ஈ தொல்லைக்கு

அறுசுவை தோழிகளே ஈ தொல்லைக்கு ஏதாவது வழி இருக்கா, கொஞ்சம் உதவி செய்யுங்களேன்,pls pls

SIVAKAVI
டியர் விஜி!
முதலில் உங்கள் வலது கையை தோள்பட்டைக்கு நேராக நீட்டவும். பிறகு இடது கையையும் நீட்டவும்.ஒரு ஈயின் பக்கதில் சென்று டப் என்று கையை தட்டவும். ஈ பறந்து விடும். இப்படியாக எல்லா ஈக்களும் பறந்ததும் கதவு, ஜன்னல் எல்லாம் மூடி விடவும்..

ஆ.. அடிக்காதீங்க.சும்மானாச்சுக்கும் கலாய்ச்சேங்க. தப்பா எடுத்துக்காதீங்க.
கருவேப்பிலையை கசக்கி தண்ணீரில் கலந்து தெளியுங்கள். பலன் கிட்டும்
நன்றி.

anbe sivam

தண்ணீரில் டெட்டால் அல்லது தண்ணீரில் உப்பு கலந்து தெளிச்சால் ஈ போய்டும் டிரை செய்து பாருங்க!!

kavitha1911 ஈக்களை விரட்ட ஒரு எளிய வழி ந்ன தலைப்பை பார்த்ததும் நான் ஆவலாக பார்த்தேன் புஷ் ந்னு போச்சு ஆனாலும் வாய் விட்டு சிரித்தென் :)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் கவிதா என்ன்ப்பா இது ஈவிரட்ட வழி கேட்டா கமெடி பண்றீங்க. ஆனாலும் ஓரு டிப்ஸ் தந்ததால் தப்பிச்சீங்க.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

விஜி ஈ மொய்க்கும் இடத்தில் கற்பூரத்தை பொடி செய்து தூவி விடவும் nisha

நிஷா

SIVAKAVI
நல்ல வேளை கடைசியில் ஒரு குறிப்பு கொடுத்ததால் பிழைத்தேன்.இல்லன்னா எல்லாரும் சேர்ந்து மொத்தியிருப்பீங்க போல? இங்க தானேங்க இப்படி எல்லாம் பேச முடியும்? பேசலாம்ல?

anbe sivam

தாராளமாக பேசலாம் வாங்கோ!!!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அச்சோ, இங்கே பாருங்கப்பா!!கவிக்கு எவ்ளோ அறிவு!!(கவி நேர்ல மட்டும் கிடைச்சீங்க,நற..நற..நற..,)jst kidding kavi..
ஈக்களை விரட்ட ஒரு எளிய வழின்னு தலைப்பை பார்த்ததும் நானும் ஆவலாக பார்த்தேன்.ஆஹா, நம்ம பிரச்சனைக்கு தீர்வு கிடைச்சிடுச்சேனு, பார்த்தா புஸ்ன்னு போச்சு.நல்லா சிரிச்சேன் :-)
கவி தாராளமா பேசலாம்,வாங்க பழகலாம்!!

ஆனா கவி இங்கே கருவேப்பிலை கெடைக்கறது கஷ்டம்,any how kavi, thanks for ur immediate and sweet response.
மர்ழியா , நீங்க சொன்னது போல முயற்சி செய்து பார்த்துட்டு சொல்றேன்.
அச்சோ நிஷா,கற்பூரமும் இங்கே கிடைக்காதே.(எனக்கு மட்டும் ஏன் sir இப்படி எல்லாம்
நடக்குது:-( )
அன்புடன்,
விஜி

ஈ என்று எதைச்சொல்லுவீர்கள்.கொசுவையா, இலையான் யா எறும்பையா அல்லது தேனீயா சொல்லுங்கோ ப்ளீஸ்?

சுரேஜினி

SIVAKAVI
விஜி என் அறிவு பொங்கி வழிஞ்சதில தான் சென்னையே மிதக்குது தெரியுமா?ஹி ..ஹி.

anbe sivam

SIVAKAVI
ஈயைத்தான் ஈ ந்னு சொல்லுவோம்.
அய்யோ
housefly தெரியுமா? அதுதாங்க ஈ

anbe sivam

மேலும் சில பதிவுகள்