்டம் பார்த்ததும் மகிழ்ச்சியா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
கத்த்ரிக்காய் அரைத்த குழம்பு ரொம்ப நல்லாயிருந்தது. நான் முன்னாடியே சொன்னமாதிரி உங்க ரெசிபீஸ் என் சித்தி சமையல் போலவே இருக்கு. அவங்களும் அரைத்த குழம்பு இப்படிதாஅன் செய்வாங்க. என்னிடம் சைனீஸ் கத்த்ரிக்காய்தான் இருந்தது. ஆனாலும் குழம்பு சுவை சூப்பர்.
அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

ஹாய் வனிதா,
நேற்று முன் தினம் இந்த குழம்பு செய்தேன். சுவை ரொம்ப நன்றாக இருந்தது. மீதி இருந்ததை நேற்று உங்க குறிப்பான தேங்காய்பால் சாதத்துக்கு போட்டுக்கொண்டு சாப்பிட்டோம். ரொம்ப சுவையான ஒரு குறிப்புக்கு நன்றி வனிதா.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி கிருத்திகா. சித்தி எந்த ஊர்? எனக்கு எல்லாம் தங்கை சொல்லி தருவது. நிறைய நெல்லை, கேரளா, திருவண்ணாமலை சமையலா இருக்கும்.

மிக்க நன்றி சுஸ்ரீ. பிடிச்சிருந்தா சந்தோஷம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

திருமதி. அம்முலு அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த அரைச்ச குழம்பின் படம்

<img src="files/pictures/aa94.jpg" alt="picture" />

மிக்க நன்றி அண்ணா. மிக்க நன்றி அம்முலு. நிஜம்மா நான் செய்வதை விட மிக அழகா இருக்கு....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா