பட்டிமன்றம் 8

மதிப்புக்குரிய ஸாதிகா அக்காவிற்கு புதிய உறவாகிய என்னையும் நடுவராக்கியதற்கு என்நன்றிகள் அறுசுவை தோழிகள் அனைவரும் தெரிவு செய்து எடுத்தாற்போல் மிகவும் பண்பட்டவர்கள் என்ற உண்மைக்கமைய
என் அன்பு சகோதரிகளே உங்கள் அன்பையும் ஆதரவையும் மட்டுமே நம்பி நடுவர் பதவியை
ஏற்றுக்கொள்கிறேன்.
பழைய நடுவர் ஸாதிகா அக்காவால் கொடுக்கப்பட்ட அழகான தலைப்பு இதோ.

<<வாடகைத்தாய்?நம் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒத்து வருமா?வராதா?>>

வாடகைத்தாய் என்பது நீங்கள் எல்லோரும் அறிந்ததே.கணவன்
மனைவி இருவரின் உயிரணு + கருமுட்டையை மூண்றாவது நபரான இன்னுமொரு தாயின்
வயிற்றுக்குள் செலுத்தி குழ்ந்தை பெற்றுக்கொள்வது.

1978 oct 03அன்று துர்கா என்கிற "கானுப்பிரியா' என்ற அந்த சோதனைக்
குழாய் [அதாவது வாடகைத்தாய் }பெண்ணின் பிறப்புக்கு விஞ்ஞான ரீதியாக வழிவகுத்த
டாக்டர் முகோபாத்யாவின் இந்தச் சாதனை அங்கீகரிக்கப்படவில்லை
என்பது மட்டுமல்ல; அவர் விரக்தியில் தற்கொலை செய்து
கொண்டு இறந்து விட்டார்.அவ்வளவு சிக்கல்கள் நிறைந்த விடயம் இது.

30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த அரிய விஞ்ஞானசாதனைகள் அப்போதிருந்தே பல விவாதங்களை கிளப்பின. இன்று அது நடைமுறையில் மாபெரும்் விஷ்வரூபமெடுத்து நன்மைகளையும் தீமைகளையும் தந்து கொண்டிருக்கும் சம்பவங்கள்
நிறையவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.தொடரும் இந்த வாடகைத்தாய் முறை நமது கலாச்சாரத்துக்கு ஒத்து வருமா வராதா என்பது இன்னமும் தெளிவு படுத்தப்படாமலட்நம்மிடையே உலவுகிறது.
இது நம்முடைய சமூகம் எதிகாலத்தில் நம் பிள்ளைகளான எங்கள் சந்ததியினர்
எங்கள் கலாச்சாரத்தயே பின்பற்றுவார்கள்.

ஆதலினால் பெண்கள் அதுவும் படித்த அனுபவசாலிகளான உலக விபரங்கள் தெரிந்த
வாதத்திறமை கொண்ட வலிய மனங்களைக்கொண்ட ஈகோ எதுவுமின்றி சகஜமாக எல்லோருடனும் பழ்கத்தெரிந்த
இந்த அறுசுவை குடும்பபெண்கள் இடையே இந்த விவாதம் நடத்த வேண்டிய ஒன்றுதான்.

சகோதரிகளே திணறடிக்கும் உங்கள் பலம் எல்லோருக்கும் தெரியும்.உங்கள் விவாதங்களைப்பார்த்து
வியந்து போகும்படி வழ்க்கம் போல வந்து வாதாடுங்கள்.
உங்கள் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்

டுமீல் ஸ்ராட்

///வாடகைத்தாய்?நம் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒத்து வருமா?வராதா?///

நடுவர் அவர்ககளுக்கும் அனைத்து தோழிகளுக்கும் வணக்கம்.
வாடகைத் தாய்...எந்த கலாச்சார சீரழிவும் இல்லை என்பதே என்வாதம்.

இயற்கையாக குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு எப்படி iui,ivf, போன்ற
முறைகளில் கருத்தரிக்க வைக்கிறார்களோ அது போல் ஒரு குழந்தையை தாங்கி
வளர்க்க முடியாத கருப்பை கொண்ட அல்லது கருப்பையே இல்லாத பெண்ணுக்கு
இன்னொரு பெண்ணின் உதவியோடு குழந்தைச்செல்வத்தை கொடுப்பதுதான் வாடகைத்தாய் முறை.
இதில் கணவன் மனைவி இருவரின் உயிரணுக்களும்(விந்துவும் முட்டையும்) இணைக்கப் பட்டு இன்னொரு
ஆரோக்கியமான பெண்ணின் கருவறையில் வைத்து வளர்க்கப் பட்டு இந்த பூமியில் அந்த உயிர் ஜனிக்கிறது.இதில் எங்கே
வருகிறது கலாச்சார சீரழிவு?மனைவியால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது என்று இன்னொரு திருமணம்
செய்யும் கேடுகெட்ட முறையை விட இது உன்னதமானது.

நாம் இறந்த பிறகு கொடுக்கும் கண்தானம்,உடல் உறுப்புகள்தானம் இவற்றைப் பெருமையாக பேசுகிறோம்.
ஆனால் உயிரோடு இருக்கும் போதே ஒரு பெண்,குழந்தையை கருவறையில் சுமந்து பெற்றுக் கொள்ள முடியாத இன்னொரு பெண்ணின் குழந்தைக்கு
தன் கருவறையில் இடம் அளிக்கிறாள் என்றால் அது போற்றப்
படவேண்டிய விஷயமே தவிர அதனால் கலாச்சாரமே கெட்டுவிட்டது என்று தூற்றக்கூடாது.

வாடகை தாய் என்பது ஏதோ சமீப காலத்தில்தான் ஏற்பட்டது என எண்ண வேண்டாம்.
நமது புராணங்களிலேயே சொல்லப் பட்டிருக்கிறது.கண்ணனின் பிறப்பு பற்றிதான் சொல்கிறேன்.
தேவகியின் வயிற்றில் ஜனித்த கருவினை அப்படியே யசோதையின் வயிற்றில் வைத்து
வளர்ந்துதான் கண்ணன் பிறந்ததாக புராணம் சொல்கிறது.யசோதை வளப்புத் தாய் என சொல்லப்
பட்டாலும் உண்மையில் இன்றைய மொழியில் அவள் வாடகைத் தாய்தான்.அது கற்பனையா அல்லது
உண்மையா என்பது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

வாடகைத்தாய் முறை என்பது தங்கள் கருவறையில் பாதுகாத்து தங்கள் குழந்தையை பெற்றெடுக்க முடியாத எத்தனையோ
பெண்களுக்கு வரப் பிரசாதம்.தங்களுக்கு ஒரு குழந்தை இந்த ஜென்மத்தில் கிடைக்காதோ என்று ஏங்கும் எத்தனையோ
தம்பதிகளுக்கு ஒரு விடிவெள்ளிதான் இந்த வாடகைத்தாய்.

வாடகைத்தாயாக இருக்கும் அந்த பெண்ணின் பரந்த குணத்தை சேவை மனப்பான்மையை எத்தனை பாராட்டினாலும்
போதாது.ஆனால் எல்லாவற்றையும் ஊனக் கண் கொண்டே பார்க்கும் இந்த சமுதாயம் இதையும் அய்யோ!
கலாச்சார சீரழிவு என்று கூக்குரலிடும்.இப்படிப் பட்ட ஊனக் கண் கொண்டவர்களால்தான் கலாச்சாரம் சீரழியுமே தவிர
வாடகைத்தாய் முறையால் அல்ல.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி.மீண்டும் வருவேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது என்று இன்னொரு திருமணம்
செய்யும் கேடுகெட்ட முறையை விட இது உன்னதமானது.//என்றும் இது விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்கு முன்னரே புராணங்களால் வெளிப்படுத்தப்பட்ட விடயம் என்றும் முடிவாக வடகைத்தாய் முறையில் எந்தக்கலாச்சார கேடும் கிடயாது என்று வலியுறுத்தி அழகாக வாதாடியிருக்கிறார் சகோதரி கவிசிவா.

வருக எதிரணியினரே.எங்கே உங்கள் எதிர் வாதம்.??
சுரேஜினி

முன்னுரையே பிரமாதமாக முழங்கி விட்டீர்கள்.அதற்கொரு சபாஷ்.தொடருங்கள் பட்டிமன்றத்தை.உங்கள் அழகிய பேச்சு ஸ்னேகிதிகளை உற்சாகப்படுத்தட்டும்.நான் நாளைக்கு எனது வாதத்தை பதிவு செய்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அப்பாடா ஸாதி்கா அக்காவின் குரல் கேட்டதும் மனம் குளிர்ச்சியா இருக்கு.ரொம்ப நன்றி ஸாதிகா அக்கா.

சுரேஜினி

நடுவர் பதவியில் அலங்கரித்துக் கொண்டிருக்கும் நடுவர் திருமதி சுரேஜினி அவர்களுக்கு வணக்கம், சமுதாயச் சிந்தனைக் கொண்ட ஆரோக்கியமான நல்ல தலைப்பு இந்த முறையும் இடம் பெற்றுள்ளது.அதற்கு திருமதி ஸாதிகாவிற்கு என் முதற்கண் நன்றி. இந்த பட்டி மன்றத்தில் "வாடகைத்தாய் நம் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒத்து வரும்", என்று திருமதி கவிசிவாவின் அணிக்கு சார்பாக வாதாடப் போகின்றேன்,எதிர் அணியினரும் வந்தப் பிறகு எனது வாதத்தை ஆரம்பிக்கின்றேன்,வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.

வாழ்த்துக்கள்,வணக்கம்.
எனக்கு பிரமாதமாக எல்லாம் வாதாட தெரியாது.ஆனால் சில பதிவுகள் போடுவேன் எப்போதும்.இன்னும் நான் பங்கு கொள்ளும் அணியை முடிவு செய்யவில்லை.எனக்கு தெரிந்ததை இடை இடையே கதைக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நடுவர் அவர்களே....
நானும் கவிசிவா, மனோஹரி அக்கா கட்சிதான்... வாடகைத்தாய் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே. பின்னர் வருவேன்...... அதுவரை இந்தாங்கோ குளிருக்கு நல்லது சூடான ரீ..... குடித்துக்கொண்டிருங்கோ....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அறுசுவையின் பெரியவர்கள் நீங்களெல்லாம் நடுவர் நடுவர் என்றும்போது சங்கடமாகத்தான் இருக்கிறது.ஆனாலும் உங்கள் உள்ளங்கள் வெள்ளை
ஆகையால் எனக்கு பயமில்லை.

மனோகரி அக்கா உண்மைதான் இது மிக நல்ல தலைப்பு.கட்டாயமாக பெண்கள் தெளிவு பெறவும் விழிப்புப்பெறவும் இரு அணியினரின் கருத்துக்கள் உதவும்.ஆகவே நீங்கள் வந்து வாதாடுங்கள்.

சுரேஜினி

அஸியா அக்கா கடந்த பட்டிமன்றங்களில் உங்களின் கருத்துக்களை நாங்கள் மிகவும் ரசித்திருக்கிறோம்.ஆகவே இதிலும் தைரியமாக வந்து வாதாடுங்கள்.இது சம்மந்தமாக நிறைய சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அண்மையில் ஜப்பான் தம்பதியும் இந்திய வாடகைத்தாயும் பற்றி எல்லாம் அறிந்திருப்பீர்கள்.போட்டுத்தாக்குங்கள்.

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்